Published:Updated:

`நெடுநல்வாடை'யின் முதல் சர்வதேச அங்கீகாரம்!

சந்தோஷ் மாதேவன்
`நெடுநல்வாடை'யின் முதல் சர்வதேச அங்கீகாரம்!
`நெடுநல்வாடை'யின் முதல் சர்வதேச அங்கீகாரம்!

எளிய மக்களின் கதைகளை, மண் வாசனை மாறாது படம்பிடித்துக் காட்டும் எந்தத் திரைப்படமும் அங்கீகரிக்கப்படாமல் இருந்ததில்லை. `மேற்குத் தொடர்ச்சிமலை', `பரியேறும் பெருமாள்' ஆகியவை அதற்கு உதாரணம். அந்த வரிசையில், `பூ' ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் நடிப்பில், அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியான `நெடுநல்வாடை' திரைப்படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

`நெடுநல்வாடை'யின் முதல் சர்வதேச அங்கீகாரம்!

கிட்டத்தட்ட 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட `இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாடமி' சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'நெடுநல்வாடை' கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும் விருதையும் பெற்றுள்ளது.

விழாவில் பேசிய இயக்குநர் செல்வக்கண்ணன், ``ரொம்ப பெருமையா இருக்கு. பல நாடுகளிலிருந்து, பல மொழிகளிலிருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குநர்கள், திரைப்படத்துறையிலிருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. படத்தைப் பரிந்துரைத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி,' என்றார்.

`பொதுமக்களிடம் நிதி திரட்டி (க்ரவுட் ஃபண்டிங்), அந்தப் பணத்தில் உருவான தமிழ் சினிமாவின் முதல் திரைப்படம் 'நெடுநல்வாடை'. அதனால், படத்துக்குப் பலரின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தைத் தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் கூறினார் செல்வக்கண்ணன்.