Published:Updated:

`எங்க அம்மாவை மக்கள் வெறும் நடிகையா மட்டும் பார்க்கல!'- சாவித்திரி மகள் நெகிழ்ச்சி

`எங்க அம்மாவை மக்கள் வெறும் நடிகையா மட்டும் பார்க்கல!'- சாவித்திரி மகள் நெகிழ்ச்சி
`எங்க அம்மாவை மக்கள் வெறும் நடிகையா மட்டும் பார்க்கல!'- சாவித்திரி மகள் நெகிழ்ச்சி

சென்ற வருடம் மே மாதம் தெலுங்கில் 'மஹாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியானது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. ஒரு பயோபிக் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், ஒரு தலைமுறைக்கு முந்தைய நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையும் சேர்ந்தே ரசித்தது. படம் நூறு நாள்களைக் கடந்த நிலையில், `ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சிட்டியில் நடந்த இந்தியன் சினிமாவில் மஹாநடி படத்துக்கு `ஈகுவாலிட்டி ஆஃப் சினிமா' விருது கொடுத்தார்கள். சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் உட்பட படக்குழுவினர் அந்த விழாவில் கலந்துகொண்டு விருதைப் பெற்றுக்கொண்டார்கள். தற்போது,  சீனாவின் மதிப்புமிகு ஷாங்காய் ஃபிலிம் ஃபெஸ்டிவலிலும்  `மஹாநடி'யை திரையிடப் போகிறார்கள். எப்படி ஃபீல் பண்ணுகிறீர்கள் என்று சாவித்திரியின் மகள் விஜய சாமூண்டீஸ்வரியிடம் கேட்டோம். 

`எங்க அம்மாவை மக்கள் வெறும் நடிகையா மட்டும் பார்க்கல!'- சாவித்திரி மகள் நெகிழ்ச்சி

`` `ஷாங்காய் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடுறதுக்கு அம்மாவோட படம் செலக்ட் ஆகியிருக்கு'ன்னு  படத்தோட தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தாங்க. இதுல என்ன ஸ்பெஷல்னா, அந்த ஃபெஸ்டிவல் அமைப்பே மஹாநடியை செலக்ட் பண்ணியிருக்கிறதுதான். எங்க அம்மாவை மக்கள் வெறும் நடிகையா மட்டும் பார்க்கலைங்க. அடுத்தவங்களுக்கு உதவுற அவங்க குணம்,  நடிப்புத் தவிர வேறொண்ணும் தெரியாத அவங்களுடைய அப்பாவித்தனம், அதோட அப்பா மேலே அம்மா வைச்சிருந்த அந்த அலாதியான அன்புன்னு அம்மாவோட இயல்பு மேல மக்களுக்கு அன்பு கலந்த ஒரு இரக்கம் இருக்கு. எல்லாத்துக்கும் மேலே அவங்களோட நடிப்புத் திறமை. அம்மாவோட பயோபிக்கைப் பார்த்த நிறைய பெண்கள் அம்மாவோட கேரக்டரில் தங்களையே பார்த்துக்கிட்டாங்க. அதனாலதான் உலகம் முழுக்க அம்மாவைக் கொண்டாடுறாங்கன்னு நினைக்கிறேன்'' என்பவரின் குரல் நெகிழ்ந்து ஒலிக்கிறது. 

Vikatan