Published:Updated:

`அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப் இன்டர்வியூ; இந்திய பாஸ்போர்ட்’ - அக்‌ஷயைக் கலாய்த்த சித்தார்த்

தார்மிக் லீ
`அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப் இன்டர்வியூ; இந்திய பாஸ்போர்ட்’ - அக்‌ஷயைக் கலாய்த்த சித்தார்த்
`அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப் இன்டர்வியூ; இந்திய பாஸ்போர்ட்’ - அக்‌ஷயைக் கலாய்த்த சித்தார்த்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், சித்தார்த். சமீபத்தில் 'அவள்', 'ஜில் ஜங் ஜக்', 'அரண்மனை 2' போன்ற படங்களில் நடித்திருந்தார். ட்விட்டரில் ஆக்டிவ்வாக  இருக்கும் இவர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை மென்ஷன் செய்து ட்வீட் பகிர்ந்துள்ளார்.

`அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப் இன்டர்வியூ; இந்திய பாஸ்போர்ட்’ - அக்‌ஷயைக் கலாய்த்த சித்தார்த்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான '2.0' படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய் குமார், பாலிவுட்டின் முக்கிய நடிகர். சமீபத்தில் இவர், இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்து பேட்டி எடுத்திருந்தார். இவர், கனடா நாட்டின் குடியுரிமை, இந்திய நாட்டுக் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருப்பதால், நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றும் சில சர்ச்சைகள் இவர்மீது எழுந்தன. அதற்கு, ''எனது குடியுரிமையைப் பற்றி ஏன் தேவையில்லாத விமர்சனங்கள் எழுகின்றன என்பது எனக்குப் புரியவில்லை. என்னிடம் கனடா நாட்டின் பாஸ்போர்ட் இருப்பதை மறைக்கவோ மறுக்கவோ இல்லை. அதே சமயம், கடந்த ஏழு ஆண்டுகளில் நான் கனடாவிற்கும் செல்லவில்லை. நான் இந்தியாவில் வேலை செய்கிறேன், அதற்கான வரிகளையும் செலுத்துகிறேன். எனது குடியுரிமையைப் பற்றி விமர்சிப்பது எனக்கு அதிருப்தியளிக்கிறது. என்னால் முடிந்த அளவு இந்தியாவை வலுப்படுத்துவேன்'' என்று தனது ட்வீட் மூலம் இதற்குப் பதிலளித்திருந்தார். 

`அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப் இன்டர்வியூ; இந்திய பாஸ்போர்ட்’ - அக்‌ஷயைக் கலாய்த்த சித்தார்த்

இதைக் கலாய்க்கும் விதமாக ட்ரம்ப்பை டேக் செய்த நடிகர் சித்தார்த் , "அமெரிக்க அதிபராக மீண்டும் நீங்கள் பதவியேற்க உள்ளீர்கள். தேர்தல் நேரத்தில் எனக்கு நீங்கள் பேட்டி கொடுக்க முடியுமா? நீங்கள் எப்படி பழம் சாப்பிடுவீர்கள், உங்கள் தூக்கம், உங்களது அன்றாட வேலைகள் என்ன, உங்களுடைய அழகான ஆளுமைகள் சார்ந்து பல கடினமான கேள்விகள் என்னிடம் உள்ளன. போக, என்னிடம் இந்திய பாஸ்போர்ட்டும் உள்ளது. எனக்கு மெசேஜ் அன்னுப்பவும்'' என்று கலாய்த்து  ட்வீட் பகிர்ந்துள்ளார் சித்தார்த்.

தார்மிக் லீ

Dubsmasher, Entertainer