Published:Updated:

ஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவை இயக்கும் 'ஜாக்பாட்' இயக்குநர்!

தார்மிக் லீ
ஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவை இயக்கும் 'ஜாக்பாட்' இயக்குநர்!
ஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவை இயக்கும் 'ஜாக்பாட்' இயக்குநர்!

சூர்யா தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் 'ஜாக்பாட்'. ஜோதிகாவோடு ரேவதி நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படம் மே கடைசியில் வெளியாகும் நிலையில், ஹன்சிகாவை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் கல்யாண். 

ஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவை இயக்கும் 'ஜாக்பாட்' இயக்குநர்!

'கதை சொல்லப்போறோம்', 'குலேபகாவலி' படத்தைத் தொடர்ந்து ஜோதிகா - ரேவதியை லீடு ரோலாக வைத்து கல்யாண் இயக்கியிருக்கும் படம் 'ஜாக்பாட்'. ஜோதிகா அக்‌ஷயா (எ) அக்‌ஷுவாகவும் ரேவதி மாஷா எனும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். ஆக்‌ஷன், காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இப்படம் மே மாதம் கடைசியில் வெளியாக இருக்கிறது. யோகி பாபு, ஆனந்த ராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன் போன்ற பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஹன்சிகாவிடம் கதை சொன்ன கல்யாண், அவரை வைத்து பேய் படம் இயக்குவதாக இருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. படம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தார்மிக் லீ

Dubsmasher, Entertainer