Published:Updated:

`பெரிய மகிழ்ச்சி!' - தோனியைச் சந்தித்த கடாரம் கொண்டான் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா

`பெரிய மகிழ்ச்சி!' - தோனியைச் சந்தித்த கடாரம் கொண்டான் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா
`பெரிய மகிழ்ச்சி!' - தோனியைச் சந்தித்த கடாரம் கொண்டான் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா


`தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா அடுத்து இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் `கடாரம் கொண்டான்'. கமல் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் மே 1 ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. வெளியாக இருக்கும் சிங்கிள் ட்ராக்கை ஸ்ருதி ஹாசன் மற்றும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சபீர் இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர். ஸ்ருதி பிஸியாக இருந்ததால் அவருடைய குரலை மும்பைக்குச் சென்று ரெக்காடு செய்துவிட்டு ஜிப்ரான் இசைக்குழு திரும்பியுள்ளது. இந்நிலையில் ராஜேஷ் எம் செல்வா இந்தியன் அணியின் கிரிக்கெட் வீரர் தோனியை இன்று நேரில் சந்தித்து இருக்கிறார். இதுகுறித்தும் ராஜேஷிடம் கேட்டபோது, 

`நான் தோனியின் தீவிர ரசிகன். அவரை இதற்கு முன்புவரை சந்தித்தது இல்லை. என்னோட நண்பர் அவருடன் விளம்பரப் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். அதனால், தோனியைச் சந்திக்கும் வாய்ப்பை நண்பர் ஏற்படுத்திக்கொடுத்தார். சென்னையில் அவரைச் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி'' என்று சொல்லி முடித்தார் ராஜேஷ் எம் செல்வா.