Published:Updated:

``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்!" - பூர்ணா

``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்!" - பூர்ணா
``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்!" - பூர்ணா

"`சவரக்கத்தி' போன்ற படங்கள் நல்லா ஓடலைன்னாலும், அது ஒரு நல்ல படைப்பா நிலைச்சு நிற்கும். சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது. கதை, ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்குறாங்க."

``அறிமுக இயக்குநர் சார்லஸ் இயக்கத்துல பெயரிடப்படாத ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா எனக்கு போன் பண்ணி, `ஸ்கூல் படிக்கிற ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும்'னு சொன்னார், கதையைக் கேட்டு முடிவு பண்றேன்னு சொன்னேன். இயக்குநர்கிட்ட கதை கேட்டேன். அம்மா கேரக்டரா இருந்தாலும், நடிக்கிறதுக்கான ஸ்கோப் இதுல அதிகமா இருந்தது. சமீபகாலமா கொஞ்சநேரமே வந்தாலும், மக்கள் மனசுல பதியிற கேரக்டர்கள்ல நான் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அதனால, இந்தக் கதையில நடிக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தப் படத்துல என் கேரக்டர் பெயர், மல்லிகா. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்." என்கிறார், நடிகை பூர்ணா. தமிழில் `சவரக்கத்தி'க்குப் பிறகு தனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் நடித்துவரும் பூர்ணாவிடம் அவரது படங்கள் குறித்துப் பேசினோம். 

``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்!" - பூர்ணா

``அம்மா கேரக்டரில் நடிக்க மனப்பக்குவம் வேண்டும். வீட்டுல என்ன சொன்னாங்க?"

``எப்போதும் கதையைக் கேட்டு, அம்மாகிட்ட அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவேன். `இந்தக் கதையில் நீ கண்டிப்பா நடிக்கணுமா, வேண்டாம்'னு அம்மா சொன்னாங்க. எனக்கு எப்போவும் ஏதாவது வித்தியாசமா பண்ணத்தான் பிடிக்கும். அம்மா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு பெரிய மனப்பக்குவம் வேண்டும்தான். முக்கியமா, நான் குழந்தைத்தனமா இருக்கிற பொண்ணு. வீட்டுல கடைக்குட்டி. வீட்டு வேலைகளைக்கூட பெருசா நான் செஞ்சது கிடையாது. ஆனா, இப்படி ஒரு கேரக்டர் கிடைச்சா பெஸ்ட்டா நடிக்கணும்னு நினைப்பேன். தமிழ் சினிமாவில் இளம் வயசுல நிறைய கதாநாயகிகள் அம்மா ரோல் பண்ணியிருக்காங்க. குஷ்பூ, ரேவதி, சுஹாசினி மேடம் இப்படிப் பலர். அவங்க பாதையில் நானும் போறேன். அதனால, இது எனக்குப் பெரிய விஷயமா தெரியல. `கொடிவீரன்', `சவரக்கத்தி' படங்களில் என் கேரக்டர் எப்போவும் பேசப்படும். `சவரக்கத்தி'க்குப் பிறகு பலரும் என்னை `சுபத்ரா'னு கூப்பிடுறது சந்தோஷமா இருக்கு." 

``இயக்குநர் ராம் பற்றி?"

```சவரக்கத்தி' ஷூட்டிங்ல `பேரன்பு' பற்றி அதிகம் பேசியிருக்கோம். அப்போவே அந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு என்கிட்ட அதிகம் இருந்துச்சு. அந்தப் படத்தைக் கேரளாவுல பார்த்தேன். மனசுக்கு நெருக்கமான படம். மம்மூட்டி சார்கூட மலையாளத்தில் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்துல அவர் நடிப்பைப் பார்த்து நிஜமாவே அசந்துட்டேன். ராம் சார் மாதிரியான ஒருத்தர்கூட சேர்ந்து நடிச்சதே எனக்குப் பெரிய விஷயம்தான்."  

``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்!" - பூர்ணா

``பூர்ணாவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கலைங்கிற வருத்தம் இருக்கா?"

``கண்டிப்பா இல்லை. நடக்கிறது, நடக்கப்போறது, நடந்தது... எல்லாமே ஏற்கெனவே எழுதப்பட்டது. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிப்பேன், ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை. யாருடைய சப்போர்ட்டும் இல்லாமதான், இவ்வளவு தூரம் வந்திருக்கேன். கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். இவ்வளவு தூரம் வரமுடிஞ்ச என்னால, இதுக்கு மேலேயும் போகமுடியும்னு நம்பிக்கை இருக்கு."  

`` `காப்பான்' படத்துல என்ன கேரக்டர்?" 

``படத்துல எனக்குச் சின்ன ரோல்தான். ஆனா, ஸ்ட்ராங்கா இருக்கும். சமுத்திரக்கனி சாருடைய மனைவியா நடிச்சிருக்கேன். சூர்யா சார்கூட காம்பினேஷன் சீன்ஸ் எனக்கு இருக்கு. கே.வி.ஆனந்த், சூர்யா, சமுத்திரக்கனி சார் எல்லோரும் ஃப்ரெண்ட்லியா ட்ரீட் பன்ணாங்க. அதனால, ஈஸியா நடிச்சேன். எனக்கு ரொம்ப கம்ஃபோர்டபிளா இருந்த ஷூட்டிங் ஸ்பாட் அது. ஹீரோயின் சயீஷாவும் செம ஃப்ரெண்ட்லியா பழகுனாங்க."

``குஷ்பு, ரேவதி, சுஹாசினி மேடம் செய்ததைத்தான் நான் செய்றேன்!" - பூர்ணா

``கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மலையாள சினிமா; ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் சினிமா... இதை எப்படிப் பார்க்குறீங்க?"

``ரெண்டு சினிமாவுலேயும் நான் நல்ல கேரக்டர்கள்ல நடிச்சிருக்கேன். `மதுரராஜா'னு மம்மூட்டி சார்கூட பெரிய பட்ஜெட் படம் பண்ணேன். அதுல நடிக்கிறப்போ கதை பெருசா இல்லைனு தோணுச்சு. ஆனா, ரிலீஸுக்குப் பிறகுதான், படத்துல பல விஷயங்கள் இருக்குனு எனக்குப் புரிஞ்சது. பெரிய பட்ஜெட் படங்களில் கண்டிப்பா ஹீரோவுக்கு முக்கியத்துவம் இருக்கும். பட்ஜெட் குறைவான படங்கள்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க. `சவரக்கத்தி' போன்ற படங்கள் நல்லா ஓடலைன்னாலும், அது ஒரு நல்ல படைப்பா நிலைச்சு நிற்கும். சினிமா ரொம்பவே மாறிக்கிட்டு வருது. கதை, ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்குறாங்க."  

``நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஹீரோயின் ஆன பொண்ணு நீங்க. சாதிக்க நினைக்கிற பெண்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?" 

``என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு அரசாங்கம் சொன்னாலும், என்னைத் தனியா ஒரு இடத்துக்கு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்ப எங்க அம்மா பயப்படுவாங்க. உண்மையைச் சொல்லணும்னா, என்கூடவே அம்மா வருவாங்க, இல்லைன்னா, எட்டு வருடமா எங்ககிட்ட வேலை பார்க்கிற அக்கா வருவாங்க. ஏன்னா, இப்போ பெண்களுக்கு நடக்கிற விஷயங்களைப் பார்த்துட்டு அவங்களுக்கு ஒரு பயம். டான்ஸ் க்ளாஸுக்குப் போனாக்கூட கண்டிப்பா யாராவது எனக்குத் துணைக்கு வருவாங்க. சமூகத்துல பெண்களுக்கு நடக்கிற பல விஷயங்களால இப்படி! யாரை நம்பலாம், நம்பக்கூடாதுன்னே தெரியல. பெண்கள் விஷயத்துல தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டா, தப்பு நடக்காது. அப்போ, தவறுகள் குறையும். பெண்களும் பயப்படாம வெளியே போகலாம். வெளிநாடுகளில் கடுமையான தண்டைகள் கொடுக்கிறாங்க. நம்ம நாட்டுல அப்படியில்லை." 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு