Published:Updated:

``வசதியான ஃபேமிலி, ஆனால் அப்பாவை நம்பி இருக்கிறார்...” ஸ்ருதிஹாசனின் லவ் `பிரேக்-அப்’ பின்னணி

``வசதியான ஃபேமிலி, ஆனால் அப்பாவை நம்பி இருக்கிறார்...” ஸ்ருதிஹாசனின் லவ் `பிரேக்-அப்’ பின்னணி
News
``வசதியான ஃபேமிலி, ஆனால் அப்பாவை நம்பி இருக்கிறார்...” ஸ்ருதிஹாசனின் லவ் `பிரேக்-அப்’ பின்னணி

ஸ்ருதிஹாசன் - மைக்கேல் கார்சேல் பிரேக்-அப் பிற்கான நிஜக் காரணங்கள்.

2017-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுடன் வெளிநாட்டு இளைஞர் ஒருவரும் வந்திருந்தார். வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் வந்த இளைஞரையும் பட்டுப் புடவையில் வந்திருந்த ஸ்ருதியையும் பார்ப்பவர்கள், `ஏதோ விஷயம் இருக்கு’ என்று பேசிக்கொண்டனர். `மைக்கேல் கார்சேல் என்ற அந்த இளைஞரும் ஸ்ருதியும் காதலிக்கிறார்கள்’ என்ற விஷயம் பிறகு தெரியவந்தது.

இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழிப் படங்களிலும் கமிட் ஆகாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். `மைக்கேல் கார்சேலை திருமணம் செய்துகொள்ள உள்ளதால்தான் சினிமாவிலிருந்து ஸ்ருதி விலகி இருக்கிறார்' என்று பேசிவந்தனர். இந்த நிலையில், இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கமிட்டான ஸ்ருதி கடந்த ஒரு வாரமாக அந்தப் பட ஷூட்டிங்கில் கலந்து நடித்துவருகிறார். இந்தப் புதுப்படச் செய்தி வந்ததுமே, `ஸ்ருதியின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?’ என்று சினிமாவில் கிசுகிசுத்தனர். 

இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மைக்கேல் தன் ட்விட்டர் பக்கத்தில், ஸ்ருதிஹாசன் உடனான லவ் பிரேக்-அப்பை பற்றி நாசுக்காகத் தெரிவித்திருந்தார். `இந்த வாழ்க்கை எங்களை எதிரெதிர் துருவங்களில் தற்போது நிறுத்தியிருக்கிறது. இப்போது எங்களை எதிரெதிராக தனித்தனி திசைகளில் பயணிக்கச் சொல்கிறது. ஆனாலும் இந்த இளம்பெண் இனி என் வாழ்வின் மிகச்சிறந்த நண்பராக இருப்பார்’ என்ற ட்வீட்டுடன் இன்ஸ்டாகிராமில் ஸ்ருதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்திருந்தார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ரெண்டு வருஷத்துக்கு முன் நடந்த ஒரு கல்யாணத்துக்கெல்லாம்கூட பொண்ணு மாப்ள மாதிரி ஒண்ணாவே வந்தாங்களே, இடையில என்னதான் ஆச்சு?’ - தமிழ் சினிமா வட்டாரத்தில் `ஸ்ருதிஹாசன் – மைக்கேல் கார்சேல் இருவரின் லவ் பிரேக்-அப் பற்றி தற்போது இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். இருவருக்கும் என்னதான் பிரச்னை என்று விசாரித்தோம். 

ஸ்ருதி-மைக்கேல் இருவரின் பொது நண்பர்கள் சிலரிடம் பேசினோம். காதல் பிரிவுக்கு இதுதான் காரணம் என அவர்கள் சொன்ன தகவல்கள் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்...

``மைக்கேல் பெற்றோரின் பூர்வீகம் பிரான்ஸ். பிறகு அவங்க குடும்பம் லண்டனில் செட்டிலானது. மைக்கேல் சில காலம் பிரிட்டன் ஆர்மியில் இருந்தார். தியேட்டர் ஆர்ட், மாடலிங் மீதான ஈர்ப்பில் ஆர்மி வேலையைத் துறந்தார். லண்டனில் வைத்தே ஸ்ருதிக்கு அறிமுகமானார். இசை, நடிப்பு போன்ற விஷயங்கள் இருவரையும் இணைக்க, நட்பு காதலாக மாறியது. தன் அப்பா கமல்ஹாசன் லண்டன் வந்த ஒரு நாளில் மைக்கேலை அவருடன் சந்திக்க வைத்தார் ஸ்ருதி. `காதலுக்குச் சம்மதம் வாங்கவே அந்தச் சந்திப்பு’ என மீடியாவும் எழுத, பொருட்படுத்தாமல், லண்டன், மும்பை என பொது இடங்களில் தலைகாட்டத் தொடங்கியது இந்த ஜோடி. அப்படியே மும்பையில் சரிகாவையும் சந்தித்தார் மைக்கேல்.

தொடர்ந்து 2017-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் திருமண நிகழ்ச்சியில் பட்டு வேஷ்டி சேலையில் பொண்ணு மாப்பிள்ளை போலவே இருவரும் கலந்து கொண்டனர்” என்று இருவரும் ஒருவருக்கொருவர் எப்படி அறிமுகமாயினர் என்பது குறித்து விளக்கியவர்கள், பிரிவுக்கான காரணம் குறித்தும் அடுக்குகிறார்கள். 

``ராணுவத்தை விட்டு வந்த மைக்கேலுக்கு மியூசிக், மாடலிங், நடிப்பு போன்ற விஷயங்கள் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கலை. அது ஸ்ருதியை ரொம்பவே அப்செட்டுக்கு உள்ளாக்கியது. தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள தனக்கே லண்டனில் சொந்த வீடு இருக்கும்போது, மைக்கேல் எந்தவொரு தேவைக்கும் தன் பெற்றோரையோ அல்லது தன்னையோ சார்ந்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

மைக்கேலின் பெற்றோர் வசதியானவர்கள்தான். ஆனாலும் மைக்கேல் தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று ஸ்ருதி ஆசைப்படுகிறார். ஆனால் அது நடக்கவில்லை. இருவருக்குமான இந்த விவாதம் போகப்போக கருத்துவேறுபாடாக மாறியது. அதனாலேயே வேற வழியில்லாமல் மைக்கேலிடம் பிரேக்-அப் முடிவு குறித்துப் பேசியுள்ளார் ஸ்ருதி.

சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலுக்கு முன்பேயே கமலிடமும் தன் முடிவை ஸ்ருதி சொல்லியுள்ளார். அதுக்கு கமல், `எதுக்கும் இன்னொரு முறை யோசி’ என்றாராம். ஆனாலும் ஸ்ருதி தன் முடிவில் உறுதியாகவே இருந்துள்ளார்” என்கிறவர்கள் இந்த பிரேக்அப் நடக்க முக்கியமான காரணமாக இன்னொன்றையும் சொல்கிறார்கள்.

``கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சீடராக சமீபத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் மைக்கேல். அதில் ஸ்ருதிக்கு சிறிதும் உடன்பாடில்லை’ என்பதுதான் அது.”

இதுகுறித்து தன் மௌனம் கலைப்பாரா ஸ்ருதி?