Published:Updated:

```இயக்குநர்' யோகி பாபு, நல்ல நடிகர் ஆகிட்டார்!'' - `தர்மபிரபு' முத்துக்குமரன்

```இயக்குநர்' யோகி பாபு, நல்ல நடிகர் ஆகிட்டார்!'' - `தர்மபிரபு' முத்துக்குமரன்

"எனக்கு முன்னாடியே பாபு சினிமாவுக்கு வந்துட்டார். 'யோகி' படத்துல அவர் நடிச்சதுல இருந்து 'யோகி பாபு' ஆகிட்டார். எனக்கு எப்போவுமே அவர் பாபுதான். தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சாலும், பழசை மறக்காத மனிதர். நாங்க ரூம் எடுத்துத் தங்கியிருந்த அதே வளரசவாக்கம் ஏரியாவுலதான், இப்போ அவர் வீடு வாங்கியிருக்கார்."

மிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. சினிமாவுக்கு வந்த குறைந்த நாள்களிலேயே எல்லா நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது, 'தர்மபிரபு' படத்தில் லீடு ரோலில் எமதர்மனாக நடித்திருக்கிறார் யோகி பாபு. இந்தப் படத்தின் இயக்குநர் முத்துக்குமரன், தனக்கும் யோகி பாபுவுக்குமான நட்பு குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

```இயக்குநர்' யோகி பாபு, நல்ல நடிகர் ஆகிட்டார்!'' - `தர்மபிரபு' முத்துக்குமரன்

''நானும் யோகி பாபுவும் கிட்டதட்ட 13 வருஷமா நெருங்கிய நண்பர்கள். சினிமாவில் நான் உதவி இயக்குநரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ, அவர் 'லொள்ளு சபா' நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநர். ரெண்டுபேரும் வளசரவாக்கம் ஏரியாவுல ஒரே ரூம்லதான் தங்கியிருந்தோம். அந்தச் சின்ன அறையில ஆறேழு பேர் அடைஞ்சு கெடப்போம். அப்போ எங்க ரூமுக்கு நிறைய சினிமா நண்பர்கள் வருவாங்க. எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சினிமா பற்றிப் பேசுவோம். எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சினிமாதான். 

தினமும் ஷூட்டிங் முடிஞ்சு ரூமுக்குத் திரும்புனா, நானும் யோகி பாபுவும் பல கதைகள் டிஸ்கஸ் பண்ணுவோம். பாபுவுக்கு நடிகர் ஆகணும்னு ஆசையில்லை; இயக்குநர் கனவுலதான் இருந்தார். அவர் பல கதைகள் சுவாரஸ்யமா சொல்வார். இப்போ நாங்க உருவாக்கியிருக்கிற 'தர்மபிரபு' படத்தின் கதையும் அப்போ டிஸ்கஸ் பண்ண கதைகள்ல ஒண்ணுதான். இந்தப் படத்தை செம காமெடியா பண்ணணும்னு ரெண்டுபேரும் முடிவெடுத்திருந்தோம்" என்றவர், தொடர்ந்தார்.

```இயக்குநர்' யோகி பாபு, நல்ல நடிகர் ஆகிட்டார்!'' - `தர்மபிரபு' முத்துக்குமரன்

"ஆனா, எனக்கு முன்னாடியே பாபு சினிமாவுக்கு வந்துட்டார். 'யோகி' படத்துல அவர் நடிச்சதுல இருந்து 'யோகி பாபு' ஆகிட்டார். எனக்கு எப்போவுமே அவர் பாபுதான். தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சாலும், பழசை மறக்காத மனிதர். நாங்க ரூம் எடுத்துத் தங்கியிருந்த அதே வளரசவாக்கம் ஏரியாவுலதான், இப்போ அவர் வீடு வாங்கியிருக்கார். நாங்க டீ குடிச்ச டீக்கடை அங்கேயேதான் இருக்கு. அந்தப் பக்கம் கார்ல போறப்போ, பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துட்டுப் போகும். பாபு சினிமாவுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்த காலத்துல பலபேர் அவருடைய உருவத்தைக் கேலி பண்ணியிருக்காங்க. அப்போ கொஞ்சம் ஃபீல் பண்ணிப் பேசுவார். சினிமாவுக்கு வந்த பிறகு, அந்த நெகட்டிவ் கமென்ட்ஸ் எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சுட்டார். ஒரு விஷயத்துல நிறைய அடிபட்டா, மெச்சூர்டு ஆகிடுவோம்னு சொல்வாங்கல்ல... யோகி பாபு அப்படித்தான். இன்னைக்கு அவருடைய உருவகேலியை அவர் பெருசா எடுத்துக்கிறதில்லை" என்ற முத்துக்குமரன், தனது படங்கள் குறித்துப் பேசினார்.

"என் முதல் படம் 'கன்னிராசி'. அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகல. கதை பாபுவுக்குத் தெரியும். நான் எந்தக் கதை எழுதினாலும், பாபுகிட்ட சொல்லிடுவேன். இந்தப் படத்திலும் பாபு ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கார். இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல பேசிக்கிட்டு இருந்தப்போதான், 'நம்ம எமதர்மன் கதையை இப்போ பண்ணலாமா'னு கேட்டார் பாபு. நானும் உடனே ஓகே சொல்லிட்டேன். முழுக் கதையும் ரெடியான பிறகு அவர்கிட்ட சொன்னேன். படத்துக்குப் பெரும்பாலான வசனங்களை பாபுதான் எழுதியிருக்கார். ஸ்பாட்ல காட்சிக்குத் தகுந்தமாதிரி வசனங்களைப் பேசி நடிக்கிறதுல கில்லாடி அவர். 'தர்மபிரபு' செம என்டர்டெயின்மென்ட் படமா இருக்கும். இன்றைய அரசியல் சூழலில் தப்பு பண்றவங்களுக்கு எந்த மாதிரியான தண்டனைகளைக் கொடுக்கலாம்னு ஜாலியா சொல்லப்போற படம் இது" என்று முடிக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன்.