Published:Updated:

``அவர் கதைகளைத் தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!” - `இராவண கோட்டம்' கதாநாயகி குறித்து சாந்தனு

``அவர் கதைகளைத் தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!” - `இராவண கோட்டம்' கதாநாயகி குறித்து சாந்தனு
``அவர் கதைகளைத் தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!” - `இராவண கோட்டம்' கதாநாயகி குறித்து சாந்தனு

`கயல்’, `பண்டிகை’, `ரூபாய்’, `பரியேறும் பெருமாள்’... இப்படி தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களில் மட்டும் நடிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி. பா.இரஞ்சித் தயாரிப்பில் `பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இரஞ்சித்தின் தயாரிப்பில் `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

``அவர் கதைகளைத் தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!” - `இராவண கோட்டம்' கதாநாயகி குறித்து சாந்தனு

இந்த நிலையில், `மதயானைக்கூட்டம்' படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாந்தனுவை வைத்து  `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதிலும் கயல் ஆனந்தி ஹீரோயினாக கமிட்டாகி உள்ளார். கயல் ஆனந்தியுடன் நடிப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சாந்தனு, `கயல் ஆனந்தி கதைகளைத் தேர்ந்தெடுப்பது பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்'' என்று கூறியுள்ளார். கயல் ஆனந்தி சினிமாவில் நடித்துக்கொண்டே தனது கல்லூரிப் படிப்பையும் தற்போது முடித்துள்ளார். அதனால் ஆனந்தி இனி சினிமாவில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

``அவர் கதைகளைத் தேர்ந்தெடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!” - `இராவண கோட்டம்' கதாநாயகி குறித்து சாந்தனு
Vikatan