Published:Updated:

``டி.ஆர் அழுகை, ரீஎன்ட்ரி மீரா ஜாஸ்மின், பழங்குடிப் பெண்ணாகும் நித்யா மேனன்..." #Cinema20/20  

``டி.ஆர் அழுகை, ரீஎன்ட்ரி மீரா ஜாஸ்மின், பழங்குடிப் பெண்ணாகும் நித்யா மேனன்..." #Cinema20/20  
``டி.ஆர் அழுகை, ரீஎன்ட்ரி மீரா ஜாஸ்மின், பழங்குடிப் பெண்ணாகும் நித்யா மேனன்..." #Cinema20/20  

``டி.ஆர் அழுகை, ரீஎன்ட்ரி மீரா ஜாஸ்மின், பழங்குடிப் பெண்ணாகும் நித்யா மேனன்..." #Cinema20/20  

1. ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஒரு டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராதிகா.

2. இயக்குநர் கண்ணனின் அடுத்த ஆக்‌ஷன் காமெடி படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார், சந்தானம்.

3. மே 3- ம் தேதி வெளியாகவிருந்த அதர்வாவின் `100' திரைப்படம், ஒரு வாரம் தள்ளிப்போய் மே 9- ம் தேதி வெளியாகவிருக்கிறது.

4. நடிகை சமீரா ரெட்டிக்கு அலோபீசியா அரோட்டா என்ற நோய் தாக்கியிருப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும் நிலைக்கு ஆளாகியிருப்பதாக வருத்தமாகக் கூறியுள்ளார்.

5. இரவு பகலாக நடந்துவரும் `ராங்கி' படப்பிடிப்பின்போது நடிகை த்ரிஷா மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

6. இந்தி நடிகர்கள் பிரதீக் பாப்பர், ஜாட்டின் சர்ணாவைத் தொடர்ந்து, தற்போது ப்ரதீப் காப்ராவும் ரஜினி - முருகதாஸ் கூட்டணியின் 'தர்பார்' படத்தில் இணைந்திருக்கிறார்.

7. ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஒரு பழங்குடியினப் பெண் கேரக்டரில் நடிக்க, நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

8. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `மாநாடு' படத்தின் ஷூட்டிங், இம்மாதம் தொடங்குகிறது.

9. மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்த பெருமை, தற்போது, ராகவா லாரன்ஸின் `காஞ்சனா 3' படத்துக்கும் வந்துள்ளது. ரிலீஸான முதல் பத்து நாள்களிலேயே ரூபாய் 100 கோடியை வசூல் செய்துள்ளது.

10. தன் மகன் குறளரசனின் திருமணத்துக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்புவுக்கு எப்போது திருமணம் எனக் கேட்டபோது, கண்கலங்கி அழுதார் இயக்குநர் டி.ராஜேந்தர். மேலும், விரைவில் நடக்கும் என்றும் கூறினார்.

11. நீண்ட நாள்களாக சினிமாவிலிருந்து ஓய்வில் இருந்த நடிகை மீரா ஜாஸ்மினிடம், தற்போது, தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

12. மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் `மஹர்ஷி' படத்தின் ரிலீஸுக்கு முன்பாக, அவரின் ரசிகர்களுக்காக ஒரு பிரமாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது படக்குழு.

13. `அர்ஜுன் ரெட்டி', `100% காதல்' படங்களின் நாயகி ஷாலினி பாண்டே அடுத்ததாக, ராஜ் தருணுக்கு ஜோடியாக தெலுங்கில் `இட்டரி லோகம் ஒக்கட்டே' படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார்.

14. இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் தெலுங்குப் படமான 'ஐ-ஸ்மார்ட் ஷங்கரி'ன் சில ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க வாரணாசிக்குப் பயணித்துள்ளது படக்குழு.

15. நாகார்ஜுனா, ரகுல் ப்ரீத் இணைந்து நடிக்கும் 'மன்மதடூ 2' படத்தின் ஷூட்டிங் அடுத்தகட்டமாக, போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வருகிறது.

16. ஜான்வி கபூர் நடிக்கும் அடுத்த இந்திப் படத்தில், துணை இயக்குநராகவும், நடிகையாகவும் இந்தி திரையுலகுக்கு அறிமுகமாகிறார் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனயா கபூர்.

17. பிரபல இந்தி இயக்குநர் ஃபர்ஹான் அக்தருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற சல்மான் கானுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.

18. டாப்ஸி நடிப்பில் இந்தியில் உருவாகிவரும் 'சாண்ட் கீ ஆங்க்' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.

19. ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'மரக்கார்' படத்தின் போஸ்ட்-புரொடக்‌ஷனுக்கு மட்டுமே ஒரு வருடம் தேவைப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

20. 'ஹாரிபாட்டர் யூனிவர்ஸி'ல் இடம்பெறும் 'ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' தொடரின் மூன்றாம் பாகம் 2021-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அடுத்த கட்டுரைக்கு