Published:Updated:

`நீங்க சொல்றத கேட்க நான் உங்க கட்சி தொண்டன் இல்ல!' - த்ரிஷாவின் `பரமபதம்' டிரெய்லர்

தார்மிக் லீ
`நீங்க சொல்றத கேட்க நான் உங்க கட்சி தொண்டன் இல்ல!' - த்ரிஷாவின் `பரமபதம்' டிரெய்லர்
`நீங்க சொல்றத கேட்க நான் உங்க கட்சி தொண்டன் இல்ல!' - த்ரிஷாவின் `பரமபதம்' டிரெய்லர்

`96' படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து `பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து த்ரிஷா நடிக்கும் 60-வது படமான `பரமபதம் விளையாட்டு' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

`நீங்க சொல்றத கேட்க நான் உங்க கட்சி தொண்டன் இல்ல!' - த்ரிஷாவின் `பரமபதம்' டிரெய்லர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்து மழை பொழிகிறது. அறிமுக இயக்குநர் கே.திருஞானம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் `பரமபதம் விளையாட்டு'. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அரசியல் பேசியிருப்பது டிரெய்லரைப் பார்த்தபின் தெரிய வருகிறது. இந்தப் படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் நந்தா, ரிச்சர்டு, கே.எல்.அழகப்பன், வேலா ராமமூர்த்தி, சாம்ஸ், சோனா போன்றவர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். `இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மான்ஸ்வி, இந்தப் படத்தில் த்ரிஷாவின் மகளாக நடிக்கிறார். அம்ரிஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜே.தினேஷ் ஒலிப்பதிவு செய்துள்ளார். 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜானு (எ) த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Vikatan