Published:Updated:

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே வலிங்க..!’’ - முத்துக்காளை

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே வலிங்க..!’’ - முத்துக்காளை

"எனக்கு ஏற்கெனவே ஃபைட் என்கிற தொழில் இருக்கு. நடிப்பு வந்தா வரட்டும் வரலைனா போகட்டும் என்கிற ரீதியில்தான் கேமரா முன்னாடி நின்னேன். இதுவரை 240 படங்களுக்கும் மேல் நடிச்சிட்டேன்."

Published:Updated:

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே வலிங்க..!’’ - முத்துக்காளை

"எனக்கு ஏற்கெனவே ஃபைட் என்கிற தொழில் இருக்கு. நடிப்பு வந்தா வரட்டும் வரலைனா போகட்டும் என்கிற ரீதியில்தான் கேமரா முன்னாடி நின்னேன். இதுவரை 240 படங்களுக்கும் மேல் நடிச்சிட்டேன்."

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே வலிங்க..!’’ - முத்துக்காளை

'மாதவனின் கிராமத்துக் கனவு',  'எனை பனி சுடும்', 'என் காதலி சீன் போடுறா', 'பேயால கண்டம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் காமெடியன் முத்துக்காளை. சமீபத்தில் நடைபெற்ற 'வாங்கப் படம் பார்க்கலாம்' படத்தின் ஆடியோ ரிலீசின் போது 'நான் நல்லாத்தான் இருக்கேன்' என புலம்பித் தள்ளியிருக்கிறார் என்னவென்று அவரிடம் விசாரித்தேன். 

'' 'கடந்த வருடம் கொடுத்த ஒரு பேட்டியில் நான் திருந்திட்டேன். குடியை விட்டுவிட்டேன்' எனச் சொல்லியிருந்தேன். அந்த பேட்டியை சமூக வலைத்தளத்தில் எடுத்துப்போடும்போது தவறாக எழுதிட்டாங்க. அதில் உருமாறி கடைசியாக, 'குடியால் முத்துக்காளை இறந்துவிட்டார்' எனச் செய்திகள் பரவ ஆரம்பிச்சுடுச்சு. கடந்த வாரம் கூட என் நண்பர்கள் வட்டாரத்தில் என் குடும்பத்தாருக்கு போன் செய்து, 'சமீபத்தில்தானே பேசிட்டு இருந்தோம். திடீர்னு எப்படி?' என கேட்டுக் கொண்டிருந்தார்கள்'' எனப் புலம்பியவர், 

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே  வலிங்க..!’’ -  முத்துக்காளை

’’ 'வாங்கப் படம் பார்க்கலாம்' என்கிற படத்தின் ஆடியோ லான்சிற்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம், 'நான் சாகல நல்லாத்தான் இருக்கேன்’னு சொன்னேன். நான் குடிக்கு அடிமையானது உண்மைதான். அதிலிருந்து வெளியே வந்துட்டேன். யூடியூபில் இப்படி ஒரு செய்தியைப் போட்டதால, இப்போ நான் கமிட் ஆகியிருக்கும் படங்களில் உள்ளவர்கள் தயக்கத்தில் இருந்தார்கள். சில வருஷத்துக்கு முன்பு, நான் சரியான நேரத்துக்கு வருவேனா என்கிற குழப்பம் இருந்தது. இப்போ தெளிவாக இருக்கிறேன். எனக்குள் மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கு. இது எனக்கு இரண்டாவது பிறவிதான். முத்துக்காளைக்குப் படம் இல்லை அதனால்தான் தன்னைப் பற்றி இப்படியொரு புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார் என நினைத்துவிடக்கூடாது. அதுதான் என்னுடைய வருத்தம்.'' 

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே  வலிங்க..!’’ -  முத்துக்காளை

''நான் நடித்து முடித்திருக்கும் 26 படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கு. 26 படங்களில்,10 படங்கள் தனிக் காமெடியனாக நடிச்சிருக்கேன். எப்படி இருந்தாலும் இத்தனை வருஷம், எப்படியோ பல்டி அடிச்சு சினிமாவுக்குள்ள என் பெயர் தெரியும் அளவுக்கு இருந்துட்டேன். என் மகனுக்கு அவ்வளவு காலம் எடுத்துக்கூடாது என்பதில் தெளிவா இருக்கேன். என் மகன் வாசன் முரளி இப்போ ஏழாம் வகுப்புப் போறான். அவனுக்கு இப்பவே சண்டைப் பயிற்சி, சிலம்பம் என கத்துக் கொடுத்திருக்கிறேன். முறைப்படி எல்லாத்தையும் கத்துக்கிட்டு உள்ளப் போகணும். அங்கப் போய் கத்துக்க முயற்சிப் பண்ணக் கூடாது. இது என் பாலிசி. 

ஆரம்பத்தில் என்னை நம்பி யாரும் பொண்ணு கொடுக்கல. அக்கா பொண்ணு மாலதியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். லேட் மேரேஜ் என்றாலும் எதோ என் வாழ்க்கை அவங்களால் நல்லபடியா அமைஞ்சிருக்கு. எத்தனையோ பிரச்னைகளுக்குப் பிறகு என்ன சகிச்சுட்டு வாழறாங்க'' என்றவர், தான் எப்படி சினிமாவுக்குள் வந்தேன் என்கிற கதையையும் பகிர்ந்தார், 

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே  வலிங்க..!’’ -  முத்துக்காளை

’’எனக்குச் சொந்த ஊர், ராஜபாளையம், சங்கம்பட்டி. என்னுடைய கனவு ஃபைட் மாஸ்டர்தான். ப்ரூஸ்லி, ஜாக்கிசான் படங்கள் என்னுடைய ஃபேவரைட். 12 வயசிலேயே சண்டை கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். 18 வயசிலேயே கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன். 20 வயதில் கராத்தே வகுப்பு எடுத்தேன். கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் என்னிடம் கராத்தே கத்துக்கிட்டாங்க. சஞ்சீவி மலை அடிவாரத்தில்தான் எங்க வீடு இருக்கு. சஞ்சீவி மலை மேல் நிற்காம ஓடுவேன். இருக்கிற வசதியை வச்சு சண்டைப் பயிற்சியை கைவசமாக்கினேன். 

சினிமாவுல எனக்கு மூணு பேர் முக்கியமானவங்க. ஸ்டண்ட் சிவா மாஸ்டர், வின்சன்ட் செல்வா, வடிவேலு. இவங்கதான் எனக்கான பாதையை சரியா அமைச்சுக் கொடுத்தவங்க. ஒரு படத்தில் இப்போ ஹீரோவா நடிக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சிவா. ஸ்டன்ட் யூனியன் மெம்பராக ஆனப் பிறகு, நான் நடித்த முதல் படம், முரளி நடித்த  'இரணியன்'. அடுத்தது, பிரபு நடித்த 'பொன்மனம்' படத்தில்தான் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பிச்சேன். அந்த படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார். ஸ்டன்ட் பண்ணிட்டு இருந்த எனக்கு காமெடி செட் ஆகும்னு சொன்னது அவர்தான். அதுக்கப்புறம் தொடர்ந்து காமெடியில் நடிக்க ஆரம்பிச்சேன். வடிவேல் கூட சேர்ந்தப் பிறகுதான் எனக்குனு ஒரு பெயரும், அடையாளமும் வந்தது. 'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தில் 'செத்து செத்து விளையாடுவோமா..' டயலாக் மூலமா முத்துக்காளை வெளியத் தெரிய ஆரம்பிச்சான். 

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே  வலிங்க..!’’ -  முத்துக்காளை

'கார்மேகம்' இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமாரின் (அதே 'பொன்மனம்' இயக்குநர்) பார்வை பட்டதால்தான் எனக்கு அடுத்தடுத்து படத்திற்கான வாய்ப்புக் கிடைச்சது. ஆரம்பத்தில் நடிக்கும் போது, எந்த நம்பிக்கையும் இல்லை. எனக்கு ஏற்கெனவே ஃபைட் என்கிற தொழில் இருக்கு. நடிப்பு வந்தா வரட்டும் வரலைனா போகட்டும் என்கிற ரீதியில்தான் கேமரா முன்னாடி நின்னேன். இதுவரை 240 படங்களுக்கும் மேல் நடிச்சிட்டேன்'' என்பவர் விஜய்யுடன் பயணித்ததைப் பகிர்கிறார், 

`` ‘செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே  வலிங்க..!’’ -  முத்துக்காளை

'' ‘காதலுக்கு மரியாதை' அவருடன் எனக்கு முதல் படம். பிறகு, 'மின்சாரக் கண்ணா', 'தமிழன்', 'யூத்', 'மதுர', 'பகவதி' என தொடர்ந்து நடிச்சேன். 'தமிழன்' படத்தில் ரிக்‌ஷா ஓட்டுறனவா வந்து டயலாக் பேசுவேன். விஜய்யுடன் காம்பினேஷன் இல்லை என்றாலும், விஜய்யின் டயலாக்கைப் பேசியிருப்பேன். 'ரிக்‌ஷா காரன் சட்டம் தெரிந்தால் எப்படி பேசுவானோ அப்படி எதார்த்தமாக இருந்தது. உங்களுக்குப் படம் வந்தா சொல்றேன்ணா'னு விஜய் சொன்னார்’’ என்று சந்தோசப்பட்ட முத்துக்காளை, தற்போது 'அருப்புக்கோட்டையிலிருந்து அஜீத்' என்கிற படத்திலும் நடிக்கிறாராம்.