Published:Updated:

"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி மீம்ஸ் கன்டன்ட் கொடுக்க மாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி மீம்ஸ் கன்டன்ட் கொடுக்க மாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்
"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி மீம்ஸ் கன்டன்ட் கொடுக்க மாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

"ஆண் இயக்குநர்கள் மாதிரி, ’மத்த இயக்குநர்கள் என்ன படம் பண்றாங்க’, ’டெக்னிக்கலா என்ன புதுசா வந்திருக்கு’ இப்படியெல்லாம் யோசிச்சுப் பார்க்க பெண் இயக்குநர்களுக்கு நேரமும் சூழலும் அமையிறதில்லை. ஷூட்டிங் முடிஞ்சா எங்களுக்கு வீட்டு வேலை சரியா இருக்கு."

"சமீபத்துல '90 எம்.எல்’ படத்தின் பிசினஸ் டீம்ல இருந்த ஒருவரைச் சந்திச்சேன். ‘படம் குறித்த உங்க கமென்ட்டை எதிர்பார்த்தோம். ஆனா, எதுவும் பேசாம ஏமாத்திட்டீங்க மேடம்’னார். இப்போ சிலர் ஒரு விஷயம் பண்றாங்க. அதாவது ‘இருட்டு.. முரட்டு’ன்னு ஏதாவதொரு வில்லங்கமான அர்த்தத்துல டைட்டில் வச்சு ஒரு ’டைப்’பா படம் எடுக்க வேண்டியது; வர்ற எதிர்மறை விமர்சனங்களையே தொடர்ந்து பேசிப் பேசி அந்தப் படத்தை ஓட வச்சுட வேண்டியது. இந்த மாதிரியான படங்கள் பத்தி இனி ஒரு வார்த்தை பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்" எச்சரிக்கையுடன் பேசுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

தான் இயக்கியிருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்துக்காக மகாபலிபுரம் தாண்டி ஒரு வயல்வெளிக்குள் போடப்பட்ட செட்களைப் பிரிக்கும் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவரைச் சந்தித்தேன். "இந்தப் படத்துக்காக 70'ஸ் மாடல்ல ஒரு வீட்டை நிஜமாவே கட்டினோம். அந்த வீடு தண்ணீருக்குள் மூழ்கி இருக்கணும். படம் முடிஞ்சு ரிலீஸுக்குத் தயாரா இருக்கு" என்றவரிடம், சில கேள்விகளை வைத்தேன்.

"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி மீம்ஸ் கன்டன்ட் கொடுக்க மாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

" 'ஹவுஸ் ஓனர்’ படத்தில் லவ்லின் - கிஷோர் இருவரில் யார் ஸ்கோர் செய்வார்கள்?"

"இந்தப் படத்துக்காக 'ஆடுகளம்' கிஷோர் எனக்கு அவ்ளோ ஒத்துழைப்பு தந்தார். காரணம், கதை அவருக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது. அவரைப் பத்தி எனக்கு சொல்லணும்னு தோணுற ஒரு விஷயத்தைச் சொல்றேன். தங்குறதுக்கு ஹோட்டல் ரூம்கூட கேட்காம, என் ஆபீஸ்ல தங்கி நடிச்சுக் கொடுத்தார். அவரோட எளிமையான அந்தக் குணத்துக்காக இதைச் சொல்றேன். லவ்லினைப் படத்தின் ஹீரோயின் ஆக்குனதுக்கு, 'உங்க ஃப்ரெண்ட் விஜியோட (விஜி சந்திரசேகர்) பொண்ணு’னு கமிட் பண்ணிட்டீங்க'னு சொன்னாங்க, சிலர். அதையும் நான் உறுதியா மறுக்கிறேன். அந்தப் பொண்ணு செம டேலண்ட். செம டைமிங்கான பொண்ணு. நல்லா வருவாங்க."

"படத்தில் நீங்களும் நடிப்பதாக இருந்ததாமே?"

" ‘அந்நியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள்ல நடிச்ச ஸ்ரீரஞ்சனி பண்ணியிருக்கிற கேரக்டர்ல நடிக்கணும்கிறது என்னோட ஆசை. அதுக்கு என் கணவர் சம்மதிக்கல. அவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறதால, அவர் பேச்சை மீற முடியாதில்லையா... அவர் ஏன் சம்மதிக்கலைன்னு நீங்க அவர்கிட்டதான் கேட்கணும்."

"இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி மீம்ஸ் கன்டன்ட் கொடுக்க மாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

"பெண் இயக்குநர்கள் மட்டுமே சந்திக்கிற பிரச்னைகள்னு சினிமாவில் ஏதும் இருக்கா?" 

"என்னைப் பொறுத்தவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேமாதிரியான பிரச்னைதான். பெண்ணுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியா தெரியுதுன்னா, அது வெளியில இருந்து வர்றதில்லை. நம்மகிட்ட இருந்தே வருது. எனக்கே என் குழந்தைகளோட வேலை முக்கியமா, சினிமா முக்கியமாங்கிற கேள்வி வந்தா, குழந்தைகளோட வேலைன்னுதான் சொல்வேன். அதனால, ஆண் இயக்குநர்கள் மாதிரி, மத்த இயக்குநர்கள் என்ன படம் பண்றாங்க’, ’டெக்னிக்கலா என்ன புதுசா வந்திருக்கு’ இப்படியெல்லாம் யோசிச்சுப் பார்க்க பெண் இயக்குநர்களுக்கு நேரமும் சூழலும் அமையிறதில்லை. ஷூட்டிங் முடிஞ்சா எங்களுக்கு வீட்டு வேலை சரியா இருக்கு. இன்னொரு விஷயம், பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகளவுல தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறாங்க. அவங்களோட எதிர்பார்ப்பு பெண் இயக்குநர்களுக்குத் தெரியணும்."

"சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, ‘சிரிச்சா போச்சு’ ராமர்... இப்படிப் பலருடன் உங்களுக்குப் பிரச்னை. ’லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு சண்டக்கோழி’ என்ற கமென்ட்ஸ் வருதே?" 

"பேட்டியின் தொடக்கத்திலேயே இதைப் பத்திதான் சொன்னேன். சிலர் சில விஷயங்களைப் பேசினா, அந்த விஷயத்துக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைச்சிடுது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாக்கூட அதை வச்சு கேலி கிண்டல் பண்ண ஒரு கூட்டம் இருக்கு. நான் லிஸ்டு போட்டுக்கிட்டு யாரையும் வம்பு இழுக்கிறதில்லை. இனி ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். எனக்கு யார் என்ன பட்டப்பெயரும் வச்சுட்டுப் போகட்டும். எவ்வளவோ மீம்ஸ் போட்டுட்டாங்க. இனியும் மீம்ஸ் போடணும்னு ஆசைப்படுறாங்க. அவங்களுக்குக் கன்டென்ட்டா இருந்தது போதும்; இனி நல்லதை மட்டும் பேசுவோம்." 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு