Published:Updated:

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

நகைச்சுவை படம் என்றால் நடிகர்களின் தேர்வு, வசனங்கள், டயலாக் டெலிவரி, டைமிங் என ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஓர் இடத்தில் சறுக்கினாலும், 'மொக்க போடுறானுங்க' என்று ரசிகர்கள் சர்வ சாதாரணமாகக் கடந்துவிடுவார்கள்.

வ்வொரு இயக்குநருக்கும் சவாலான விஷயம் ஒன்று உள்ளதென்றால், அது காமெடிப் படம் எடுப்பதுதான். நகைச்சுவைப் படங்களில் நடிகர்களின் தேர்வு, வசனங்கள், டயலாக் டெலிவரி, டைமிங் என ஒவ்வொரு விஷயத்திலும் அத்தனை கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் ஓர் இடத்தில் சறுக்கினாலும், 'மொக்க போடுறானுங்க' என ரசிகர்கள் சர்வ சாதாரணமாகக் கடந்துவிடுவார்கள். மேற்சொன்ன விஷயங்களைக் கடந்து தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய ஒரு சில எவர்கிரீன் நகைச்சுவைத் திரைப்படங்களின் தொகுப்பு இதோ... 

காதலிக்க நேரமில்லை

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இதற்குமேல் ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்துவிட முடியுமா' என்று சவால்விடும் நகைச்சுவைக் காவியம், 'காதலிக்க நேரமில்லை'. ஸ்ரீதர் இயக்கத்தில் முத்துராமன், நாகேஷ், சச்சு எனப் பலரும் நடித்திருந்தாலும், இப்படத்தின் உண்மையான ஹீரோ பாலையாதான். இதை இயக்குநர் ஸ்ரீதரே, பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ‘டேய் செல்லப்பா, உன் படத்தின் கதையைக் கொஞ்சம் சொல்லு, பாப்பம்’ என்று தானாக வம்பில் போய் மாட்டிக்கொள்ளும்போதும் சரி, பீதியில் ஆழ்ந்து கதை போதும் என்று சொல்லி நிறுத்திய பிறகு, 'பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது' என்று இயல்புக்கு வரும்போதும் சரி, காட்சியின் தரத்தை உச்சாணிக் கொம்புக்கு கொண்டுபோய்விடுவார் பாலையா. இவர் தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் அதேவேளையில் நாகேஷ், ‘என் கதை என்னோட மடியட்டும்’ போன்ற வசனங்களால் படம் முழுக்க சிக்ஸர், பவுண்ட்ரிகளை விளாசிக்கொண்டிருப்பார். சுருக்கமாகச் சொன்னால், நகைச்சுவை படம் எடுக்க விரும்பும் இயக்குநர்களுக்குக் ‘காதலிக்க நேரமில்லை’ ஓர் அகராதி.  

தில்லு முல்லு

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

அதுவரை மீசை இல்லாத ரஜினியைத் தமிழ் சினிமா கண்டதில்லை. முதன்முறையாக, மீசை இல்லாமல் ரஜினி நடித்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படம், 'தில்லு முல்லு'. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம். ரஜினியுடன் சேர்ந்து தேங்காய் சீனிவாசனும் சௌகார் ஜானகியும் பண்ணும் ரகளைகள் சொல்லில் அடங்காதவை. அதுவரை அதிரடி, ஆக்ரோஷம் என சீரியஸ் லுக்கில் வலம் வந்த ரஜினியை முழுக்க காமெடி ஆர்டிஸ்ட்டாகப் பயன்படுத்தியிருப்பார், இயக்குநர் பாலசந்தர். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த க்ளாசிக் நகைச்சுவைக் காட்சிகள் வரிசையில் 'தில்லு முல்லு' படத்தில் வரும் நேர்முகக் காட்சிக்கு முக்கிய இடமுண்டு. அந்தக் காட்சியில் நகைச்சுவையோடு நின்றுவிடாமல், அந்தக் காலத்து இளைஞர்களின் சமூக வாழ்க்கையும் எள்ளல் செய்யப்பட்டிருக்கும். 'கோல் மால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்காக இருந்தாலும், இதே 'தில்லு முல்லு' சமீபத்தில் தமிழில் மீண்டும் ரீமேக் ஆனாலும், இப்படம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் நகைச்சுவைக்காக ரசிகர்களால் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இன்று போய் நாளை வா

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

பாக்யராஜ் நடித்து, இயக்கிய படம் ‘இன்று போய் நாளை வா.’ பொதுவாக பாக்யராஜ் படத்தில், அவரது அறிமுகக் காட்சியே ரசிகர்களை சீட்டின் நுனிக்குக் கொண்டுவந்துவிடும். இந்தப் படத்தில், ‘தங்கச்சி...’ என்று சொல்லிப் பெண்களைக் கட்டிப்பிடிக்கும் இடத்தில் படத்தின் மீது பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். மூன்று நண்பர்கள். எதிர்வீட்டுக்குக் குடிவந்த பெண். இவர்களுக்குள் நடக்கிற காதல் கண்ணாமூச்சிதான், படத்தின் களம். இப்படி ஒரு சாதாரண ஒன்லைனை வைத்துக்கொண்டு, அதற்குள் வொன்டர்ஃபுல் ஸ்கிரிப்டைக் கலந்து, காட்சிக்குக் காட்சி சிக்ஸர் அடித்திருப்பார் பாக்யராஜ். 'ரேஷன் கடையை நான் காட்டுறேன்’ என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு செல்வதற்கு கல்லாப்பெட்டி சிங்காரம் முட்டுக்கட்டை போடுவது, ரேஷன் அரிசியை அப்பா பார்க்கிறார் எனக் குப்பைத் தொட்டியில் மறைத்து வைப்பது, குழந்தை நலனுக்காகக் கழுதையைப் பிடித்து வருவது... எனப் பாக்யராஜின் அக்மார்க் காமெடிக்குப் படம் முழுக்கப் பஞ்சம் இல்லை. வீட்டுக்கு வரும் இந்தி பண்டிட்டை நாய் விட்டு விரட்டுவது, பாட்டி கொஞ்சல், லட்டு அதக்கிக்கொண்டே பாடம் படிப்பது, 'ஏக் காவ் மே ஏ கிஸான் ரஹ தாத்தா' என்று சொல்ல, 'ரகு தாத்தா' என்று இவர் சொல்ல, 'ரஹ தாத்தா... ஹ... ஹ...' என்று இந்தி பண்டிட் சொல்ல... தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்தது. 

மைக்கேல் மதன காமராஜன்

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் நான்கு வேடங்களில் கமல்ஹாசன் நடித்த படம், ‘மைக்கேல் மதன காமராஜன்’. 80'ஸ், 90’ஸ் கிட்ஸ்கள் வாய்விட்டுச் சிரித்த படங்களின் வரிசையில் இந்தப் படம் ஒரு மகுடம். கிரேஸி மோகன், இப்படத்துக்கு வசனம். சாதாரணமாக கமல்ஹாசன் - கிரேஸி மோகன் கூட்டணி என்றாலே சிரிப்புச் சத்தம் ஆயிரம் வாலா சரவெடிபோல வெடித்துக்கொண்டே இருக்கும். இந்தப் படம் பத்தாயிரம் வாலா சரவெடி. போதாக்குறைக்கு, 'அவினாசி' என்ற கதாபாத்திரத்தில் வரும் நாகேஷ் தன் பங்குக்கு காட்சிக்குக் காட்சி அதகளம் செய்திருப்பார். கமல், ஊர்வசியின் முதல் இரவுக் காட்சியில் நாகேஷ் செய்யும் கலாட்டா கலக்கல் ரகம். இப்படத்தில் வரும், 'பீம்பாய் பீம்பாய்' வசனம் இன்று வரை ஃபேமஸ். 

உள்ளத்தை அள்ளித்தா

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில், பாண்டு எனப் பலர் ஒன்றுகூடி இழுத்த தேர்தான், ‘உள்ளத்தை அள்ளித்தா.’ படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து முடியும் வரை சிரிப்பு... சிரிப்பு... சிரிப்புதான். இப்படத்தில், 'காசிநாதன்', 'விஸ்வநாதன்' என இரட்டை வேடங்களில் பட்டையைக் கிளப்பியிருப்பார் மணிவண்ணன். படத்தின் இறுதியில், ’காசிநாதன்’ யார் என்பதைக் கண்டுபிடிக்க செந்தில் ஒவ்வொருவரின் இடுப்பைத் தொடும் காட்சி குபீர் ரகம். கடத்தப்பட்ட மணிவண்ணனை விடுவிக்க செந்திலுடன் கவுண்டமணி டீல் பேசும் காட்சியை அடித்துக்கொள்ள இன்றுவரை வேறு ஒரு நகைச்சுவை காட்சி வரவில்லை. 'டேய், கிட்னா நாயே... நாநூறுவா தர்றோம் விட்ருடா' எனக் கவுண்டமணி கேட்க, அதற்கு 'டெம்போலாம் வச்சு கடத்தியிருக்கோம்; பாத்துப் போட்டு கொடுங்கையா' என்று செந்தில் கெஞ்சும் காட்சி அட்டகாசம். 

சூது கவ்வும்

"பாலையா அட்ராசிட்டி, மீசை இல்லாத ரஜினி, கமல் - கிரேஸியின் சரவெடி... தமிழின் எவர்கிரீன் காமெடி சினிமாக்கள்!"

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ அட்டகாசமான ‘ப்ளாக் ஹியூமர்’ திரைப்படம். தமிழ் திரையுலகில் முதன்முறையாக ப்ளாக் ஹியூமரைப் பரிசோதித்த ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம் போலவே, கோணங்கித்தனமான நான்கு பேர் இணைந்து ஆள் கடத்தல் செய்வதே இந்தத் திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நிறைந்திருக்கும். 'சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்', 'டெய்லி 18 டீ குடிக்கிறான். இவனைக் கடத்த பிளான் எதுவும் போடத் தேவையில்லை. ஒரு டீக்கடை போட்டா போதும்' - இப்படி வசனங்களால் காட்சிக்குக் காட்சி சிரிப்பு மேளா நடத்தியிருப்பார் நலன் குமாரசாமி. 

மேற்சொன்ன படங்கள் மட்டுமல்லாது, 'சபாஷ் மீனா', 'ஆண்பாவம்', 'பஞ்சதந்திரம்', 'காதலா காதலா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என எண்ணற்ற நகைச்சுவைத் திரைப்படங்கள் இருக்கின்றன. இதுபோல, நீங்கள் பல முறை ரசித்த நகைச்சுவைத் திரைப்படங்களைக் கமென்ட் பாக்ஸில் பதியலாமே?