Published:Updated:

நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் நாசர், விஷால் டீம்!

எம்.குணா
நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் நாசர், விஷால் டீம்!
நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் நாசர், விஷால் டீம்!

தென்னிந்திய நடிக சங்கத் தலைவராக நாசர், துணைத்தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் பதவி வகித்து வந்தனர். பொதுவாக  நடிகர் சங்கத்தின் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு நாசர் அணியின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. சென்றமுறை  நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான கட்டடம் கட்டி வருகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் நாசர், விஷால் டீம்!

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் குறித்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தேர்தல் நடக்கும் நிலையில், இந்தமுறை யார் யார் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள் என்பது குறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் கேட்டோம். ``கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நானும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். விரைவில் வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் மூவரும் ஏற்கெனவே நின்ற பதவிகளில் இப்போதும் போட்டியிட போகிறோம். துணைத்தலைவர் பதவிக்கு எங்கள் அணியின் சார்பில் 'பூச்சி' முருகன் போட்டியிடப் போகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலை நீதிபதி ஜூன் மாத இறுதியில் அறிவிப்பார் என்று கருதுகிறேன்'' என்றார்.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலை எதிர்த்து  தீவிரமாக இறங்கப் போவதாக சொல்லிக்கொண்டிருந்த நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் திடீரென அகால மரணம் அடைந்துவிட்டார். கடந்தமுறை நாசர், விஷாலை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் நாசர் அணியை எதிர்த்து போட்டியிடப் போவது யார், யார் என்று இதுவரை தெரியவில்லை.

Vikatan

எம்.குணா