Election bannerElection banner
Published:Updated:

``நான் கஜினி முகமது மாதிரி!" - `அயோக்யா' ரிலீஸ் பிரச்னை குறித்து விஷால்

ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளி வருவதாகயிருந்த `அயோக்யா’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று  சென்னையில் `இரும்புத்திரை-2‘ ஷூட்டிங்கில் இருந்த விஷால், படத்தை ரிலீஸ் செய்வதற்காக மேற்கொண்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன.

``நான் கஜினி முகமது மாதிரி!" - `அயோக்யா' ரிலீஸ் பிரச்னை குறித்து விஷால்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால், ``ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் நான் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு எனது `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகமது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன். எனது பயணம் தொடரும்” எனப்பதிவிட்டிருக்கிறார்.

``நான் கஜினி முகமது மாதிரி!" - `அயோக்யா' ரிலீஸ் பிரச்னை குறித்து விஷால்

70 நாள்கள் நடத்தப்பட வேண்டிய ஷூட்டிங் 100 நாள்கள் வரை இழுத்தடிக்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட 3 கோடி ரூபாய் அதிகப்படியான செலவை விஷால் திருப்பித் தரவேண்டும் எனத் தயாரிப்பாளர் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை படத்துக்காக ஃபைனான்ஸ் செய்த ஒருவருக்கு நேரடியாகத் தந்து விடவேண்டும் எனவும், அப்படித் திருப்பி தரவில்லையென்றால் படம் வெளியாவதில் சிக்கல் எனவும் விஷாலிடம் தயாரிப்பாளர் மது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  ஏற்கெனவே, ஏப்ரல் 19ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த `அயோக்யா' மே 10ம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு