Published:Updated:

ஸ்லிம் சிம்பு ரிட்டர்ன்ஸ்... `மாநாடு' எப்போது? - வெங்கட் பிரபு வெளியிட்ட புதிய அப்டேட்!

ஸ்லிம் சிம்பு ரிட்டர்ன்ஸ்... `மாநாடு' எப்போது? - வெங்கட் பிரபு வெளியிட்ட புதிய அப்டேட்!
ஸ்லிம் சிம்பு ரிட்டர்ன்ஸ்... `மாநாடு' எப்போது? - வெங்கட் பிரபு வெளியிட்ட புதிய அப்டேட்!

வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் `மாநாடு' படம் உறுதியானதில் இருந்து பல படப்பிடிப்புத் தேதிகள் அறிவிக்கப்பட்டு வந்தது. எந்த ஒரு சத்தமும் காணப்படாமல் இருந்த இந்தப் படம் தற்போது மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. படத்தில் தன் கேரக்டருக்காக உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்றிருந்த சிம்பு தனது தம்பி குறளரசன் திருமணத்துக்காக சற்று ஸ்லிம்மாக ரிட்டர்னாகியுள்ளார். ரசிகர்களின் ஆரவாரத்தைத் தவிர்க்க திருமணத்துக்கு ஒரு நாள் முன்னரே பெங்களூரில் வந்து இறங்கிய சிம்பு, கார் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரின் ரிசன்ட் லுக் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும் சிம்பு இன்னும் எடையைக் குறைக்கவுள்ளதாகவும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குறளரசன் திருமண வரவேற்பில் வெங்கட் பிரபு, பிரேம்ஜியை சந்தித்துள்ளார் சிம்பு. மே மாதம் முதல் 'மாநாடு' தொடங்கும் என வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.          

இதுமட்டுமல்லாமல், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் கன்னடப் படமான `மஃப்டி'யின் தமிழ் ரீமேக்கிலும் வில்லனாக நடிக்கவுள்ளார். `மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார்.