Published:Updated:

`இனி அந்த சந்தேகம் வேண்டாம்' - விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

`இனி அந்த சந்தேகம் வேண்டாம்' - விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!
`இனி அந்த சந்தேகம் வேண்டாம்' - விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

நான் யார் அல்லது நான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றி என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் மீது எப்போதும் ஒரு விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. அவர் இந்தியர் அல்லர். அவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். டென்மார்க் பாஸ்போர்ட்தான் வைத்துள்ளார் என்பதுதான் அந்த விமர்சனம். இதற்குக் காரணம் இவரின் பெற்றோர்கள் பிரகாஷ் மற்றும் உஜ்ஜாலா படுகோன் ஆகியோர் டென்மார்க்கில் வசிக்கும்போதுதான் தீபிகா பிறந்துள்ளார். ஆனால், தீபிகா பிறந்த சில மாதங்களிலேயே அவர் குடும்பத்தினர் பெங்களூருக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். ``நான் இந்தியா பாஸ்போர்ட்தான் வைத்துள்ளேன். ஒரு இந்தியக் குடிமகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை" என இதற்கு முன்பு ஒருவிழாவில்கூட விளக்கம் அளித்தார். ஆனால், இதை அவர் பல முறை கூறியும் அவர் மீது வெளிநாட்டவர் சாயம் பூசப்பட்டது.

இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அவர் ஒரு பதிவை இட்டுள்ளார். நேற்று நடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போதுதான் இந்தியக் குடிமகன் என்பதற்கு அடையாளமாகத் தனது ஜனநாயகக் கடமையாக வாக்குப்பதிவு செய்தார். வாக்குப்பதிவு செய்தபின்பு விரலில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ``நான் யார் அல்லது நான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றி என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னைப் பற்றி பேசிவந்தவர்களுக்கு இனி அந்த சந்தேகம் வேண்டாம். தயவு செய்து வேண்டாம். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்" எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.