Published:Updated:

`பேபி பைக்கர் அரின்!' - தன் மகள் பற்றி அசின் பெருமிதம்

வே.கிருஷ்ணவேணி
`பேபி பைக்கர் அரின்!' -  தன் மகள் பற்றி அசின் பெருமிதம்
`பேபி பைக்கர் அரின்!' - தன் மகள் பற்றி அசின் பெருமிதம்
`பேபி பைக்கர் அரின்!' -  தன் மகள் பற்றி அசின் பெருமிதம்

'எம்.குமரன்'', 'போக்கிரி', 'கஜினி' போன்ற படங்கள் வாயிலாக தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை அசின். 'கஜினி' படம் அவரின் கெரியரில் தவிர்க்க முடியாத படமாக அமைந்திருந்தது. இப்படி, தமிழ், தெலுங்கு என 2000ம் ஆண்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அசின். அதன் பிறகு, மைக்ரோமேக்ஸ் உரிமையாளர் ராகுல் சர்மாவை 2016 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார் அசின். 2017ம் ஆண்டு அக்டோபரில் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தையின் பெயர் அரின்.

`பேபி பைக்கர் அரின்!' -  தன் மகள் பற்றி அசின் பெருமிதம்

அரினின் முதல் பிறந்தநாளை கடந்த வருடம் கோலாகலமாகக் கொண்டாடித் தீர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

`பேபி பைக்கர் அரின்!' -  தன் மகள் பற்றி அசின் பெருமிதம்

தற்போது அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரின் படத்தை அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். நேற்று, அரினின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் அரின் புது பைக்கில் வருவது போல பதிவிட்டுள்ளார். அந்தைப் பதிவில் '18 மாத அரின், பேபி பைக்கர்..' எனப் புகழ்ந்திருக்கிறார் அசின்.