Published:Updated:

மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப் - நம்ம ப்ரியங்கா சோப்ராவா இது..!

தார்மிக் லீ
மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப் - நம்ம ப்ரியங்கா சோப்ராவா இது..!
மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப் - நம்ம ப்ரியங்கா சோப்ராவா இது..!

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் மெட்காலா எனும் 'காஸ்ட்யூம் பார்ட்டி' உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி. 2017-ல் இருந்து அதில் கலந்துகொண்டு, வித்தியாசமான உடைகளை உடுத்திவரும் ப்ரியங்கா சோப்ரா, இம்முறையும் வித்தியாசமான காஸ்ட்யூமில் தனது கணவர் நிக் ஜோனஸோடு  கலந்துகொண்டார். 

மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப் - நம்ம ப்ரியங்கா சோப்ராவா இது..!

மெட்காலா நிகழ்ச்சி, ஒவ்வோர் வருடமும் ஒவ்வொரு ஸ்டைலில் நடபெற்றுவருகிறது. இந்த வருடம், 'Susan Sontag’s 1964 essay, Notes on Camp' ஸ்டைலில் நடந்தது. ஹாலிவுட்டைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள், பாடகர்கள் கலந்துகொண்டனர். மேலும், இந்திய நடிகைகளான ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனும் இதில் கலந்துகொண்டனர். முதல் ஆண்டு, தனியாக நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டவர், அடுத்த ஆண்டும் இந்த ஆண்டும் தனது கணவர் நிக் ஜோனஸுடன் கலந்துகொண்டார், ப்ரியங்கா சோப்ரா. கண்களில் மஞ்சள் நிற மஸ்காரா, வித்தியாசமான உடை, சுருள் முடி, தலையில் க்ரீடம் என 'ஆலிஸ் இன் தி வொண்டர்லேண்ட்' கெட்டப்பில் வந்திருந்தார்.  கடந்த இரண்டு வருடமும் ப்ரிங்கா சோப்ராவின் காஸ்ட்யூம்கள் டிரோல் செய்துவரும் நிலையில், இந்த வருடமும் இவரது காஸ்ட்யூம்கள் டிரோல் செய்யப்பட்டுவருகிறது.