Published:Updated:

`மெசேஜ் வாழ்த்தைத் தாண்டி விஜய் கொடுத்திருக்கும் அந்த ஸ்வீட் சர்ப்ரைஸ்'' - சாந்தனு பாக்யராஜ்!

`மெசேஜ் வாழ்த்தைத் தாண்டி விஜய் கொடுத்திருக்கும் அந்த ஸ்வீட் சர்ப்ரைஸ்'' - சாந்தனு பாக்யராஜ்!
`மெசேஜ் வாழ்த்தைத் தாண்டி விஜய் கொடுத்திருக்கும் அந்த ஸ்வீட் சர்ப்ரைஸ்'' - சாந்தனு பாக்யராஜ்!

`விஜயின் தீவிர ரசிகன் என்பது எல்லோருக்குமே தெரியும். இப்போ அதையும் தாண்டி எங்களுக்குள்ள ஒரு நல்ல ரிலேசன்ஷிப் இருக்கு.'' என சந்தோஷத்தில் பேச ஆரம்பிக்கிறார் சாந்தனு பாக்யராஜ். 

`மதயானைக் கூட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கவிருக்கும் படம் `இராவண கோட்டம்'. இந்தப் படத்தின் ஹீரோவாக சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார். `வாழ்த்துகள் நண்பா. டைட்டில் செம்ம' என விஜய் சொன்னது இன்னும் உற்சாகப்படுத்துகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் சமீபத்திய வைரல். இது குறித்து சாந்தனுவிடம் கேட்டபோது, ``நான் எப்போதுமே ஒரு படம் ஆரம்பிக்கும்போது விஜய் சாருக்கு போன் பண்ணியோ, மெசேஜ் பண்ணியோ விஷயத்தை சொல்வது வழக்கம். அந்த வகையில்தான் இவர்தான் டைரக்டர், படத்தோட டைட்டில் இதுதான் 'னு அனுப்பினேன். `வாழ்த்துகள் நண்பா. டைட்டில் செம்ம..'னு ரிப்ளே பண்ணியிருந்தார். அதைத்தான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று படங்களில் இருந்து இப்படி அவருக்குத் தெரிவிப்பது என்னுடைய வழக்கம். எப்பவாவது டைம் கிடைக்கும்போது அவரும், நானும் பேசுவோம். `எப்படி புராஜெக்ட் போயிட்டு இருக்கு, இதை அப்படி பண்ணு, இப்படி பண்ணுனு சொல்லுவார். நல்லது, கெட்டது என நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறோம்.

``ஃபேன் என்கிற விஷயத்தையும் தாண்டி எங்களுக்குள் நல்ல ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு. அவருடன் இணைந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். ஒரு முறை யதேச்சையாப் பேசிட்டு இருக்கும்போது, `சரியான நேரம் வரும்போது இரண்டு பேரும் சேர்ந்து நடிப்போம். சொல்றேன்'னு சொல்லியிருக்கார். அவர்கூட சேர்ந்து நான் நடிக்கும் கேரக்டர் கண்டிப்பாக நல்ல கேரக்டரா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார். ஏனோ, தானோனு இருக்கக்கூடாதுனு நானும் நினைக்கிறேன்.'' என்றவர், 

`இராவண கோட்டம்' படத்தில், பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், தீபா சங்கர், அருள் தாஸ் எனப் பல நடிகர்களின் காம்பினேஷனில் உருவாகவிருக்கிறது. ஹீரோயின் மட்டும் இன்னும் இரண்டு நாள்களில் ஃபைனலைஸ் ஆகிடும்'' என்றவர், ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சனாக `தளபதி 63' படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது'' என்றார் சாந்தனு.