Published:Updated:

``வீட்டைவிட்டு துரத்திட்டா... ஒரு வருடமா ஆசிரமத்துல இருக்கேன்!" - தேவி கிருபாவின் அம்மா கிரிஜா

``பெண் குழந்தை, ஆண் குழந்தை யாராக இருந்தாலும் ஒரு தாய்க்கு எல்லோரும் ஒரே மாதிரிதான். ஆனால், குழந்தைங்க அப்படி நினைக்கிறதில்லை. அவங்களுக்கு நாம தேவைப்படாதபோது தூக்கிப் போட்டுடுறாங்க." என்கிறார், நடிகை - தொகுப்பாளினி தேவி கிருபாவின் தாயார் ஸ்வாதி கிரிஜா.

``வீட்டைவிட்டு துரத்திட்டா... ஒரு வருடமா ஆசிரமத்துல இருக்கேன்!" - தேவி கிருபாவின் அம்மா கிரிஜா

``பெண் குழந்தை, ஆண் குழந்தை யாராக இருந்தாலும் ஒரு தாய்க்கு எல்லோரும் ஒரே மாதிரிதான். ஆனால், குழந்தைங்க அப்படி நினைக்கிறதில்லை. அவங்களுக்கு நாம தேவைப்படாதபோது தூக்கிப் போட்டுடுறாங்க." என்கிறார், நடிகை - தொகுப்பாளினி தேவி கிருபாவின் தாயார் ஸ்வாதி கிரிஜா.

Published:Updated:

சன் டிவி-யில் ஒளிபரப்பான `ஆனந்தம்', `தென்றல்' சீரியல்கள் மூலம் பிரபலமானவர், தேவி கிருபா. தற்போது வசந்த் தொலைக்காட்சியில் ஒரு கிச்சன் ஷோவுக்கு தொகுப்பாளினியாக இருக்கிறார். இவரது தாயார் ஸ்வாதி கிரிஜா மதுரவாயல் காவல் நிலையத்தில் என் மகள் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதாகவும், இனி எனக்கு ஒரே ஒரு மகன்தான் எனவும் எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்வாதி கிரிஜாவிடம் பேசினேன்.

``வீட்டைவிட்டு துரத்திட்டா... ஒரு வருடமா ஆசிரமத்துல இருக்கேன்!" - தேவி கிருபாவின் அம்மா கிரிஜா

``2003-ல இருந்து என் பொண்னு முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டிருக்கிறேன். இரவு, பகல்னு பார்க்காம அவளுக்காக வேலை பார்த்திருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும் அவகூட இருப்பேன். என் மகன் கோகுல் அவளுக்காக கிட்டத்தட்ட 14 வருடம் டிரைவர் மாதிரி அவளுக்காக கார் ஓட்டியிருக்கான். இப்போ அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்க நினைக்கிறா. நான் சொல்ற எதையும் கேட்கிற மனநிலையில இல்லை. எனக்கு 65 வயசுக்குமேல ஆகுது. இந்த வயசுல என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க. இப்போ நான் ஐயப்பன்தாங்கலில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கேன். என் மகன்தான் எனக்கான செலவைப் பார்த்துக்கிறான். `இனிமே என் கையிலிருந்து ஒரு பைசா தரமாட்டேன். இனி என் வாழ்க்கையை நான் பார்க்கப்போறேன். உங்க மகன்தான் உங்களைப் பார்க்கணும்; அவரே பார்த்துப்பார்'னு சொல்லி அனுப்பிட்டாங்க. இதோ... எட்டு மாசம் ஆகுது!. வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு எதிரில் இருக்கும் கோயில், தர்கா வாசல்லதான் படுத்துத் தூங்குறேன். எனக்குத் தெரிஞ்ச யோகா, டான்ஸ் இப்போ கைக்கொடுக்குது. தெரிஞ்சவங்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன். பல நாள்கள் பட்டினி கெடந்தாச்சு.'' என்றவர், தொடர்ந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``வீட்டைவிட்டு துரத்திட்டா... ஒரு வருடமா ஆசிரமத்துல இருக்கேன்!" - தேவி கிருபாவின் அம்மா கிரிஜா

``அவங்களுக்காகவே இருந்த எனக்கு அவங்க கொடுத்த பரிசு இது. ஒரு கட்டத்தில் மனசு வெறுத்துப் போய்தான் கடந்த வெள்ளிக்கிழமை மதுரவாயல் காவல் நிலையத்தில் `என் பொண்ணு செத்துட்டா. இனி எனக்கு ஒரே ஒரு மகன் மட்டும்தான்' என எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்.'' என அழுகிறார், ஸ்வாதி கிரிஜா. 
 
இது குறித்து அவரது மகள் தேவி கிருபா மற்றும் மகன் கோகுலிடம் பேசினேன். 

தேவி கிருபா பேசும்போது, ``வீட்டுக்கு மூத்த பிள்ளையாப் பிறந்த நான், குடும்பத்தைக் காப்பாத்த என்னோட 14 வயசுல இருந்தே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இடையிடையே வாய்ப்புகள் குறைஞ்சப்போவும் எந்தப் பிரச்னையும் இல்லாம, எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கிட்டேன். நான் இந்தத் துறைக்கு வந்த ஆரம்பத்துல ஒரு லட்சம் ரூபாய்க்கும்மேல என்கிட்ட கடனா வாங்கினாங்க. என்ன, ஏதுன்னு கேட்காம கொடுத்தேன். கொடுத்து பல மாதங்கள் ஆகியும் அந்தப் பணம் திரும்ப வரலை. வாக்குவாதம் வந்தது, மன்னிச்சு அம்மாவைப் பார்த்துக்கிட்டேன். பிறகும், அடிக்கடி பணம் வாங்குறதும், அதுக்கான காரணத்தைச் சொல்லாம மறைக்கிறதுமா இருந்தாங்க. கடந்த வருடம், ஒரு லட்சத்துக்கு முப்பதாயிரத்துக்கும்மேல, தெரிஞ்சவங்க கேட்கிறதா வட்டிக்குக் கேட்டாங்க. `வெளியில கொடுக்குற அதே அளவு வட்டிக்கு அவங்களுக்குக் கொடுக்கலாம்'னும் சொன்னாங்க. ஏதோ கஷ்டத்துக்குக் கேட்கிறாங்கன்னு நானும் தனியார் வங்கியில லோன் போட்டு வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அந்தப் பணமும் திரும்பி வரவேயில்ல, வட்டி, முதல்னு ஒரு பைசாகூட இன்னும் என்கிட்ட திருப்பிக் கொடுக்கல. ஒருமுறை நான் ஷூட்டிங் போன இடத்துக்கு வந்துட்டாங்க. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாதான் அந்த இடத்தை விட்டுப் போவேன்னு அடம்பிடிச்சாங்க. இப்படித் தொடர்ந்து எத்தனை முறைங்க அவங்க டார்ச்சரைத் தாங்கிக்கிறது... தவற்றை மன்னிக்கலாம்; துரோகத்தை மன்னிக்க முடியாது.

``வீட்டைவிட்டு துரத்திட்டா... ஒரு வருடமா ஆசிரமத்துல இருக்கேன்!" - தேவி கிருபாவின் அம்மா கிரிஜா

அதனாலதான், நானே `வீட்டை விட்டு வெளியே போயிடுங்க'னு சொல்லிட்டேன். ஆனாலும், என் தம்பி அவங்க செலவுக்குத் தேவையான பணத்தை இப்போவரைக்கும் கொடுத்துக்கிட்டுதான் இருக்கான். இத்தனை வருடம் எனக்குன்னு எதையும் சேர்த்து வைக்காம அம்மா, குடும்பம்னு வாழ்ந்துட்டேன். இனிமேலாவது கல்யாணம் பண்ணி செட்டில் ஆகணும்ல! தவிர, இப்போ நான் சினிமாவில் இல்லை. சேனலில்தான் ஷோ பண்ணிக்கிட்டு இருக்கேன். கல்யாணம் ஆனபிறகு மீடியாவில் இருந்தால் சரி, இல்லையென்றாலும் இல்லைதானே... அப்படியிருக்க, பொண்ணுக்காக எதையாவது சேர்த்து வைக்கணும்ல?! இப்படி இருக்கிற காசையெல்லாம் புடிங்கிக்கிட்டு விட்டா, என் கதி என்ன ஆகுறது?!" என்பவரைத் தொடர்கிறார், கோகுல். 

``இதுவரை எத்தனையோ முறை பணத்தைப் பத்தி கேட்டுப் பார்த்துட்டோம். அம்மாகிட்ட இருந்து எந்தப் பதிலும் இல்லை. வீட்டில் அவருக்குன்னு வாங்கி வைத்திருந்த எல்லாச் சேலையையும் வீட்டுல வேலை பார்த்தவங்ககிட்ட வித்திருக்காங்க. இப்போவரைக்கும் நான்தான் அம்மாவைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். அக்காவுக்கு அம்மா பண்ண துரோகம் பிடிக்கலை. அதனாலதான் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிட்டாங்க. செஞ்ச தப்பை ஒப்புக்கிட்டா, சேர்ந்தாவது இருக்கலாம். இப்போ நானும், அக்காவும்தான் இருக்கோம். கிட்டத்தட்ட பத்து வருடமா இந்த வீட்டுலதான் இருக்கோம். இப்போ என்னையும் அக்கா, வீட்டை விட்டுத் துரத்திட்டதா அம்மா மத்தவங்ககிட்ட சொல்லிக்கிட்டிருக்காங்க. சீக்கிரம் இந்தப் பிரச்னை தீரணும், அவ்வளவுதான்.'' என்றார்.