Published:Updated:

`விக்ரம் வேதா' காம்போவின் அடுத்த படம் ரெடி!

அலாவுதின் ஹுசைன்
`விக்ரம் வேதா' காம்போவின் அடுத்த படம் ரெடி!
`விக்ரம் வேதா' காம்போவின் அடுத்த படம் ரெடி!

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்த `விக்ரம் வேதா' படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரியும், தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் மீண்டும் இணைந்துள்ளனர். இம்முறை `பூவரசம் பீப்பீ ' படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார்கள். இப்படத்துக்கு `ஏலே' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

`விக்ரம் வேதா' காம்போவின் அடுத்த படம் ரெடி!

வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் நாயகனாக நடிக்க மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். இருவரும் ஏற்கெனவே, ஹலிதாவின் ரிலிஸுக்குக் காத்திருக்கும் 'சில்லுக் கருப்பட்டி' படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு `ஏலே' என டைட்டில் வைத்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் காஸ்டா படத்தொகுப்பு மேற்கொள்கிறார். ரூரல் காமெடியாகத் தயாராகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பழனி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. அப்பா, மகன் உறவுக்குள் இருக்கும் எமோஷன்களைப் பற்றிய கதையாக இருக்கும் எனத் தகவல்.

Vikatan