Published:Updated:

`கண்டிப்பா படம் பண்ணுவாங்க, ஆனா..!'‍ - அஜித் - வெங்கட்பிரபு சந்திப்பு குறித்து ‘மங்காத்தா’ வைபவ்

`கண்டிப்பா படம் பண்ணுவாங்க, ஆனா..!'‍ - அஜித் - வெங்கட்பிரபு சந்திப்பு குறித்து ‘மங்காத்தா’ வைபவ்
`கண்டிப்பா படம் பண்ணுவாங்க, ஆனா..!'‍ - அஜித் - வெங்கட்பிரபு சந்திப்பு குறித்து ‘மங்காத்தா’ வைபவ்

அஜித் நடிக்க வெங்கட் பிரபு இயக்கிய படம் 'மங்காத்தா.' ஓப்பன் எண்டிங்கில் படத்தின் க்ளைமாக்ஸ் இருந்ததால் 'மங்காத்தா - 2' படத்துக்கான எதிர்பார்ப்பு இருந்துவந்தது. அஜித் 'மங்காத்தா' படத்துக்கு 'பில்லா-2', ஆரம்பம், 'என்னை அறிந்தால்', ‘வீரம்’ முதல் ‘விஸ்வாசம்’ படம் வரை இயக்குநர் சிவாவுடன் டிராவல் செய்து தற்போது, ஹெச்.வினோத்துடன் 'நேர்கொண்ட பார்வை' படத்தை நடித்து முடித்திருக்கிறார். அஜித்தின் அடுத்த படம் யாருடன் என்றக் கேள்வி இருக்கின்ற நேரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்துள்ளார். ‘இது நிச்சயம்' மங்காத்தா - 2' படத்துக்கான மீட்டிங்காகத்தான் இருக்கும்’ என ரசிகர்கள் அனுமானித்து வருகின்றனர்.

இதுகுறித்து ‘மங்காத்தா’ படத்தில் நடித்த வைபவிடம் பேசுகையில், "வெங்கட் பிரபுவும் அஜித் சாரும் படம் சம்பந்தமாகத்தான் சந்திச்சு இருக்கணும். அவங்க காம்பினேஷன்ல கண்டிப்பா படம் பண்ணுவாங்க. ஆனா, அது 'மங்கத்தா-2' படமாகத்தான் இருக்குமானு தெரியல. புது ஸ்கிரிப்ட்டாகூட இருக்கலாம். நல்லா யோசிங்க, 'மங்காத்தா'வுல கதைப்படி நாங்கலாம் செத்துடுவோம். அப்புறம் எப்படி அந்தப் படத்தோட சீக்வெல் பண்ணவிடுவோம்" என்று கலகலக்கிறார்.