Published:Updated:

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்
`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

``ஆட்டோ மெக்கானிக்காகத் தொடங்கியது என் வாழ்க்கை. கோடம்பாக்கத்தில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்தேன். அங்கு வந்தவர்களுடைய அறிமுகத்தினால், சினிமாவுக்குள் வந்தேன்" சுவாரஸ்யம் பகிர்கிறார், `ஏறிவாயா' ஷேக். 

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

``அதென்னங்க ஏறிவாயா ஷேக்?"

``எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது, `ஏபிசிடி' படத்தில் வந்த வசனம்தான். வடிவேலு என்னை `ஏறி வாயா' என்பார். அதற்கு நான், `நீதான் ஏரி வாயன், நாய் வாயன், தவளை வாயன், குரங்கு வாயன், பன்றி வாயன்'னு சொல்வேன். `டேய், மேல ஏறி வா'னு சொன்னேன்டானு வடிவேலு சொல்வார். அந்தப் படத்துல இருந்தே எனக்கு இந்தப் பெயர் வந்திடுச்சு. சினிமாவுக்கு படிப்பு முக்கியம் கிடையாது. அதனால, மெக்கானிக்கா இருந்த நான் குடும்பம், குழந்தைகள்னு இருந்தாலும் வேலையை விட்டுட்டு சினிமாவுக்குள் வந்தேன். 2001-ல் இருந்து நடிகர் சங்க உறுப்பினரா இருக்கேன். சுனாமி வந்த நேரம் என் கரியரை ஆரம்பிச்சேன். அதேவேகத்துல இப்போ என் லைஃப் போயிட்டிருக்கு" என்றவர், தனக்கு வாய்ப்பு கிடைத்த சுவாரஸ்யத்தைச் சொன்னார். 

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

``ஷாம் நடித்த `ஏபிசிடி' படத்தின் இயக்குநரின் நண்பர் என்னை அறிமுகப்படுத்தினார். `படம் முழுக்க முடிச்சாச்சு. இப்போ காமெடி டிராக்தான் போயிட்டிருக்கு. வடிவேலு சார் காம்பினேஷன். இதுல உங்களுக்கு எந்த ரோலும் இருக்காதே'னு தயங்கினார் இயக்குநர். `நடிக்கணும்ங்கிறது  ஆசை'னு அவர்கிட்ட சொன்னேன். அடுத்தநாள் வரச் சொன்னாங்க. `ஏரி வாயா' சீன் வந்தபோது, டயலாக் நான் பேசுறேன்னு சொன்னேன். வடிவேலு என்னை டயலாக் சொல்லச் சொன்னார். பேசிக் காட்டினேன். `நாய் வாயனை முதல்ல போட்டுக்க, தவளை வாயனைத் தூக்கி இரண்டாவதா போட்டுக்கோ, குரங்கு வாயனை மூன்றாவதா, பன்றி வாயனை நான்காவதாப் போட்டுக்கோ'னு சொன்னார். அதை பிராக்டிஸ் பண்ணிக்கிட்டேன். 

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

`டேக்' போனதும் பதற்றம். டயலாக்கை ரன்னிங்ல பேசியாகணும். ரீடேக் எடுக்கிற டயலாக் கிடையாது. பஸ் டிராவலிங்லேயே எல்லோரும் இருப்போம். பஸ் ஒரு ரவுண்டு போகுறதுக்குள்ள வசனம் முடியணும். இதுல எந்தத் தப்பு நடந்தாலும், அந்தச் சூழலுக்கு மீண்டும் போன வண்டிகளையெல்லாம் திரும்ப வரவெச்சு ஷூட் பண்ணணும். அதனால, கவனமாக இருந்தேன். இரண்டு டேக்ல நல்லபடியா பேசி முடிச்சிட்டேன். வடிவேலு, ஷாம், இயக்குநர் எல்லோரும் `புதுசா கேமரா முன்னாடி நின்னாலும் சரியா பேசுனீங்க'னு பாராட்டினாங்க. அதுக்குப் பிறகு இதுவரைக்கும் 25 படங்களுக்குமேல் நடிச்சுட்டேன். டிவி ஷோ, காமெடி நிகழ்ச்சிகள்னு பயணம் தொடருது." என்றவர், தொடர்ந்தார். 

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

``சரவண சுப்பையா, வடிவேலு ரெண்டுபேரும் என் லைஃப்ல முக்கியமானவங்க. கெளதம் மேனன், வி.இஸட்.துரை, யுவராஜ் தயாளன் எனப் பல இயக்குநர்கள் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார்கள். `எலி' படத்தில் வடிவேலு அடிவாங்கி நிற்கும்போது, `வாயா வரும்போதே வாயை வாய்க்கா மாதிரியா வெச்சுட்டு இருப்ப. நைட்டு ஏர் உழுதாங்களா'ன்னு கேட்பேன். அந்த டயலாக்ல வர்ற `ஆக்கிட்டாங்க' என்பதை, `ஆக்கிட்டாய்ங்க..' என மதுரை ஸ்லாங்கில் சொல்லணும்னு சொல்லிக் கொடுத்தார், வடிவேலு. நைட்டு முழுக்க உட்கார்ந்து மனப்பாடம் பண்ணிட்டிருந்தேன்.  

`` `நாய் வாயன் முதல்ல, பன்றிவாயன் கடைசி'னு ஆர்டர் போட்டுக்கொடுத்தார், வடிவேலு!" - `ஏறிவாயா' ஷேக்

அடுத்தநாள் ஷூட்டிங் போகும்போது, `டயலாக்லாம் இல்லடா... வெறும் பே பேதான்'னு சொன்னார், வடிவேலு. ஒருபக்கம் கஷ்டமா இருந்தாலும் அப்படியே நடிச்சேன், பாராட்டினார். கூட நடிக்கிறவங்களும் நல்லா நடிக்கணும்னு கவனமா இருப்பார் வடிவேலு சார். `இவன் தேறுவானா, தேறமாட்டானா'னு பார்த்ததுமே கண்டுபிடிச்சிடுவார். இயக்குநர்களின் காமெடி டிராக்ல அழகா கரெக்‌ஷன் பண்ணி அதை மேலும் சுவாரஸ்யம் ஆக்குறதுல வடிவேலு சாரை மிஞ்ச முடியாது.  

`தெனாலி ராமன்', `நேபாளி', `ஏமாலி'னு பல படங்களில் நடிச்சிருக்கேன். `என்னை அறிந்தால்' படத்தில் அஜீத் சாரைக் கலாய்க்கிற சீன் வரும். ஆட்டோ டிரைவரா அதுல வருவேன். அஜீத் போலீஸ்னு தெரிந்ததும், சல்யூட் அடிப்பேன். தட்டிக் கொடுத்து, `யார்கிட்டேயும் சொல்லதீங்க'னு அனுப்பி வைப்பார். எத்தனையோ பேருக்கு அவர்கூட போட்டோ எடுக்கமாட்டோமானு ஆசை இருக்கும். எனக்கு அவர்கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம். இப்போ, திரைப்படக் கல்லூரியில் ஆக்டிங், டைரக்‌ஷன் மாஸ்டராக இருக்கேன். என்னுடைய `ஒரே வார்த்தை' குறும்படம், நியூஸ் 7 தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றது" என்றவர், தனது குடும்பம் பற்றிச் சொல்கிறார்.

``மனைவி, நிஷார் பேகம், இரண்டு பசங்க... இவங்கதான் என் உலகம். பெரியவன் பி.சி.ஏ சேரப்போறான். சின்னவன் ஒன்பதாம் வகுப்பு போகப்போறான். இப்போ, நமீதா நடிக்கிற `அகம்பாவம்' படத்திலும், `கோலா'ங்கிற படத்திலும், தம்பி ராமையா சார் படத்திலும் நடிச்சுக்கிட்டிருக்கேன்" என்று முடிக்கிறார், ஷேக்.

Vikatan