Published:Updated:

'மகதீரா' பாணியில் நாகர்ஜுனா படத்தை இயக்கும் 'சிவ பக்தர்' தனுஷ்

எம்.குணா
'மகதீரா' பாணியில் நாகர்ஜுனா படத்தை இயக்கும் 'சிவ பக்தர்' தனுஷ்
'மகதீரா' பாணியில் நாகர்ஜுனா படத்தை இயக்கும் 'சிவ பக்தர்' தனுஷ்
'மகதீரா' பாணியில் நாகர்ஜுனா படத்தை இயக்கும் 'சிவ பக்தர்' தனுஷ்

ஏற்கெனவே, ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் நடித்த  'பவர் பாண்டி' படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ். அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், ஶ்ரீகாந்த், அதிதிராவ் என்று பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார். தனுஷ் பிரமாதமான பெர்ஃபாமென்ஸ் நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், உண்மையில் தீவிரமான சிவ பக்தர் என்பது பலபேருக்குத் தெரியாத சங்கதி.

'மகதீரா' பாணியில் நாகர்ஜுனா படத்தை இயக்கும் 'சிவ பக்தர்' தனுஷ்

'மகதீரா' பாணியில் இயக்கிவரும் தனுஷ் படமும் பீரியாடிக் படம்தான் என்று சொல்கிறார்கள். தெலுங்கில் ஜாம்பவான் டைரக்டர்களின் இயக்கத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்த நாகர்ஜுனா, ஒரேநாளில் ஏகப்பட்ட காட்சிகளை அதிவேகமாக டைரக்‌ஷன் செய்யும் தனுஷின் திறமையைக் கண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் மனம்திறந்து பாராட்டி இருக்கிறார். இந்தப் படத்தின் மையக்கரு சிவபெருமான் குறித்த பக்தி விஷயம் என்பதால் தினசரி பூஜை, புனஸ்காரம் என்று வீட்டிம் முடித்துவிட்டே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். ரஜினி தீவிரமான ஶ்ரீராகவேந்திரா சுவாமியின் பக்தர் என்பது உலகறிந்த செய்தி. அவரின் மாப்பிள்ளை மகா சிவபக்தர் என்பதை அறிந்து சினிமா உலகைச் சார்ந்தவர்களே அவரை ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். இதுவரை தனுஷ் இயக்கும் படத்துக்கு பெயர் சூட்டாத நிலையில் ஒருசிலர்  'ருத்ரன் ' என்று டைட்டில் வைக்கலாமா என்று யோசித்து வருவதாகச் சொல்கிறார்கள்.      

Vikatan

எம்.குணா