Published:Updated:

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா
``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

"2007 முதல் 2019 வரை ஷூட்டிங் தொடங்கிய படங்களின் எண்ணிக்கை 1200. இவற்றில், படப்பிடிப்பு முடிந்து சென்சாருக்கு சென்ற படங்கள் 450; முழுமையடையாத படங்கள் எற்றத்தாழ 250; தியேட்டரில் ரிலீஸாகும் நிலையில் உள்ள படங்கள் 200; ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் 200."

சிறு பட்ஜெட் திரைப்படங்கள் மற்றும் புதுமுகங்களின் பங்களிப்பில் உருவாகும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பற்ற ஒரு பொருளாகத்தான் பார்க்கப்படுகின்றன. நல்ல கதைகள், கருத்துகள் இருந்தும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பெரிய பெயர்கள் இல்லாததால் காணாமல்போகும் எத்தனையோ படங்களைப் பார்க்கிறோம். தங்களை ஒரு பொருட்டாகக்கூட இந்தத் திரைத்துறை மதிப்பதில்லை எனக் குறை கூறுகிறார்கள், சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள். ஆனால், ஒரு சிறு பட்ஜெட் படமொன்றை எடுத்து, தியேட்டரில் அதன் ஆயுள்காலம் முடிந்தும், அப்படத்தை லோக்கல் கேபிள் சேனல் மூலமாக ரசிகர்களின் வீடுகளுக்கே எடுத்துச் சென்றிருக்கிறார், `மனுசனா நீ' படத்தைத் தயாரித்து, இயக்கிய கஸாலி.

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``நான் புதுமுகத் தயாரிப்பாளர். சின்னப் படம் பண்ணும்போதுதான் அவங்க திரைப்பட பிசினஸைக் கத்துக்கிறாங்க. இண்டஸ்ட்ரியில நமக்கு நண்பர்கள் பலபேர் இருந்தும், என் படத்தை யாரும் ரிலீஸ் பண்றதுக்கு உதவி பண்ணல. அதனால, என் படத்தை நானே சொந்தமா ரிலீஸ் பண்ணேன். திருப்பூர் சுப்ரமணியம் சார் கன்ட்ரோல்ல இருக்கிற ஏரியா மட்டும்தான் `மனுஷனா நீ' படத்தின் தியேட்டர் வசூல் எவ்ளோனு கணக்கு கொடுத்தது. இடையில நான் அந்தப் படத்தின் பைரஸி பிரச்னைக்காக போலீஸ்கிட்ட போயிட்டேன். மற்ற ஏரியா தியேட்டர்காரங்க யாரும் கணக்கு தரல. தமிழ்நாடு தியேட்டர்ஸ் தவிர, தெலுங்கு டப்பிங், இந்தி டப்பிங், ஓவர்சீஸ்... இதன்மூலமா படத்துக்கு வந்த தொகையும் ரொம்பக் கம்மியா இருந்தது. என் படம் மெடிக்கல் க்ரைம் சம்பந்தப்பட்ட கதை. அதனால, எப்போவேணா வித்துப்பேன்னு சொல்லிட்டேன்" என்றவர், தொடர்ந்து சிறுபட்ஜெட் படங்களுக்கான வியாபார விஷயங்கள் பலவற்றைப் பகிர்ந்தார்.

``5000 கேபிள் ஆபரேட்டர்கள் சேர்ந்து `டி.சி.சி.எல்'ங்கிற செட் டாப் பாக்ஸ் கம்பெனி நடத்துறாங்க. இவர்களை அணுகி, என் படத்தைத் தமிழகம் முழுக்க ஒளிபரப்பு செய்யப்படும் `தமிழ் விஷன்' சேனலுக்கு விற்றேன். 2018-ம் ஆண்டு செப்டம்பர் வரை 13 லட்சம் செட் டாப் பாக்ஸுகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன. அப்போவே நான் எடுத்த `மனுசனா நீ' படத்தை 1,24,000 வீடுகளில் பார்த்திருக்கிறார்கள். என் படத்துக்காக நான் பெற்ற முதல் வருமானமே இதுதான்." என்றவரிடம் சில கேள்விகளை வைத்தேன்.

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

``படங்களை இப்படி லோக்கல் சேனல்களுக்கு விற்பதில் சட்டரீதியான பிரச்னைகள் ஏதேனும் இருக்கா?"

``அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை, அதன் தயாரிப்பாளர் ஒளிபரப்பிற்காக யாருக்கும் விற்கலாம். ஆனால், லோக்கல் கேபிள் சேனலுக்குக் கொடுத்த படங்களை பெரிய சேட்டிலைட் சேனல்கள் ரைட்ஸ் வாங்கி ஒளிபரப்புவார்களா என்பது சந்தேகம்தான்."  

``லோக்கல் கேபிள் சேனல்களில் ஒரு திரைப்படத்திற்கு இருக்கும் வருமான வாய்ப்பு என்ன?" 

``ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பிரைவேட் லோக்கல் சேனல்களைக் (PLC - Private Local Channel) கணக்கில் எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் 1,800-க்கும் அதிகமான சேனல்கள் உள்ளன. ஒவ்வொரு சேனலுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கான ஒளிபரப்பு உரிமையைக் குறைந்தபட்சம் 1000 ரூபாய்க்கு விற்றால்கூட, ஒரு திரைப்படத்திற்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பது என் அடிப்படை கணக்கு. தவிர, இவற்றில் பெரும்பாலான லோக்கல் சேனல்கள் முறையான உரிமம் இல்லாமல் தமிழ்ப் படங்களை ஒளிபரப்பி வந்தவர்கள். அவர்களுக்கு இப்படியான ஒளிபரப்பு வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்காததும் ஒரு காரணம்.

அதைச் சாத்தியப்படுத்தும் முயற்சியாக அண்மையில் லோக்கல் சேனல் உரிமையாளர்கள் மற்றும் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் இருவரையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். எதிர்பார்த்ததைவிட, இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு அவர்களிடமிருந்து கிடைத்தது. அந்தக் கூட்டத்தில் 69 படங்களின் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். கில்டில் இருந்து 27 பேர், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 10 பேர், ஃபிலிம் சேம்பரிலிருந்து 3 பேர் வந்திருந்தார்கள். அதிலிருந்து 43 படங்களுக்கான முழு விவரம் பெறப்பட்டிருக்கிறது. இத்தனை உறுப்பினர்கள் தங்கள் படங்களை பிசினஸ் செய்ய வழி தெரியாமல் இருப்பதற்குக் காரணம், அந்தந்த சங்கங்களின் வழிகாட்டுதல் இல்லாததே காரணம்."   

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

``கலந்துகொண்ட லோக்கல் சேனல் உரிமையாளர்களுக்கு, சிறுபட்ஜெட் படங்கள் ஈர்க்க என்ன காரணம்?" 

``ஒவ்வொரு லோக்கல் சேனலுக்கும், அவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களை ஒளிபரப்ப சினிமாக்கள்தான் தேவைப்படுகின்றன. சிறு படங்களின் காட்சிகள், பாடல்கள் எனப் பல்வேறு விதமான விஷயங்களில்தான் அவர்கள் சேனலையே ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல் அவர்களுக்கு இல்லாததால், சட்ட விரோதமாக ஒளிபரப்புகிறார்கள். தற்போது அவர்களே அதை உரிமம் பெற்று பண்ண நினைக்கிறார்கள். இந்த முயற்சி சாத்தியமானால், உரிமம் இல்லாமல் படங்களை ஒளிபரப்பும் லோக்கல் சேனல் உரிமையாளர்களை, சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் உரிமையுடன் கேட்கலாம்." 

``நீங்க இயக்கிய `மனுசனா நீ' தவிர, வேறு என்னென்ன படங்கள் லோக்கல் சேனல்களுக்கு விற்பனை ஆகியிருக்கின்றன?" 

`` `காதல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்', `காவாளி', `அரியின் திரைப்பட வரலாறு', `ஆவிப்பெண்', `கனவு நேரக் காட்சிகள் (ஏ சான்றிதழ்)' மற்றும் விரைவில் ரிலீஸாகவிருக்கும் `வாண்டுகள்' ஆகிய படங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. தற்போது தமிழகம் முழுக்க 22 லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் உள்ளன. ஒரு படத்தைப் பார்க்க 5 ரூபாய் என்றாலும், இரண்டு லட்சம் பேர் பார்த்தாலே ஒரு படத்திற்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்."

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

``தனி நபராக இதை முன்னெடுப்பதன் நோக்கம் என்ன?"

``நான் எனது படத்தை லோக்கல் கேபிள் சேனலுக்கு விற்று சம்பாதிப்பதைப்போல, மற்ற தயாரிப்பாளர்களுக்கும் இப்படியான வியாபார சந்தையை அறிமுகப்படுத்தவே இதைச் செய்கிறேன். முன்பெல்லாம் சென்னையைத் தவிர்த்து வெளி மாவட்டங்களிலிருந்தும் படத் தயாரிப்பில் முதலீடு செய்ய ஆள்கள் வருவார்கள். இன்று அப்படி யாரும் வருவதில்லை. பெரிய ஹீரோக்களின் படங்களைத் தவிர வேறு எந்தப் படத்துக்கும் தயாரிப்பாளரும் கிடைப்பதில்லை; ஃபைனான்ஸும் கிடைப்பதில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பம் தலைதூக்கத் தொடங்கிய சமயத்தில் ஒருநாளைக்கு 100 படங்களின் ஷூட்டிங் நடந்தன. இன்றைக்கு 20-க்கும் குறைவான படங்களின் ஷூட்டிங்தான் நடக்கிறது. படங்களின் தொடர் தோல்விகள்தாம் இதற்குக் காரணம்.

2007 முதல் 2019 வரை ஷூட்டிங் தொடங்கிய படங்களின் எண்ணிக்கை 1200. இவற்றில், படப்பிடிப்பு முடிந்து சென்சாருக்கு சென்ற படங்கள் 450; முழுமையடையாத படங்கள் எற்றத்தாழ 250; தியேட்டரில் ரிலீஸாகும் நிலையில் உள்ள படங்கள் 200; ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் 200. இதெல்லாம் கிட்டத்தட்ட சரியான கணக்குதான். ஓரளவுக்கு நல்ல படைப்பாக இருந்தும், தியேட்டரில் ரிலீஸாகாமல் இருக்கும் அந்த 200 படங்களுக்குப் போதுமான வியாபார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்தடுத்து பல சிறுபட்ஜெட் படங்கள் வெளியாகும். தயாரிக்க முதலீட்டாளர்களும் நிறைய வருவார்கள். இதெல்லாம் சரியாக நடக்க ஆரம்பித்தால், நானும் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவேன்." 

``1800 லோக்கல் கேபிள்களிடமிருந்து 1000 ரூபாய் வாங்கினால், 18 லட்சம் லாபம்!" - சிறுபட்ஜெட் படங்களுக்கு பிசினஸ் ஐடியா

``லோக்கல் கேபிள்களில் இருக்கும் வருமான வாய்ப்புகளைச் சொல்லித்தானே விஷால் சங்கத் தேர்தலில் ஜெயித்தார்?!" 

``ஆம், ஆனால் நடந்தது வேறு. இந்த நிர்வாகம் எங்களை மாதிரி ஆள்களைப் பொருட்படுத்தவில்லை. கேபிள் டிவி ஆள்களால் எவ்வளவு தொகை தரமுடியுமோ, அதைத்தான் அவர்களிடமிருந்து எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் `லோக்கல் கேபிள் டிவி மூலமாக மாதம் 1.5 கோடி ரூபாய் வருமானம் வரும்' எனச் சொல்லி கைதட்டல் வாங்கினார், விஷால். மாதம் 10,000 ரூபாய் எனச் சொல்லியிருந்தால், அவர்கள் கட்டியிருப்பார்கள். 40,000, 50,000 எனக் கேட்டால், அவர்களால் அதைக் கட்ட முடியாது."

``லோக்கல் கேபிள் சேனல்கள் தவிர, வேறு எந்தெந்த வகையில் ஒரு படத்திற்கு வருமானம் கொண்டுவரத் திட்டம்?" 

``லோக்கல் கேபிள் டிவி உரிமையாளர்களைப்போல, ஆம்னி பஸ் உரிமையாளர்களும் தற்போது உரிமம் பெற்று பேருந்துகளில் இப்படங்களை ஒளிபரப்பக் கேட்டிருக்கிறார்கள். தவிர, டிஷ் டிவி போன்ற தளங்களும் உள்ளன. ஒரு நல்ல தமிழ்ப் படத்தை 28 மொழிகளுக்கு டப்பிங் செய்து விற்கலாம் என்ற வியாபாரச் சூழல் இருக்கிறது. இந்தி டப்பிங் உரிமைக்குக் கொடுக்கும்போது, அனைத்து வடமொழிகளுக்கும் சேர்த்து ஒரே அக்ரிமென்ட்டில் மும்பை கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள், இங்கிருக்கும் தயாரிப்பாளர்கள். அந்த நிலை மாறினால், மேலும் பல வருமான வாய்ப்புகள் பெருகும்." 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு