Published:Updated:

`என் வாய் பேசாது, கைதான் சார் பேசும்!' - முரட்டு போலீஸ் அதர்வாவின் '100' பட டிரெய்லர்

அலாவுதின் ஹுசைன்
`என் வாய் பேசாது, கைதான் சார் பேசும்!' - முரட்டு போலீஸ் அதர்வாவின்  '100' பட டிரெய்லர்
`என் வாய் பேசாது, கைதான் சார் பேசும்!' - முரட்டு போலீஸ் அதர்வாவின் '100' பட டிரெய்லர்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள '100' படத்தின் டிரெய்லர் ரிலீஸானது. 

`என் வாய் பேசாது, கைதான் சார் பேசும்!' - முரட்டு போலீஸ் அதர்வாவின்  '100' பட டிரெய்லர்

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த 'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய படங்களை இயக்கிய சாம் அண்டன் இயக்கியிருக்கும் படம், '100'. இதில், போலீஸ் அதிகாரியாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும் நடிக்கின்றனர். துடிப்பான புதிய போலீஸ் அதிகாரியாக இருக்கும் அதர்வாவுக்கு, போலீஸ் கன்ட்ரோல் ரூமில் போஸ்டிங் கிடைக்க அவர் என்னென்ன செய்கிறார் என்பதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

`என் வாய் பேசாது, கைதான் சார் பேசும்!' - முரட்டு போலீஸ் அதர்வாவின்  '100' பட டிரெய்லர்

மேலும், ராதாரவி, ஆடுகளம் யோகி பாபு, 'எரும சாணி' புகழ் ஹரிஜா உள்ளிட்டோர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், போலீஸ் சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், அதர்வா - ஹன்சிகா ஜோடி முதன்முறையாகச் சேர்ந்திருப்பதாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.  

Vikatan

அலாவுதின் ஹுசைன்