Published:Updated:

`இந்த உலகுக்கு அடுத்த அயர்ன்மேன் தேவை!' - ஆக்ஷனில் அசத்தும் பீட்டர் பார்க்கர் #SpiderManFarFromHome டிரெய்லர்

`இந்த உலகுக்கு அடுத்த அயர்ன்மேன் தேவை!' - ஆக்ஷனில் அசத்தும் பீட்டர் பார்க்கர் #SpiderManFarFromHome டிரெய்லர்
News

பிரமாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' படத்தின் தாக்கம் குறையும் முன்பே மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (MCU) தனது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 2-ம் தேதி வெளியாகவிருக்கும் 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. #SpiderManFarFromHome

`இந்த உலகுக்கு அடுத்த அயர்ன்மேன் தேவை!' - ஆக்ஷனில் அசத்தும் பீட்டர் பார்க்கர் #SpiderManFarFromHome டிரெய்லர்

" 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' பார்க்காதவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம்!" என பீட்டர் பார்க்கர் (எ) ஸ்பைடர்மேனின் 'ஸ்பாய்லர் அலர்ட்'டுடன் தொடங்குகிறது டிரெய்லர். எண்டு கேமுக்குப் பிறகு, நடக்கும் இந்தக் கதையில் பீட்டர் தன் பள்ளி நண்பர்களுடன் ஐரோப்பாவுக்கு ஸ்கூல் டிரிப் போகிறான். அப்போது அங்கு நிக் ஃப்யூரி அவன் உதவியை நாடுகிறார். வேறொரு உலகத்திலிருந்து (Multiverse) வந்திருக்கும் Mysterio என்பவரோடு இணைந்து பணியாற்றி உலகைக் காக்க வேண்டுகோள் விடுக்கிறார். அவெஞ்சர்ஸில் தான் அணிந்த 'Spiderman suit' இல்லாமல் இந்தச் சவாலை எதிர்கொள்ளப்போகிறான் பீட்டர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
`இந்த உலகுக்கு அடுத்த அயர்ன்மேன் தேவை!' - ஆக்ஷனில் அசத்தும் பீட்டர் பார்க்கர் #SpiderManFarFromHome டிரெய்லர்

இந்தப் படத்தில் Mysterio-வாகப் புகழ்பெற்ற நடிகர் Jake Gyllenhaal நடித்துள்ளார். ஸ்பைடர்மேன் மற்றும் பீட்டர் பார்க்கராக டாம் ஹோலண்ட், நிக் ஃப்யூரியாக சாம்வேல் எல்.ஜாக்சன் ஆகியோர் மீண்டும் தோன்றுகின்றனர். சோனியின் கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ்-ன் கூட்டுத் தயாரிப்பான இதில் மற்ற அவெஞ்சர்களின் பெயர்களும் ஆங்காங்கே தட்டுப்படுகின்றன. குறிப்பாக, "இந்த உலகுக்கு அடுத்த அயர்ன்மேன் தேவை!" என்று பீட்டர் பேசும் வசனம் 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

படத்தின் டிரெய்லரைக் காண...