Published:Updated:

``அழுகை வந்திடும்; என் பாடல்களைக் கேட்க மாட்டேன்!"- பாடகி சுனந்தா கம்பேக்

கு.ஆனந்தராஜ்

`மன்னவா மன்னவா' பாடல் புகழ் பின்னணிப் பாடகி சுனந்தா, மீண்டும் சினிமாவில் பாடியிருக்கிறார். தற்போது ஆக்டிவாக பாடத் தயாராகியிருப்பவர், தன் ரீ-என்ட்ரி பயணம்குறித்து உற்சாகமாகப் பேசுகிறார்.

``1990-களில் பிஸியா பாடிட்டிருந்தேன். இளையராஜா சார் இசையில்தான் அதிகம் பாடினேன். அவர், எனக்கு நிறைய நல்ல நல்ல பாடல்களைக் கொடுத்தார். பல மொழிகளில், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கேன். சினிமா உலகத்தின் ட்ரெண்டு மாறிடுச்சு. அதனால, எனக்கு பாடல் வாய்ப்புகள் வருவது குறைஞ்சுடுச்சு. `எனக்கு வாய்ப்புக் கொடுங்க'ன்னு நானே போய் வாய்ப்பு கேட்கவும் கூச்சப்பட்டு அமைதியா விட்டுட்டேன். அதனால, குடும்பத்தைக் கவனிச்சுக்கிட்டு, மேடைக் கச்சேரிகளில் மட்டும் பாடிகிட்டிருந்தேன்.  பிஸியா வேலை செய்துட்டு, திடீர்னு வாய்ப்புகள் குறைஞ்சுடுச்சுனா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். நானும் வருத்தப்பட்டிருக்கேன். நான் பாடிய ஹிட் பாடல்களைக் கேட்டால், பழைய நினைவுகளால் கண்கலங்கிடுவேன். அதனால, என் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்துடுவேன்.

``அழுகை வந்திடும்; என் பாடல்களைக் கேட்க மாட்டேன்!"- பாடகி சுனந்தா கம்பேக்

நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதில்லை. அதனாலும் என்னைப் பத்தி சினிமா துறையினருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனா, தொடர்ந்து இசை கத்துகிட்டே இருக்கேன்.  இப்போ, மலையாளத்தில் மூணு பாடல்கள் பாடியிருக்கேன். அவை ரிலீஸாகிட்டால், வாய்ப்புகள் அதிகரிக்கும்னு நம்பிக்கையிருக்கு. தமிழ் சினிமாவிலும் முன்புபோல பாடணும்னு ஆசைப்படறேன்" என்கிறார், சுனந்தா.
 
Vikatan

கு.ஆனந்தராஜ்