Published:Updated:

`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!

அலாவுதின் ஹுசைன்
`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!
`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!

தயாரிப்பாளர் சங்கத்தில் தனி அலுவலருக்கு உதவிட பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!

சங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க மாவட்டப் பதிவாளர் அந்தஸ்தில் இருக்கும் சேகர் என்ற  சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு.

`பாரதிராஜா தலைமையில் தற்காலிக குழு' - தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளை முறைப்படுத்த அரசு முடிவு!

இந்த நிலையில், சங்கத்தின் நடவடிக்கைகளிலும், மேம்படுத்துவதிலும் தனி அலுவலர் சேகருக்கு உதவியாய் இருக்கும்பொருட்டு, தமிழக அரசு சார்பில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ADHOC கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன் என ஒன்பது நபர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதுகுறித்து adhoc கமிட்டி உறுப்பினர் தயாரிப்பாளர் சிவாவிடம் பேசுகையில், ``இந்த தற்காலிக குழு அமைத்த செய்தி தற்போதுதான் வந்தது. சங்கத்தின் அலுவல்களில் தனி அலுவலருக்கான உதவிகளைச் செய்து தருவோம். இந்தக் குழுவில் முன்னாள் சங்க நிர்வாகிகள் அல்லாத ஆள்களும் இருக்கின்றனர். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு காத்திருக்கின்றேன் " என்றார். 

Vikatan

அலாவுதின் ஹுசைன்