Published:Updated:

`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்!

வே.கிருஷ்ணவேணி
`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்!
`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்!

நேற்றைய ட்விட்டர் டிரெண்ட் `பிக் பாஸ்' காயத்ரி ரகுராம். `காயத்ரி ரகுராம் பா.ஜ.கவிலிருந்து விலகிவிட்டார் எனப் பலரும் செய்திகள் வெளியிட, `நான் கட்சியிலிருந்து விலகவில்லை, இப்போதைக்கு பிரேக்தான் எடுத்திருக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார் காயத்ரி. அவரிடம் பேசினேன். 

`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்!

``நான் பார்ட்டியிலிருந்து விலகுறேன்னு சொல்லவே இல்லையே. எந்த இடத்திலும் என்னுடைய விலகல் குறித்து நான் போஸ்ட் பண்ணவே இல்லை. எனக்குக் கட்சியிலிருந்து விலகும் எண்ணமும் இப்போதுவரை இல்லை. கட்சியில் நிறைய விஷயங்களை கத்துக்க வேண்டியிருக்கு. அதற்காக பிரேக் எடுத்துக்கிறதா பதிவிட்டிருந்தேன். அதை எல்லோரும் விலகுவதாகத் தவறாக நினைச்சுக்கிட்டாங்க. கட்சியில் சேர்ந்துட்டேன் என்பதற்காகச் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை ட்விட்டரில் பதிவிடுவது, மற்றக் கட்சிகளைப் பற்றிப் பேசுவது என்பது மட்டுமே என்னுடைய வேலை இல்லையே. அதையும் தாண்டி மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்வதற்கு நேரம் தேவைப்படுகிறது. அதற்கான நேரத்தைத்தான் இப்போது எடுத்திருக்கிறேன். மற்ற கட்சிகளில் சேர வேண்டும் என்கிற எண்ணமும் இல்லை'' என்றவரிடம், கட்சியின் மேலிடத்தில் என்ன சொன்னார்கள் எனக் கேட்டதற்கு, 

`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்!

``இது என்னுடைய தனிப்பட்ட உரிமை. எனக்கு விருப்பம் இருந்தால் கட்சியில் இணையலாம், விலகுவது, பிரேக் எடுப்பது என்பதெல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. அதில் கட்சி எப்போதுமே தலையிடுவதில்லை. எனக்கு மீண்டும் எப்போது திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்போது கண்டிப்பாக கட்சியில் தொடர்ந்து பயணிப்பேன். இப்போது என்னுடைய ட்விட்டரைப் பற்றி எப்படித் தவறாக பலரும் புரிந்து கொண்டார்களோ அதேபோல தமிழிசையும் என்னைத் தவறாக ஒரு முறை புரிந்துகொண்டார்' எனச் சிரிப்பவர், அதற்கான காரணத்தையும் சொன்னார், 

`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்!

``நான் `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள் போகும்போது, கட்சி மேலிடத்தில் இதற்கான அனுமதி கேட்டு, மூன்று மாதங்கள் ஆக்டிவாக இருக்க முடியாது என்பதைத் தெரிவித்திருந்தேன். அதை தவறாகப் புரிந்து கொண்ட தமிழிசை செளந்தரராஜன், ஒரு பேட்டியில் நான் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லியிருந்தார். இப்படிப் புரிதல் இல்லாமலேயே பல செய்திகளைப் பகிர்கிறார்கள் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது'' என்பவரிடம் சவுக்கிதார் என்கிற பெயரையும் எடுத்துவிட்டீர்களே எனக் கேட்டதற்கு, 

``என் பெயருடன் சவுக்கிதார் வார்த்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் பற்றிய ட்விட்டர் விவரங்களில் சவுக்கிதார் பெயர் இருக்குங்க. அதை வைத்தே நான் பார்ட்டியில்தான் இருக்கிறேன் என்பதைப் புரிந்திருக்கலாமே. மீண்டும் கட்சிக்கு வரும்போது சவுக்கிதார் பெயரை சேர்த்துக் கொள்வேன்'' என்று முடித்துக் கொண்டார் காயத்ரி ரகுராம். 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.