Published:Updated:

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி நடிக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி'  படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து!

அலாவுதின் ஹுசைன்
சிரஞ்சீவி, விஜய் சேதுபதி நடிக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி'  படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து!
சிரஞ்சீவி, விஜய் சேதுபதி நடிக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி'  படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து!

ஆந்திர மாநிலம், கோக்காபேட்டையில் அமைத்திருந்த சிரஞ்சீவியின் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தின் செட்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.    

சிரஞ்சீவி, விஜய் சேதுபதி நடிக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி'  படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து!

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ' சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கக் கடந்த ஒன்றரை வருடமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிப்பதால், ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி பகுதியிலுள்ள கோக்காபேட்டை என்ற இடத்தில் இருக்கும் சிரிஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்திலேயே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கோட்டை அரங்கில்  படத்தின் பெரும் பகுதி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாத காலமாக சிரஞ்சீவி வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருப்பதால் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து அறியப்படாத நிலையில், காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கவுள்ளது.   

Vikatan