Published:Updated:

``பழசையெல்லாம் மறந்திடலாம்; என் கணவருக்கு நினைவிடம் அமைவது உறுதி!" - நடிகை பாரதி விஷ்ணுவர்தன்

``பழசையெல்லாம் மறந்திடலாம்; என் கணவருக்கு நினைவிடம் அமைவது உறுதி!" - நடிகை பாரதி விஷ்ணுவர்தன்
``பழசையெல்லாம் மறந்திடலாம்; என் கணவருக்கு நினைவிடம் அமைவது உறுதி!" - நடிகை பாரதி விஷ்ணுவர்தன்

றைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளன. நீண்டகால முயற்சிக்குப் பிறகு இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார், விஷ்ணுவர்தனின் மனைவியும் நடிகையுமான பாரதி. அமையவிருக்கும் நினைவிடம் மற்றும் பர்சனல் வாழ்க்கைக் குறித்து பாரதியிடம் பேசினோம்.

``என் கணவர் கன்னட சினிமாவில் பெற்றப் புகழ் ரொம்பப் பெரிசு. அவர் மேல கன்னட மக்கள் அளவுகடந்த அன்பை வெச்சிருக்காங்க. அவர் மிகச்சிறந்த மற்றும் மனிதநேயமுள்ள மனிதர். சினிமாவில் அவருக்கு நான் சீனியர். ஆனா, பிறரிடம் அன்பு செலுத்துவதில் அவர் மிகவும் உயர்ந்தவர். நாங்க இருவரும் சேர்ந்து பல படங்கள்ல நடிச்சிருக்கோம். நடிப்பால் தொடங்கிய எங்க நட்பு, கல்யாணத்துக்குப் பிறகும் நீடிச்சது. மகிழ்ச்சியா வாழ்ந்தோம். அவர் 2009-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு, அவருக்குக் கர்நாடக அரசு நினைவிடம் அமைக்கணும்னு நாங்க ரொம்ப ஆசைப்பட்டோம். அரசுக்குக் கோரிக்கைவிடுத்தோம். ஆனா, எங்க கோரிக்கை நிறைவேறவேயில்லை. 

``பழசையெல்லாம் மறந்திடலாம்; என் கணவருக்கு நினைவிடம் அமைவது உறுதி!" - நடிகை பாரதி விஷ்ணுவர்தன்

கடந்த 10 வருஷத்துல, கர்நாடகாவுல பல முதல்வர்கள் ஆட்சி செய்திருக்காங்க. ஆனா, ஒருவர்கூட எங்க கோரிக்கைபடி என் கணவருக்கு நினைவிடம் அமைக்கலை. இதில் நிறைய பிரச்னைகளும் புறக் காரணங்களும் இருக்கு. அதனால், எங்க குடும்பத்தார், ரசிகர்கள் உட்படப் பலருக்கும் வருத்தம் இருந்துச்சு. இந்நிலையில நாங்க நீதிமன்றம் போனோம். எங்களுக்குச் சாதகமா சமீபத்தில் தீர்ப்பு வந்துச்சு. அதனால் கன்னட மக்களுக்கு அளவில்லா சந்தோஷம். இந்த வெற்றி, என் கணவருக்கே சமர்ப்பணம். நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சதும், என் கணவருக்கான நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்கப்போகுது. நினைவிடம் கட்டும் விவகாரத்தில் நடந்த அரசியல் சார்ந்த எல்லாக் கசப்பான நிகழ்வுகளையும் மறந்திடலாம். இனி, நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் உறுதியா நடக்கும். அது என் கணவரின் புகழுக்கு, மணிமகுடமா அமையும்" என்பவர் தன் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசுகிறார். 

``பழசையெல்லாம் மறந்திடலாம்; என் கணவருக்கு நினைவிடம் அமைவது உறுதி!" - நடிகை பாரதி விஷ்ணுவர்தன்

``நாம நினைக்கிறதெல்லாம் அப்படியே நடக்கிறதில்லையே! அப்படி, நான் ஸ்கூல் படிக்கும்போது விளையாட்டு, இசை, நடனத்துல அதிக ஆர்வமா இருப்பேன். மூன்றில் ஒரு துறைதான் என் கரியரா இருக்கும்னுதான் நினைச்சேன். அப்போ எங்க வீட்டில் ரொம்பக் கட்டுப்பாடுகள் இருக்கும். சினிமா பார்க்கக்கூட விடமாட்டாங்க. ஆனா, எதிர்பாராத வகையில சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சேன். சினிமாவே என் அடையாளமாகிடுச்சு. அந்த ஆச்சர்யம் இப்போவரை எனக்கு உண்டு. இது எல்லாமே கடவுளின் செயல் என்பதை மட்டும் உறுதியா நம்புறேன்.

1964-ம் ஆண்டு, `துட்டே தொட்டப்பா' கன்னடப் படத்தில் அறிமுகமானேன். பிறகு பல மொழி பட வாய்ப்புகளும் கிடைச்சன. தமிழில், என் முதல் படமான `நாடோடி'யிலேயே எம்.ஜி.ஆருடன் ஜோடியா நடிச்சேன். தமிழில் சிவாஜி, எம்.ஜி.ஆர் உட்பட அப்போதைய எல்லா ஹீரோக்களுடனும் ஜோடியா நடிச்சேன். இதெல்லாம் எப்படி நடந்துச்சுனு தெரியலை. ஆனா, கடவுள் வழிநடத்தல்படி எல்லாம் நல்லபடியா நடந்துச்சு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, துளுனு ஆறு மொழிகளில் நிறைய படங்களில் நடிச்சிருக்கேன். சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு 54 வருஷங்கள் ஆகுது. 

``பழசையெல்லாம் மறந்திடலாம்; என் கணவருக்கு நினைவிடம் அமைவது உறுதி!" - நடிகை பாரதி விஷ்ணுவர்தன்

ஹீரோயினா பிஸியா நடிச்சுகிட்டு இருந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி... எனக்கு நடிப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. எனக்குப் பணம், சொத்து எதுவும் முக்கியமில்லை. மக்களின் அன்புதான் பெரிய சொத்து. அது இப்போவரை எனக்கு அளவில்லாம கிடைச்சுகிட்டே இருக்கு. அதனாலதான் என் கணவர் இறந்த பிறகும் என்னால மகிழ்ச்சியா வாழ முடியுது. எதிர்பார்ப்பு, ஆசைகள் எனக்கு எப்போதும் கிடையாது. அதனால எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என் காலத்தில் நடிச்ச பல மொழி நடிகைகளும் என் நீண்டகால தோழிகளா இருக்காங்க. அடிக்கடி சென்னை வருவேன். எங்க காலத்துல, பல மொழி ஷூட்டிங்கும் சென்னையிலதான் நடக்கும். அந்த நினைவுகளையெல்லாம் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது" என நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் பாரதி.

Vikatan