Published:Updated:

`ஜாக்பாட்' - சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

உ. சுதர்சன் காந்தி.
`ஜாக்பாட்' - சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
`ஜாக்பாட்' - சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இந்தியில் வித்யாபாலன் நடித்து ஹிட்டான 'துமாரி சூலு' படத்தின் தமிழ் ரீமேக்கான 'காற்றின் மொழி' படத்தில் நடித்திருந்தார், ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் 'ராட்சசி' என்ற படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து முடித்துள்ளார்.

பிறகு, 'குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். 'ஜாக்பாட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், சூர்யா. தவிர, 'பாபநாசம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்திக் அக்காவாக நடித்து வருகிறார், ஜோ.