நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம், 'மான்ஸ்டர்'. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

'ஒரு நாள் கூத்து' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் படம், 'மான்ஸ்டர்'. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், ப்ரியா பவானி ஷங்கர் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். எலியை வில்லனாக நடிக்கவைத்து வித்தியாச கதைக்களத்தைக் கையிலெடுத்திருக்கிறார், இயக்குநர்.
மேலும், இந்தப் படத்தில் நடிக்க எலிக்கு சில பயிற்சிகள்கூட கொடுக்கப்பட்டிருக்கிறது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், அதை டார்கெட் செய்து கதை எழுதியிருப்பது தெரிகிறது. காமெடி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடித்துள்ளார். மே 17-ம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.