Published:Updated:

`அந்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன்' - சிம்பு குறித்த கேள்வியால் அழுத டி.ராஜேந்தர்!

ப .சரவணகுமார்
அலாவுதின் ஹுசைன்
`அந்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன்' - சிம்பு குறித்த கேள்வியால் அழுத டி.ராஜேந்தர்!
`அந்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன்' - சிம்பு குறித்த கேள்வியால் அழுத டி.ராஜேந்தர்!

இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளையமகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது நெடுநாள் தோழி நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26-ம் தேதி திருமணம் செய்தார். தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களை திருமணத்துக்காக டி.ராஜேந்தர் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதேவேளையில் திருமணத்துக்கும், வரவேற்பு நிகழ்ச்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதனால் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ஆர் பேசுகையில், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பில்லாமல் மகனின் திருமணத்தை நடத்தியதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்தார். மேலும், முக்கியப் பிரமுகர்களை அழைத்தமையால் யாரையும் பார்க்க இயலாது என்ற அச்சத்தில்தான் நிறைய பேரை அழைக்க முடியவில்லை. அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, எழுந்த அரசியல் கேள்விகளுக்குத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பதிலளிப்பதாகக் கூறினார். இறுதியாக, சிம்பு திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.ஆர், ``இந்தக் கேள்வியைக் கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.