Published:Updated:

`` `லெட் மீ கோ' என கார்த்திக்கிற்கு SMS அனுப்பும் ஜெஸ்ஸி, ராமின் கரம் பற்றிக்கொண்டு அழுதபடி விடைபெற்ற ஜானு!" - #HBDTrisha

`` `லெட் மீ கோ' என கார்த்திக்கிற்கு SMS அனுப்பும் ஜெஸ்ஸி, ராமின் கரம் பற்றிக்கொண்டு அழுதபடி விடைபெற்ற ஜானு!" - #HBDTrisha
`` `லெட் மீ கோ' என கார்த்திக்கிற்கு SMS அனுப்பும் ஜெஸ்ஸி, ராமின் கரம் பற்றிக்கொண்டு அழுதபடி விடைபெற்ற ஜானு!" - #HBDTrisha

இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார், நடிகை த்ரிஷா. அவரைப் பற்றிய ஒரு ரீவைண்டு இது!

ன் டிவி-யில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் `அந்த வருடத்தின் கனவுக் கன்னி' என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் ஒரு பெயரை ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தப் பெயர்தான், த்ரிஷா. இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானால், இன்றும்கூட த்ரிஷா பெயரைத் தவறாமல் கேட்கலாம். திரைத் துறையில் 20 ஆண்டுகள் அழகு நடை போட்டுக்கொண்டிருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும்  ஜானு (எ) த்ரிஷாவுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். 

`` `லெட் மீ கோ' என கார்த்திக்கிற்கு SMS அனுப்பும் ஜெஸ்ஸி, ராமின் கரம் பற்றிக்கொண்டு அழுதபடி விடைபெற்ற ஜானு!" - #HBDTrisha

`ஜோடி' படத்தில் சிம்ரனுக்குப் பின்னால் நின்று ஒரேயொரு வசனம் பேசி சினிமாவுக்கு அறிமுகமானவர்தான், இந்த த்ரிஷா. ஒவ்வொரு படத்திலும் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும், கதாபாத்திரப் பெயர்களும் மாறுமே தவிர, 20 ஆண்டுகள் கழித்தும் இவரது சிரிப்பும், அழகும், த்ரிஷா என்கிற பெயரும் இன்றுவரை மாறவில்லை. பொதுவாக ஒரு கதாநாயாகி திரைத் துறையில் இப்படி ஜொலித்து நிற்பது லேசுப்பட்ட காரியமுமில்லை. `தனியாவா... பேசலாமே' என்று அழகாகக் கேட்கும் சந்தியாவாக, `பஸ்ல போறதுக்கு பஸ் பாஸ் இருக்கு. ஒருவேளை தொலைஞ்சா வர 2.50, போக 2.50... அஞ்சு ரூபா இருக்கு. மதியம் சாப்பிட தயிர்சாதம், மாவடு இருக்கு. இதுக்குமேல என்ன வேணும்' எனக் கேட்கும் அக்ரஹாரத்து புவனாவாக, ஃப்ளையிட்டுக்கு டைம் ஆனாலும் காரப்பொரி சாப்பிட ஆசைப்படும் தனலட்சுமியாக, 'தாலியைத் தங்கத்திலேயும் கோர்ப்பாங்க' எனச் செல்லமாகச் சண்டையிடும் மஹாவாக, பஞ்சாப் சிங்கை `இவன்தான் என் காதலன்' என அப்பாவிடம் அறிமுகப்படுத்தும் அபியாக, `எல்லாம் முடிஞ்சிடுச்சு கார்த்திக்' எனக் காதலை ப்ரேக்கப் செய்யும் ஜெஸ்ஸியாக, `இப்படி ஸ்மார்ட் ஆகிட்டா நாங்கலாம் என்ன பண்றது. எங்களையும் கொஞ்சம் யோசிக்கணும்ல' என்று காதலனிடம் குறும்பாகச் சொல்லும் ஹேமானிகாவாக, இழந்த காதலையும், காதலனையும் மீட்டெடுக்கத் தவறிய ஜானுவாக... என ஒவ்வொரு பெண்ணும் த்ரிஷாவின் கதாபாத்திரங்களைத் தங்களுக்குள் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு நடிகரைப் பிடிக்கப் பல காரணங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பின்னும் ஒரு நடிகரைப் பிடித்துப்போனால், அது கலைக்கு, அந்தக் கலைஞனுக்கு ரசிகர்கள் செலுத்தும் மரியாதை. இது உலகம் முழுக்க இருக்கும் பழக்கம். `இவ்வளவு வயசாகியும் எங்க தளபதி எவ்ளோ இளமையா இருக்கார் பார்த்தியா' எனக் கேட்கும் அதே ரசிகர்கள் பட்டாளம்தான், 67 வயதைக் கடந்து திரைத் துறையில் ராஜநடை போட்டு வரும் ரஜினிகாந்தை `சூப்பர் ஸ்டார்' என்று கொண்டாடுகிறது. குறிப்பிட்ட வயதுக்குமேல் கலைஞனுக்கு வயது தேவையில்லை. இது சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் போன்ற நடிகர்களுக்குச் சாத்தியம். எத்தனை வருடங்கள் கழித்து வேண்டுமானாலும் ஒரு நடிகன் படத்தின் கதாநாயகனாக நடிக்கலாம். அப்படியான ஒரு சூழலில் 20 ஆண்டுகள் கழித்தும் இன்றுவரை கதாநாயகியாக நடிப்பதைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர், த்ரிஷா. 

`` `லெட் மீ கோ' என கார்த்திக்கிற்கு SMS அனுப்பும் ஜெஸ்ஸி, ராமின் கரம் பற்றிக்கொண்டு அழுதபடி விடைபெற்ற ஜானு!" - #HBDTrisha

படத்தின் வெற்றியை இவர் அழகும் தீர்மானிக்குமென்றால், இவர் நடித்த ஒவ்வொரு படமும் சென்டம் வாங்கியிருக்கும். ஆனால், சில படங்களில் பல குறைகள் கண்டறிந்த சினிமா ஆர்வலர்கள், இவர் நடிப்பில் வெளிவந்த சில படங்களைத் தோல்வியென முத்திரை குத்தினார்கள். போதாக்குறைக்கு அந்தச் சமயத்தில் நயன்தாராவின் மார்கெட் டாப் கியரில் சென்றுகொண்டிருந்தது. இவரோடு அனுஷ்கா, ஜோதிகா போன்ற நடிகைகளின் வருகைக்குப் பிறகு த்ரிஷாவுக்கான மார்கெட் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. தமிழ் சினிமாவுக்குக் கொஞ்ச நாள் லீவு விட்டு, டோலிவுட் பக்கம் அதிகமாக நடிக்கத் தொடங்கினார். அங்கு சில படங்களுக்கு ஃபிலிம்பேர் விருதும் பெற்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 2010- ம் ஆண்டு கௌதம் மேனனின் ஜெஸ்ஸியாக வந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் நாம் காதலித்த, காதலிக்கும் ஜெஸ்ஸியைக் கட்டாயம் பார்த்திருப்போம். அந்தக் கதாபாத்திரம் கொடுக்கும் மெச்சூரிட்டியை அப்படியே தன் நடிப்பில் வெளிக்கொண்டு வந்தார். 

`விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸியின் நீட்சிதான் `96' ஜானு. மாடி வீட்டின் பால்கனியில் போன் பேசிக்கொண்டிருந்த ஜெஸ்ஸியைக் காதலிக்கத் தொடங்கும் கார்த்திக், `உலகத்துல இருக்க எல்லாப் பொண்ணுங்களையும் நான் தங்கச்சியா ஏத்துக்குறேன், உன்னைத் தவிர. I'm in love with you Jessy' என அவளிடம் தன் காதலைச் சொல்கிறான். அவளின் வீட்டுடன் சண்டையிட்டு இறுதியில் இருவரும் பிரிகிறார்கள். தன்னுடைய அப்பா மீதான மரியாதையால் ஜெஸ்ஸி வீட்டில் பார்ப்பவரையே கல்யாணம் செய்கிறார். இதுவரை ஜெஸ்ஸி. அப்படியே `96' ஜானு பக்கம் வருவோம். ஜானுவுக்குத் திருமணமாகி ஓர் அழகான பெண் குழந்தை உள்ளது. அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சென்னை வந்திருக்கும் ஜானு, ராமைப் பார்க்கிறாள். மறுநாள் ஊருக்குக் கிளம்பும் ஜானுவுக்கு, ராமுடன் ஒருநாள் இரவு கிடைக்கிறது. அந்த இரவு தீவாக மாறுகிறது. மொத்தத் தீவிலும் இவர்கள் இருவரும் மட்டும்தான். பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், பிரிந்து வாழ்ந்த அத்தனை வருட நிகழ்வுகளைப் பகிர்கிறார்கள். அதிகாலை இருவரும் இருவருடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். காதலித்த சமயத்தில் 'This is over. Please Karthik. Forget this . Forget everything. Let me go...' என கார்த்திக்கிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் ஜெஸ்ஸிதான், 10 வருடங்கள் கழித்து ராமின் கைகளைப் பிடித்து அழுதபடி விடைபெற்றுப் பிரிகிறாள். இந்த இரண்டு கதாபாத்திரங்களும்தான் த்ரிஷாவின் மைல்ஸ்டோன். 

`` `லெட் மீ கோ' என கார்த்திக்கிற்கு SMS அனுப்பும் ஜெஸ்ஸி, ராமின் கரம் பற்றிக்கொண்டு அழுதபடி விடைபெற்ற ஜானு!" - #HBDTrisha

எவர்க்ரீன் நாயகி த்ரிஷாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! 

அடுத்த கட்டுரைக்கு