Published:Updated:

"அனிருத் மூலம் வந்த வாய்ப்பு, பிரதர் நானி, சர்ப்ரைஸ் ஹீரோயின், தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு படம்!" - ஹரிஷ் கல்யாண்

"அனிருத் மூலம் வந்த வாய்ப்பு, பிரதர் நானி, சர்ப்ரைஸ் ஹீரோயின், தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு படம்!" - ஹரிஷ் கல்யாண்
"அனிருத் மூலம் வந்த வாய்ப்பு, பிரதர் நானி, சர்ப்ரைஸ் ஹீரோயின், தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு படம்!" - ஹரிஷ் கல்யாண்

நானியுடன் 'ஜெர்ஸி' படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடிச்சிருந்தாலும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த படங்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் பாப்புலரானவர், ஹரீஷ் கல்யாண். சமீபத்தில் நானி, ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெர்ஸி' படத்தில் நடித்திருக்கிறார். 

"அனிருத் மூலம் வந்த வாய்ப்பு, பிரதர் நானி, சர்ப்ரைஸ் ஹீரோயின், தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு படம்!" - ஹரிஷ் கல்யாண்

" 'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களைப் பார்த்துட்டு, அனிருத்தின் நண்பர் சித்தார்த் மூலமாதான் 'ஜெர்ஸி' படத்துக்காக என்னை அப்ரோச் பண்ணாங்க. என் ரெண்டு படங்களுடைய தெலுங்கு டப்பிங் வெர்ஷன் ரிலீஸாகவிருக்கிற நேரத்துல இந்தப் படத்துல சின்ன ரோல்ல பண்றது சரியா இருக்குமான்னு யோசனை இருந்தது. அப்புறம், நடிகர் நானி எனக்குப் போன் பண்ணி 'உங்க படங்களைப் பார்த்திருக்கேன் பிரதர். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நீங்க இந்தக் கேரக்டர் பண்ணா நல்லா இருக்கும். இந்தப் படத்தை ஆரம்பிக்கிறதும் முடிக்கிறதும் உங்க கேரக்டர்தான்'னு சொன்னார். அப்புறம், டைரக்டர்கிட்ட கதை கேட்டுட்டு நானிக்குப் போன் பண்ணி, 'நீங்க கொடுத்த நம்பிக்கையிலதான் பண்றேன் பிரதர்'னு சொன்னேன். அப்படித்தான் 'ஜெர்ஸி' படத்துக்குள்ள நான் வந்தேன்" என்றவர், தொடர்ந்தார்.

"அனிருத் மூலம் வந்த வாய்ப்பு, பிரதர் நானி, சர்ப்ரைஸ் ஹீரோயின், தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு படம்!" - ஹரிஷ் கல்யாண்

"ஹைதராபாத்ல 'ஜெர்ஸி' படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த சின்னப் பையனுக்கும் என் கேரக்டருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அதைக் கவனிச்சுதான் என்னை இதுல நடிக்கக் கூப்பிட்டிருக்காங்கனு தோணுச்சு. உடனே நானிக்குப் போன் பண்ணி, 'உங்களை இனி பிரதர்னு கூப்பிடுறதா இல்லை, நானானு கூப்பிடுறதா'னு கேட்டேன். அவர் சிரிச்சார். ஏன்னா, அவருக்கு மகனா நான் நடிச்சிருந்தேன். 10 நிமிடம் படத்துல வந்தாலும் என் கேரக்டர் ரொம்ப எமோஷனலானது. ஷ்ரத்தாவை வயசான கெட்டப்ல பார்த்ததும் எனக்கு அடையாளம் தெரியலை. சூப்பரா நடிச்சிருந்தாங்க. எனக்கும் நானி சாருக்குமான காம்பினேஷன் இல்லை. இருந்தாலும், என் சீன் எடுக்கும்போதெல்லாம் ஸ்பாட்டுக்கு வந்து என்கரேஜ் பண்ணார். 'எனக்கு நானே டப்பிங் பேசுறேன்'னு சொல்லியிருந்தேன். 'அதுக்கு என்ன பண்ணலாம்னுதான் யோசிச்சுக்கிட்டு இருக்கோம்'னு சொன்னாங்க. அப்புறம் ஒருநாள் கால் பண்ணி, 'உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. தியேட்டர்ல தெரியும்'னு சொன்னாங்க.

பார்த்தா, எனக்கு நானியே வாய்ஸ் கொடுத்திருந்தார். நான் பேசுனது மாதிரியே இருந்தது, எனக்கு செம ஷாக்! 'நான் அடுத்து தெலுங்குல பண்ணப்போற படங்களுக்கு நீங்களே டப்பிங் பண்ணி கொடுத்துடுங்க'னு சொல்லிச் சிரிச்சேன். நான் ஹீரோவா ஒரு படம் நடிச்சிருந்தா என்ன ரெஸ்பான்ஸ் வருமோ அந்தளவுக்கு வந்தது. தமிழ், தெலுங்குனு சினிமாத்துறையில இருக்கிற பலபேர் ட்வீட் பண்ணாங்க. என் வீட்டுலேயும் எல்லோரும் செம ஹாப்பி. தெலுங்குப் படத்துல நடிக்கிற வாய்ப்பும் வர ஆரம்பிச்சிருக்கு. தமிழ்ல இன்னும் கொஞ்சம் படங்கள் பண்ணிட்டு, அப்புறம் தெலுங்குல ஒரு படம் பண்ணணும்னு பிளான் பண்ணியிருக்கேன்" என்று முடித்த ஹரீஷிடம், 'தனுசு ராசி நேயர்களே' பற்றிக் கேட்டேன்.    

"அனிருத் மூலம் வந்த வாய்ப்பு, பிரதர் நானி, சர்ப்ரைஸ் ஹீரோயின், தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு படம்!" - ஹரிஷ் கல்யாண்

"செம ஜாலியா ஷூட் போய்க்கிட்டுருக்கு. மத்த படங்களைவிட இதுல வெரைட்டி காட்டணும்னு தயாராகிட்டு இருக்கோம். ரியா சக்ரபோர்டி, ரெபா மோனிகா இந்த ரெண்டு பேர் தவிர, இன்னொரு ஹீரோயினும் இருக்காங்க. அது சஸ்பென்ஸ். ஜிப்ரான் ஒரு பாட்டு கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டார். 'எத்தனையோ ராசிகள் இருக்கும்போது ஏன் தனுசு ராசின்னு டைட்டில் வச்சீங்க'னு பலரும் கேட்குறாங்க. 'குருப்பெயர்ச்சி நடந்துக்கிட்டு இருக்கிறதுனால, தனுசு ராசிக்காரங்களுக்கு நேரம் நல்லாயிருக்காம். அந்த பாசிட்டிவ் வைப்ரேஷன் படத்திலும் இருக்கணும்னு இந்தப் பெயரை வச்சிருக்கார் டைரக்டர் சஞ்சய் பாரதி." 
   

Vikatan
அடுத்த கட்டுரைக்கு