Published:Updated:

`என் மகளுக்கு நிறைய சினிமா ரோல் வருது; ஆனா, எங்களுக்கு விருப்பமில்லை!' - நடிகை ரேகா

1980-களில் நாயகியாக நடித்துப் புகழ்பெற்ற ரேகா, தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறார். தன் திரைப்பயணம் குறித்துப் பேசுகிறார்...

`என் மகளுக்கு நிறைய சினிமா ரோல் வருது; ஆனா, எங்களுக்கு விருப்பமில்லை!' - நடிகை ரேகா

``சினிமா பத்தி எதுவுமே தெரியாத மாணவியா இருந்தேன். இயக்குநர் பாரதிராஜா சார், `கடலோரக் கவிதைகள்' படத்தின்மூலம் என்னை ஹீரோயினா அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நிறையப் படங்கள்ல நடிச்சேன். அந்தக் காலத்துல ஹோம்லி ரோல்லதான் அதிகம் நடிச்சேன். ஒருகட்டத்துல சென்டிமென்ட்டா, அழுதுகிட்டே நடிக்கிற ரோல்கள்லதான் என்னால நடிக்க முடியும்னு முத்திரை குத்திட்டாங்க. அப்போ, அதைப்பத்தி நான் பெரிசா எடுத்துக்கலை.

பிறகு, நான் ரீ-என்ட்ரி கொடுத்துப் பல வருஷமாகிடுச்சு. ஆனா, இப்போவரை நான் ஆசையா எதிர்பார்க்கிற ரோல்கள் எனக்கு வரலை. இன்னும்கூட அழுகாச்சி ரோல்கள்லதான் என்னால நடிக்க முடியும்னு நினைக்கிறாங்க. அது உண்மையில்லை. எனக்கு ரொம்பவே நெகட்டிவான வில்லி மற்றும் காமெடி ரோல்கள்ல நடிக்க ரொம்ப ஆசை. ஆனா, அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்துகிட்டிருக்கேன். என் மகளுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. அதில், பொண்ணுக்கும் எனக்கும் உடன்பாடில்லை" என்கிறார், ரேகா. 
 
Vikatan