Published:Updated:

`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்!' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா

`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்!' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா
`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்!' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா

`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்!' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா

ஆறு வருடம் மரண வெயிட்டிங்கில் பிறை தேடும் இரவுகளைக் கடத்திய இயக்குநர் செல்வராகவன் ரசிகர்களுக்காகவே இந்த ஆண்டு வெளியாகிறது, 'என்ஜிகே'. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், 'பொலிட்டிக்கல் டிராமா' ஜானர் கதையைக் கொண்டது என்பது ஏற்கெனவே தெரிந்திருந்த நிலையில், அதன் முன்னோட்டமும் பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டன. தன் 'புதுப்பேட்டை' படத்தைப் போலவே ரத்தமும் சதையுமான ஆக்‌ஷன் பின்னணியில், கதையைப் பின்னியிருக்கிறார் செல்வராகவன் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. அதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள செல்வா-யுவன், இந்தப் படத்தின் இன்னொரு ஹைலைட்.

`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்!' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா

சென்னையில் நேற்று நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, "ஸ்டீவன் செல்வாபெர்க்னுதான் சொல்லணும். இவரு கூட சேர்ந்து வேலை பார்க்கணும்னு கிட்டத்தட்ட பல வருஷ ஆசை. இப்போ நடந்திருச்சு" என்றார். மேலும், படத்தில் இடம்பெற்றிருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைகுறித்துப் பேசிய சூர்யா, "சில கலைஞர்களோட படைப்புகள், அவங்க காலத்தையும் தாண்டி நிலைத்து நிக்கும். மைக்கேல் ஜாக்சன் இறந்து பல ஆண்டுகள் கடந்தும், இப்போது அவரின் பாடல்கள், நடனம், அந்தப் பாடல்கள் உருவான காரணம்னு எதை எடுத்துக்கிட்டாலும், அது என் மகன் தலைமுறைவரைக்கும் நிலைத்திருக்கு. யுவன் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். இவருக்கு முன்னாடி இருக்கும் லெஜெண்டுகளைத் தவிர்த்துட்டு இவர் காலத்துல இருந்து பார்த்தா, யுவன் எவ்வளவு முக்கியமான இசையமைப்பாளர்னு தெரியும்" என்றார். "செல்வா-யுவன் காம்போவுல வந்த 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்', 'தேவதையைக் கண்டேன்' பாட்டெல்லாம் கேட்டு, நடுராத்திரி யுவனுக்கு கால் பண்ணி, உங்க கையக் குடுங்க முத்தம் கொடுக்கணும்னுலாம் சொல்லியிருக்கேன்" என்று கூறினார் சூர்யா.

மேலும், "இத்தன வருஷமா சினிமாவுல நம்ம ஒண்ண கத்துவச்சிருக்கோம். அதை அன்-லேர்ன் பண்ணிட்டு புதுசா என்ன பண்ணலாம்னு யோசிக்க வைக்கிறார் செல்வா. அதுக்காகவே அவர்கூட இன்னொரு படம் பண்ணணும்" என்று கூறிவிட்டு, மேடையில் அமர்ந்திருந்த செல்வராகவனைப் பார்த்து, "இன்னொரு வாய்ப்பும் குடுங்க சார்" என்றார் சூர்யா.

முன்னதாகப் பேசிய செல்வராகவன், "சூர்யா,  ஓர் இயக்குநரின் நடிகர். நானே சில சீன்களில் இதுபோதும்னு முடிவு எடுத்தாலும், அவர் அதையும் தாண்டி ஒரு எக்ஸ்பிரஷன் எடுத்துட்டு வந்து இப்படிப் பண்ணலாமா, இப்படிப் பண்ணலாமான்னு கேப்பாரு. ஒரு அமேஸிங்கான ஆக்டர். அதேமாதிரிதான் சாய் பல்லவி. இப்படி ஒரு நடிப்புத் திறமை இருக்குதே, அதை முழுசா பயன்படுத்திக்கணும்னு தான் அவங்கள இந்தப் படத்துல டான்ஸ் எதுவும் ஆடவிடாம வெறும் நடிகையா மட்டும் காட்டியிருக்கோம்" என்றார்.

`ஸ்பீல்பெர்க் செல்வா, மைக்கேல் ஜாக்சன் யுவன்!' - என்ஜிகே இசை வெளியீட்டில் சூர்யா

விழா தொடங்கும் முன், படத்தின் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன. அதுகுறித்துப் பேசிய யுவன் ஷங்கர் ராஜா, "செல்வாவும் நானும் ஒவ்வொரு முறை சேர்ந்து வர்க் பண்ணும்போதும், இதுக்கு முன்னாடி பண்ணினதத் தாண்டி புதுசா என்ன பண்ணலாம்னுதான் யோசிப்போம். இந்தப் படத்தோட பாடல்களும் அப்படித்தான் வந்திருக்கு. அதே மாதிரிதான், படத்தோட பின்னணி இசையும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். பின்னணி இசை சேர்க்க, இப்போதான் எனக்கு முதல் பாதிய அனுப்பியிருக்காங்க. கண்டிப்பா நல்லா இருக்கும்னு நம்புறேன்" என்றார்.

ஒன்றரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த 'என்ஜிகே', வருகிற மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு