Election bannerElection banner
Published:Updated:

''தேயிலை எஸ்டேட் கொடுமை, பவாரியா கொள்ளையர்கள், காவல்துறை அட்டூழியம்.. 'ரியல் டூ ரீல்' தமிழ் சினிமாக்கள்!"

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான சில தமிழ்ப் படங்களின் பட்டியல்.

ற்பனையாக இருந்தாலும், எந்த ஒரு கதைக்குள்ளும் இயக்குநருக்கு நடந்த அல்லது பாதித்த சம்பவங்களின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்படி, தங்களைப் பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பல இயக்குநர்கள் புகழ்பெற்ற பல திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படி, உண்மைக் கதைகளை அடிப்படையாக வைத்து தமிழ் சினிமாவில் உருவான சில திரைப்படங்களின் பட்டியல் இது.  

காதல்

''தேயிலை எஸ்டேட் கொடுமை, பவாரியா கொள்ளையர்கள், காவல்துறை அட்டூழியம்.. 'ரியல் டூ ரீல்' தமிழ் சினிமாக்கள்!"

சாதாரண மெக்கானிக் முருகனுக்கும் ஒயின்ஷாப் ஓனரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் காதல். பல தடைகளைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் இருவரும், படத்தின் இறுதியில் சாதியின் கோரத்தால் பிரிந்துவிடுகிறார்கள். ஐஸ்வர்யாவுக்குத் தான் கட்டிய தாலியோடு பைத்தியமாகி வீதிகளில் அலைகிறான் முருகன். ஒருநாள், பைத்தியக்காரக் கோலத்தில் முருகனைக் கண்டு ஐஸ்வர்யா வெகுண்டு அழ, ஐஸ்வர்யாவின் கணவர் முருகனையும் தன் மனைவியையும் ஒருசேர அரவணைத்துக் கொள்வதோடு படம் நிறைவுபெறும். இப்படி ஒரு கனமான கதையை ஒரு ரயில் பயணத்தில் நிஜ ஐஸ்வர்யாவின் கணவர், இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் விவரிக்க... பாலாஜி சக்திவேல் மனதை வெகுவாகப் பாதித்திருக்கிறது. பின் அந்தக் கணவரின் அனுமதி பெற்று அதைக் 'காதல்' படமாக நமக்குத் தந்தார் பாலாஜி சக்திவேல். 

கல்லூரி

''தேயிலை எஸ்டேட் கொடுமை, பவாரியா கொள்ளையர்கள், காவல்துறை அட்டூழியம்.. 'ரியல் டூ ரீல்' தமிழ் சினிமாக்கள்!"

'இந்தக் கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல' - என்ற அறிவிப்புடன் தொடங்கும் 'கல்லூரி' திரைப்படம். ஆனால், அதன் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியிருக்கும். 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தர்மபுரியில் நிகழ்ந்த கலவரத்தில் பேருந்தில் வைத்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டு, அவர்கள் உடல் கருகிப் பலியானார்கள். அந்தச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இது. 'கல்லூரி'யைப் பார்த்தவர்கள் நிச்சயம் உடல் கருகி பலியான கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதாவை நினைத்து வருந்துவார்கள். நெஞ்சைத் தைக்கும் விதத்தில், உயிரோட்டமாக இப்படத்தின் க்ளைமாக்ஸைப் படமாக்கியிருப்பார் பாலாஜி சக்திவேல். 

விசாரணை

''தேயிலை எஸ்டேட் கொடுமை, பவாரியா கொள்ளையர்கள், காவல்துறை அட்டூழியம்.. 'ரியல் டூ ரீல்' தமிழ் சினிமாக்கள்!"

அப்பாவி தமிழகத் தொழிலார்களை அவர்கள் செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்த ஆந்திரா போலீஸ், அவர்களை அடித்துத் துன்புறுத்தினர். அதிலிருந்து தப்பித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார், தனது அனுபவங்களை ‘லாக்கப்’ என்ற பெயரில் நாவலாக எழுதினார். அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு 'விசாரணை' படத்தின் முதல் பாதியையும், நடந்த சில உண்மை சம்பவங்களை இரண்டாம் பாதியாகவும் வைத்து இப்படத்தை உருவாக்கினார் வெற்றிமாறன். 

பரதேசி

''தேயிலை எஸ்டேட் கொடுமை, பவாரியா கொள்ளையர்கள், காவல்துறை அட்டூழியம்.. 'ரியல் டூ ரீல்' தமிழ் சினிமாக்கள்!"

சுதந்திரத்துக்கு முன்பு 1930-களில் மதராஸ் மாகாணத்தில் தேயிலை எஸ்டேட் ஒன்றில் தொழிலாளர்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றிய உண்மையை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த 'ரெட் டீ' (தமிழில் 'எரியும் பனிக்காடுகள்') நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது, 'பரதேசி' திரைப்படம். அதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கொத்தடிமை சமூகத்தின் சரித்திரத்தை எளிமையாக, மிகவும் வலிமையாகப் 'பரதேசி'யில் பதிவு செய்தார் இயக்குநர் பாலா. 

தீரன் அதிகாரம் ஒன்று

''தேயிலை எஸ்டேட் கொடுமை, பவாரியா கொள்ளையர்கள், காவல்துறை அட்டூழியம்.. 'ரியல் டூ ரீல்' தமிழ் சினிமாக்கள்!"

1995 முதல் 2005 வரை பெங்களூரு - கும்மிடிப்பூண்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய ராஜஸ்தான் மாநில பவாரியா (படத்துக்காகப் 'ஹவாரியர்' என்று பெயர் மாற்றப்பட்டது) கும்பலைத் தமிழகக் காவல்துறையினர் சட்டத்தின் முன் நிறுத்திய உண்மைச் சம்பவத்தைத் தழுவி, கச்சிதமான த்ரில்லராக வெளியானது 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம். ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு டீட்டெயிலிங் காட்டியதோடு, காவல்துறையில் உள்ள யதார்த்தம், அரசின் மெத்தனம் , காவல்துறை அதிகாரிகளின் சாதனைகளைச் சொன்னதோடு நில்லாமல், அவர்களின் அன்றாட பிரச்னைகளையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். 

மேற்சொன்ன படங்கள் மட்டுமல்லாது, உண்மைச் சம்பவங்களைத் திரைமொழியாக்குவதில் புகழ்பெற்ற மணிரத்னத்தின் சில படங்கள் மற்றும் சமீபத்தில் வெளியான 'தடம்' திரைப்படம் மற்றும் குறிப்பிடத்தக்க படங்களான 'வழக்கு எண் 18/9', 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்', 'துப்பாக்கி முனை', 'அரவான்', 'கழுகு', 'குப்பி', 'வனயுத்தம்' போன்ற பல படங்கள் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படங்கள்தாம்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்களில் உங்கள் ஃபேவரைட் எது, ஏன்... கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யலாம் நண்பர்களே! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு