Published:Updated:

``அடுத்த படத்தில் அவருக்கு நான்தான் ஜோடி!” - ரேகா கமென்டால் `ஜெர்க்'கான யோகி பாபு

அலாவுதின் ஹுசைன்
``அடுத்த படத்தில் அவருக்கு நான்தான் ஜோடி!” - ரேகா கமென்டால் `ஜெர்க்'கான யோகி பாபு
``அடுத்த படத்தில் அவருக்கு நான்தான் ஜோடி!” - ரேகா கமென்டால் `ஜெர்க்'கான யோகி பாபு

யோகி பாபு எமதர்மராஜாவாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு. ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. ஜஸ்டின் பிரபாகரன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். 

``அடுத்த படத்தில் அவருக்கு நான்தான் ஜோடி!” - ரேகா கமென்டால் `ஜெர்க்'கான யோகி பாபு

இப்படத்தில் காமெடியோடு அரசியலும் பேசியிருப்பது டீசரில் இடம்பெறும் வசனங்களிலிருந்தே தெரிகிறது. மேலும், படத்தில் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி ஆகியோர் நடிக்கிறார்கள். 

படத்தின் இயக்குநர் முத்துக்குமார் பேசும்போது, ``நான் நல்லா இருக்கும்னு நினைக்கிற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் வேலை செஞ்சிருக்காங்க... தவிர, என்னோட முதல் படம் `கன்னிராசி’. அதில் நடித்த நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறாங்க... ரேகா மேடம் போன படத்தில பேமன்ட் செட்டாகலனு நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. இந்தப் படத்துல கண்டிப்பா நடிக்கணும்னு கேட்டேன்” என்று சொல்லும்போது ரேகா எழுந்து வந்து ``சின்ன வயசுல நடிக்கும்போது சம்பளம்லாம் பேசுனதில்ல... இப்போ கேட்டு நடிக்கிறேன்.

``அடுத்த படத்தில் அவருக்கு நான்தான் ஜோடி!” - ரேகா கமென்டால் `ஜெர்க்'கான யோகி பாபு

தப்பா நினைக்க வேண்டாம். அதனால இந்தப் படத்துல யோகிபாபு இருக்குறார்னு அம்மா கேரக்டருக்கு உடனே ஓகே சொல்லிட்டேன். இதுக்கு அப்பறம் நான் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பேன்'' என்று கூறினார். 

இதைக்கேட்ட `ஜெர்க்'கான யோகி பாபு, “அடுத்த படத்தில் பெரியம்மா கேரக்டர்தான்’ என்றார் காமெடியாக...!

அலாவுதின் ஹுசைன்