Published:Updated:

`` `செமயா இருக்குயா... சூப்பரா வரும்'னு சொன்னேன்"- `என்.ஜி.கே' பற்றி யுவன் ஷங்கர் ராஜா

உ. சுதர்சன் காந்தி.
`` `செமயா இருக்குயா... சூப்பரா வரும்'னு சொன்னேன்"- `என்.ஜி.கே' பற்றி யுவன் ஷங்கர் ராஜா
`` `செமயா இருக்குயா... சூப்பரா வரும்'னு சொன்னேன்"- `என்.ஜி.கே' பற்றி யுவன் ஷங்கர் ராஜா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் படம், `என்ஜிகே'. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியிட்டுக்கு முன்பாக இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா ஆகியோர் ட்விட்டர் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது பேசியவர்கள், ``இந்தப் படத்தில் சூர்யா - ரகுல் ப்ரீத்சிங்குக்கும் `அன்பே' என்ற பாடல் உள்ளது. அந்தப் பாடல்தான் எனக்கு, யுவன், சூர்யானு எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாடல். இதை சித் ஶ்ரீராம் - ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர்" என்று கூறியுள்ளார், இயக்குநர் செல்வராகவன். 

`இந்தப் படத்தின் கதையை செல்வராகவன் உங்களிடம் சொன்னபோது, உங்களின் ரியாக்‌ஷன் என்ன?' என்று யுவனிடம் கேட்ட கேள்விக்கு, ``அவர் எப்போ கதை சொன்னாலும் என்னுடைய ரியாக்‌ஷன் ஆச்சர்யமாதான் இருக்கும். இந்த முறை, `செமயா இருக்குயா... சூப்பரா வரும்'னு சொன்னேன். `புதுப்பேட்டை' போலவே இந்தப் படத்திற்கும் சில எபிக் காட்சிகள் இருக்கும் எனவும் செல்வராகவன் கூறியிருந்தார். தீம் மியூசிக் பற்றிய கேள்விக்கு பதிலளித்த யுவன், ``நான் இன்னும் படத்தை முழுசா பார்க்கலை. ஒரு பாதிதான் பார்த்திருக்கேன். மூன்று தீம் மியூசிக் இருக்கும்" என்றார்.    
 

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan