Published:Updated:

`அந்த வரிகள் எனக்காகச் சொன்னது போலவே இருந்தது' - அஜித்துக்குக் குவியும் வாழ்த்து!

மலையரசு
`அந்த வரிகள் எனக்காகச் சொன்னது போலவே இருந்தது' - அஜித்துக்குக் குவியும் வாழ்த்து!
`அந்த வரிகள் எனக்காகச் சொன்னது போலவே இருந்தது' - அஜித்துக்குக் குவியும் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். 25 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் அஜித் 58 படங்கள் நடித்துள்ளார். இன்று 49-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நள்ளிரவு முதலே அவருடைய ரசிகர்கள் #HappyBirthdayThala போன்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே திரைப்பிரபலங்களிலிருந்து ரசிகர்கள் வரை அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், ``நீங்கள் நடித்த முகவரி திரைப்படம் எனது வாழ்க்கைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். உங்களைப் பார்த்துதான் எனக்கு நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. நீங்கள் சொன்ன `Never Ever Give up' வரிகள் எனக்காகச் சொன்னது போலவே இருந்தது. பிறந்தநாள் வாழ்த்துகள் தல" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வலைதளப் பக்கத்தில், ``எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் சுசீந்திரன். அவர் தனது ட்விட்டர் பதிவில், `உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், விவேக் ஓபராய், இயக்குநர்கள் சிவா, ஹெச்.வினோத் எனப் பல்வேறு பிரபலங்களும் அஜித்துக்கு வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.