Published:Updated:

ஆக்‌ஷன் நிறைந்த `தேவராட்டம்' படத்தின் அசத்தல் மேக்கிங்!

ஆக்‌ஷன் நிறைந்த `தேவராட்டம்' படத்தின் அசத்தல் மேக்கிங்!
ஆக்‌ஷன் நிறைந்த `தேவராட்டம்' படத்தின் அசத்தல் மேக்கிங்!

`கொம்பன்', 'குட்டிப்புலி', `மருது', `கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கி இருக்கும் படம் `தேவராட்டம்'. `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்துக்குப் பிறகு, நடிகர் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.

தவிர, சூரி, வினோதினி, போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகியிருக்கும் இப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் பாடல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவை எப்படி உருவானது என்ற மேக்கிங் வீடியோவை சினிமா விகடன் யூ டியூப் சேனலில் பார்க்கலாம்.