Published:Updated:

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு
``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

`கில்லி' படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இப்படத்தின் மேக்கிங் குறித்த சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், படத்தின் இயக்குநர் தரணி.

`கில்லி’ திரைப்படம், விஜய்க்கு மட்டுமல்ல; கமர்ஷியல் தமிழ் சினிமாவுக்கும் அடுத்தகட்ட பாய்ச்சல் என்றே சொல்லலாம். திரைப்படங்களில் பொதுவாக ஹீரோவுக்கு விளையாட்டு வீரர் கதாபாத்திரம் என்றால் அது பெரும்பாலும் கூடைப்பந்து, கிரிக்கெட் வீரர் கதாபாத்திரமாகவே இருக்கும். கபடி போன்ற கிராமப்புற விளையாட்டுகளுக்குத் திரைப்படங்களில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால், `கில்லி’யில் விஜய், கபடி வீரராக வருவார். படம் முழுவதும் `கபடி’க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.  

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

இன்று பிரகாஷ்ராஜ் எந்த மேடையேறினாலும், `ஹாய் செல்லம்’ என்று பேசத்தொடங்கி கைதட்டல்களை அள்ளுகிறாரே... அதற்கு உபயதாரரே இந்தக் `கில்லி’தான். இதேபோல, த்ரிஷாவுக்கு கமர்ஷியல் ஹீரோயின் அந்தஸ்து கொடுத்ததில் `கில்லி'க்கு முக்கியப் பங்குண்டு. தவிர, வெரைட்டியான வில்லன் கேரக்டர்களில் நடித்துவந்த ஆசிஷ் வித்யார்த்திக்கு இதில் குணச்சித்திர அப்பா கதாபாத்திரம். `ஓட்டேரி நரி’ தாமு, `அப்படிப்போடு’ என்று இளைஞர்களை ஆடவைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர். ஆக்‌ஷன் இருந்தாலும் சரி காமெடி சீனாக இருந்தாலும் பரதனின் எழுதிய வசனம் படத்துக்கு பெரிய பலமாக இருந்தது.... இப்படி ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அத்தனை பொருத்தங்களும் அம்சமாகப் பொருந்திய படம்தான், `கில்லி’. 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

இப்படம் வெளியாகி கடந்த ஏப்ரலுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, சினிமா ரசிகர்கள் நினைவு வைத்திருக்க முக்கியமான காரணம், இயக்குநர் தரணி. `கில்லி’ மேக்கிங் சுவாரஸ்யம் குறித்து பேச அவரைத் தொடர்பு கொண்டோம்.

``அப்போது விஜய்க்காக என்னிடம் மூன்று கதைகள் இருந்தன. ஒன்று முழுக்க முழுக்க கபடி விளையாட்டை மையப்படுத்திய கதை. இன்னொன்று ஹீரோயினை சென்னை லைட் ஹவுஸில் ஒளித்து வைத்திருப்பதுபோல அமைக்கப்பட்ட காதல் கதை. மற்றொன்று, காதலர்கள் தப்பியோடும் கார் சேஸிங் சம்பந்தமான அதிரடி ஆக்‌ஷன் கதை. பிறகு தெலுங்கில் வெளியான `ஒக்கடு' படத்துக்கும் என் மூன்று கதைகளுக்குமான தொடர்பைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. `ஒக்கடு' படத்தை ரீமேக் செய்வது என முடிவானதும் அதை அப்படியே ரீமேக் செய்யாமல் நான் உருவாக்கி வைத்திருந்த மூன்று கதைகளையும் அதோடு அடாப்ட் செய்தே `கில்லி'யை உருவாக்கினேன். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

இதுவரை பழைய கறுப்பு, வெள்ளை படங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தை ஓரிரு காட்சிகளில் காட்டி இருப்பார்கள். முதன்முதலாக கலரில் `கில்லி' படத்தில்தான் காட்டப்பட்டது. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் பங்குபெறும் காட்சிகளை அங்கு அதிகாலையில் படமாக்கினோம். அப்போது பெருங்கூட்டம் கூடிவிட்டது. ஆனால், விஜய் ரசிகர்களே கூட்டத்தைக் கட்டுப்படுத்தி எங்களுக்கு உதவி செய்தது மறக்க முடியாத நிகழ்வுகள்.  

கபடி விளையாட்டு, கார் சேஸிங், சண்டைக் காட்சிகள் என்று ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதை `ஒக்கடு' படத்தை பார்த்தபோதே விஜய் உணர்ந்து கொண்டார். அதற்கான ஹோம் வொர்க்கை தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். மதுரையில் சுமோ காரை இடித்துக்கொண்டு போகும் காட்சியை டூப் நடிகரை வைத்துப் படமாக்கலாம் என்று திட்டமிட்டேன். ஆனால், `எனக்கு டூப் வேண்டாம், நானே நடிக்கிறேன்' என்றார். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அந்த ரிஸ்க்கான காட்சியில் நடித்து யூனிட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

படத்தில் இடம்பெறும் கபடி விளையாட்டு, சினிமாத்தனமாக இல்லாமல் இருக்கவேண்டுமென உண்மையான கபடி வீரர்களை வரவழைத்து அவர்களோடு 20 நாள்கள் தனது வீட்டிலும், ஸ்டேடியத்திலும் பயிற்சி செய்தார், விஜய். விஜய்யின் ஒவ்வொரு மூவ்மென்ட்டைப் பார்க்கும்போது நிஜமான கபடி வீரராகவே தெரிவார். படத்தில் அவர் த்ரிஷாவை முதுகில் சுமந்துகொண்டு மலைமேல் ஓடவேண்டும், பள்ளத்தாக்கில் உருளவேண்டும். மழைத் தண்ணீர் ஊறிய சேறில் 15 நாள்கள் தொடர்ந்து நனைந்துகொண்டே இருக்கவேண்டும். அந்தக் காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது எளிதாகத் தெரியும். உண்மையில், உடம்பு முழுக்கச் சேற்றைப் பூசிக்கொண்டு சண்டை போடுவது என்று ஒவ்வொன்றையும் சலிக்காமல் டெடிகேஷனோடு நடித்துக் கொடுத்தார். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

அதேபோன்ற சிரமங்களை த்ரிஷாவும் படம் முழுக்க அனுபவித்தார். மகாபலிபுரத்தில் போடப்பட்ட லைட் ஹவுஸ் செட்டிலிருந்து த்ரிஷா கீழே விழுகிற காட்சியின்போது தரையில் நிறைய மெத்தைகளை அடுக்கி ரெடியாக வைத்திருந்தோம். ஒருமுறை மேலிருந்து கீழே விழுந்த த்ரிஷா, கொஞ்சம் நேரம் எதுவுமே பேசாமல் கிடந்தார். பயந்துபோய் கிட்டே சென்றபோது திடீரென எழுந்து, 'ஒன்ஸ்மோர் விழட்டுமா..' என்று கேட்டு வெறுப்பேற்றினார். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

த்ரிஷாவின் அண்ணனைக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்து வெளியே வருவார், பிரகாஷ்ராஜ். அப்போது அவரை த்ரிஷா பயந்தபடி வெறித்துப் பார்ப்பார். அப்போது மானிட்டரின் முன் இருந்த என்னிடம், `தரணி இங்கே நான் என்ன டயலாக் பேசுறது சொல்லுடா' என்று என்னைப் பார்த்துக் கேட்டார், பிரகாஷ்ராஜ். `நீங்க கண்ணாடியைப் போட்டபடி `ஹாய் செல்லம்'னு சொல்லுங்க' என்று சொன்னேன், சொன்னார். பிறகு அது அவருக்கான அடையாளமாகிவிட்டது. 

`தில்' படத்தில் கொடூர வில்லனாக என்னால் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிஷ் வித்யார்த்தி, `கில்லி' படத்தில் நேர்மை தவறாத போலீஸ் அதிகாரியாகவும், விஜய்யின் அப்பாவாகவும் நடித்திருந்தார். வித்யார்த்தி, ஜானகி, விஜய், ஜெனிஃபர் என்று ஒரு அழகான குடும்பத்தை மக்கள் தங்களுடைய பக்கத்து வீட்டைப்போல் ஏற்றுக்கொண்டனர். இதேபோல விமல், `ஆடுகளம்' முருகதாஸ் போன்ற கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் விஜய்யின் கபடி டீமில் விளையாடும் கபடி வீரர்களாக நடித்தனர்.

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பணியைப் பாராட்டியே ஆகவேண்டும். மிகவும் ரிஸ்க்கான சேஸிங் காட்சிகளைத் தொடர்ந்து 15 நாள்கள் படமாக்க ரொம்பவும் கஷ்டப்பட்டார். அப்போது டிஜிட்டல் கேமரா கிடையாது. நிலத்தின் அடியில் இருக்கும் தண்ணீரில் விஜய், த்ரிஷா நடிப்பதைப் படமாக்குவதற்கு ரொம்பவே சிரமப்பட்டோம். இசையமைப்பாளர் வித்யாசாகரின் பங்களிப்பு அதிகமானது. அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். `அப்படி போடு...' பாட்டு படத்தின் விசிட்டிங் கார்டாகவே மாறியது. இப்படிப் பாடலாசிரியர்கள் பா.விஜய், கபிலன், யுகபாரதி, நடன இயக்குநர்கள் ராஜு சுந்தரம், கல்யாண், சண்டைக் காட்சிகளை வடிவமைத்த ராக்கி ராஜேஷ் ஆகியோர்களை ஒருநாளும் மறவேன்.

லைட் ஹவுஸ் செட்டை கடற்கரை மணலில் போடுவது சிரமமானது. சென்னை லைட் ஹவுஸ் மகாபலிபுர கடற்கரையில் 200 அடி உயரத்தில் செட்டாக போடப்பட்டது. அதன்மேலே சுழல்விளக்கு அமைப்பது கடினமான ஒன்று. அதையும் சிறப்பாகச் செய்து முடித்தார் ஆர்ட் டைரக்டர் மணிராஜ். இதேபோல சென்னைப் பட்டினப்பாக்கத்தில் கபடி விளையாடும் தளத்தை செட்டாகப் போட்டிருந்தார். ஒருமுறை விஜய் கபடி விளையாடும் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம். ஏராளனமான மக்கள் கூடிவிட்டனர். அப்போது அந்தப் பக்கமாக காரில் சென்ற நடிகர் விக்ரம் திடீரெனத் தன் காரைத் திருப்பி `கில்லி' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். கபடி செட்டை பார்த்து பிரமித்துப்போய் மணிராஜை பாராட்டியவர், விஜய் கபடி விளையாடுவதை சிறிதுநேரம் பார்த்து ரசித்துவிட்டுச் சென்றார். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

பொதுவாக கபடி விளையாடும் காட்சிகளை ஷூட் செய்ததைவிட எடிட் செய்து கடினமான காரியமாக இருந்தது. அதேபோல கார் சேஸிங் காட்சிகளையும் பரபரப்பு குறையாமல் எடிட் செய்வது லேசுப்பட்ட விஷயமில்லை. அதை எடிட்டர் வி.டி.விஜயனும் அவரது டீமில் இருந்த கணேஷ் சசி, கிஷோர் சாத்தியப்படுத்தினர். 

ஒரே காஸ்ட்யூமில் விஜய்யும், த்ரிஷாவும் 30 காட்சிகளில் நடித்திருப்பார்கள். கன்டினியூட்டி பார்க்கும் உதவி டைரக்டர் கொஞ்சம் மறந்தாலும் படம் அவ்வளவுதான். மதுரை, விசாகப்பட்டினம், திருநெல்வேலி, ஹைதராபாத் என்று வெவ்வேறு இடங்களில் படமாக்கியதை மேட்ச் செய்து இணைக்கும் வேலைகளில் எனக்கு தோள்கொடுத்தவர்கள், இணை இயக்குநர்களான ஜெயபாலன், பாபுசிவன், அஸோசியேட்டுகளான சாந்தகுமார், ஜவஹர், நாகேந்திரன், வித்யாரெட்டி, சூர்யா, சாப்ளின் ஆகியோர். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

என் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. படத்தை உருவாக்க பெரும் பலமாக இருந்தார். சினிமா உலகில் வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்பது சென்டிமென்ட். ஆனால், `கில்லி' சனிக்கிழமை வெளியாகி சக்கைபோடு போட்டது. எல்லா சென்டர்களிலும் வசூலை வாரிக் குவித்தது. சென்னை தேவி தியேட்டர் உரிமையாளர் `தரணியின் ‘தில்' பட வசூலை 'தூள்' உடைத்தது, `தூள்' பட வசூலை 'கில்லி' முறியடித்தது' என்று பாராட்டியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. 

முன்னதாக, ஏ.எம்.ரத்னம், விஜய் சார், நான் என மூவர் காம்பினேஷனில் ஒரு படம் என்று பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த சமயத்தில் ரஜினி சாருடன் ஒரு மீட்டிங் அமைந்தது. அப்போது, `பெரிய படமாச்சே தமிழில எப்படிப் பண்ணப்போறீங்க, அதுசரி... படத்துக்கு என்ன தலைப்பு வெச்சிருக்கீங்க' என்று கேட்டார். நான் `கில்லி' என்று சொன்ன உடனேயே, `ஹா...ஹா.. ஹா' என சந்தோஷமாகச் சிரித்தவர், `டைட்டிலே சூப்பரா இருக்கே, இப்பவே 50 சதவிகிதம் சக்சஸ் உறுதியாயிடுச்சு’ என்று பாராட்டினார். ரஜினிசார் சொன்னது போலவே `கில்லி' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பிறகு ரஜினி சாரைச் சந்தித்து, `படத்தோட 250 நாள் வெற்றிவிழாவில கலந்துக்கிட்டு ஷீல்டு கொடுக்கணும்' என்று சொன்னதும், `உன்னோட கான்ஃபிடன்ட், உழைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நிச்சயமா விழாவுக்கு வந்துடறேன்' என்று சொல்லி விழாவுக்கும் வந்து வாழ்த்தினார். 

``டைட்டிலைக் கேட்டு அசந்த ரஜினி, விஜய் கபடி ஆடுவதைப் பார்த்த விக்ரம்!" - தரணியின் `கில்லி' ரீவைண்டு

விழாவில் விஜய் குறித்து ரஜினி சார் பேசும்போது, `இந்தப் படத்துல ஹீரோ இறங்கிச் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. அதையெல்லாம் விஜய் சிறப்பா செய்திருக்கார். எனக்கு ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடினு ரெண்டு டைப்பான கேரக்டர்களும் சில படங்கள்ல அமைஞ்சது. அதுபோல விஜய்க்கு `கில்லி'யில் அமைஞ்சிருக்கு. ரெண்டு டைப்லயும் கலக்கியிருக்கார்' என்று பாராட்டினார். 

இறுதியாக நன்றி தெரிவித்துப் பேசிய நான், `கில்லி'யில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், நடன இயக்குநர், உதவி டைரக்டர்கள் உட்பட அனைத்துக் கலைஞர்களையும் மேடையேற்றி 'என் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்' என்றேன். அப்போது மேடையில் அமர்ந்திருந்த ரஜினிசார் திடீரென எழுந்துவந்து, என்னைக் கட்டிப்பிடித்தபடி, ‘சினிமாவுல நன்றியை மறக்காம இருக்கிறது பெரிய விஷயம். இந்த வெற்றிக்கு நான் மட்டும் சொந்தக்காரன் கிடையாது. இதுல மத்தவங்களுக்கும் பங்கு இருக்குனு சொல்றதுக்கு விசாலமான மனசு வேணும். அது உன்கிட்ட இருக்கு. கங்கிராட்ஸ் தரணி' என்று பாராட்டினார். 15 வருடங்கள் ஆனாலும் இப்படி ‘கில்லி’யில் நடந்த அனைத்து விஷயங்களும் பசுமையாக நினைவில் உள்ளன” என்று முடிக்கிறார், தரணி.

அடுத்த கட்டுரைக்கு