Published:Updated:

``14 வருட அனுபவம்... பெர்சனல்னாலே பதறுது!" - `அருந்ததி' அகிலா

வே.கிருஷ்ணவேணி

`அருந்ததி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை அகிலா, அந்த சீரியல் குறித்தும், நடித்துக்கொண்டிருக்கும் பிற சீரியல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

``14 வருட அனுபவம்... பெர்சனல்னாலே பதறுது!" - `அருந்ததி' அகிலா
``14 வருட அனுபவம்... பெர்சனல்னாலே பதறுது!" - `அருந்ததி' அகிலா

ன் டிவி-யில் ஒளிபரப்பான `தென்றல்', `திருமதி.செல்வம்', `கோலங்கள்', `ரோஜா', `அஞ்சலி', `இளவரசி', `அபூர்வ ராகங்கள்', `கல்யாணப் பரிசு' போன்ற பல சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர், அகிலா. சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜி தமிழ் தொலைக்காட்சிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சீரியல் இயக்குநர் பிரதாப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது, ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் `முள்ளும் மலரும்'  சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இனி, திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் `அருந்ததி' சீரியலிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அகிலா. அவரிடம் பேசினேன்.

``14 வருட அனுபவம்... பெர்சனல்னாலே பதறுது!" - `அருந்ததி' அகிலா

``ஜி தமிழ் `முள்ளும் மலரும்' சீரியலில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும் வேளையில் எனக்கு `அருந்ததி' வாய்ப்பு வந்தது. பேய்க் கதை என்பதால், எனக்கு விருப்பம் அதிகமாக இருந்தது. சீரியலின் இயக்குநர் ஜீவா. பேய் வீட்டின் முக்கிய ஆளாக நான் இருக்கிறேன். வரும் திங்கட்கிழமை முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கடவுள் பக்தி கொண்ட ஒரு பெண்ணுக்கு, தீய சக்தி கொடுக்கும் பிரச்னைகள்தான் கதை. இதில், திகில், காதல், உறவுகள் எனப் பல விஷயங்கள் அடங்கியிருக்கு. கேரளாவைச் சேர்ந்த ஒரு புதுமுக நடிகை அறிமுகமாகிறார்.'' என்றவரிடம், ``ஒரு கதை இப்படி இருந்தால்தான் நடிப்பேன் என்று ஏதேனும் வரைமுறைகள் வைத்திருக்கிறீர்களா?!" எனக் கேட்டதற்கு, 

``14 வருட அனுபவம்... பெர்சனல்னாலே பதறுது!" - `அருந்ததி' அகிலா

``கண்டிப்பாக! கதையில் எனக்கான முக்கியத்துவம் பார்ப்பேன். மற்றபடி, மக்கள் விரும்பும் கதைகளில் நடிப்பதுதான் என் விருப்பம். அதையும் மீறி சீரியலில் எனக்குக் கொடுக்கப்படும் கேரக்டர் எப்படிப்பட்டதாக இருந்தாலும், என்னால் முடிந்தளவுக்கு என் நடிப்புத் திறமையைக் காட்ட நினைப்பேன்." என்றார். 

``சினிமாவில் ஏன் உங்களைப் பார்க்க முடியவில்லை?''

``என் முதல் படம் சிம்பு, ஜோதிகா நடித்த `சரவணா'. பிறகு, `பொல்லாதவன்', `பிள்ளையார் தெரு கடைசி வீடு', `அரசாங்கம்', `திருவண்ணாமலை', `அரண்மனை' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய சீரியல்களில் கமிட் ஆனதால், தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போதும், நல்ல கேரக்டர்கள் அமையும்போதும் கண்டிப்பாக சினிமாவிலும்  நடிப்பேன்.''

``புதிதாக ஆரம்பிக்கப்பட்ட `ஐடியா செல்லர்' தயாரிப்பு நிறுவனம் பற்றி?''

``ரொம்ப  நல்லபடியா போயிட்டிருக்கு. வசந்த் டிவி-யில் கலர்ஃபுல்லான பாடல்களைக் கொண்ட `தேனருவி' என்ற வீக் எண்டு ஸ்பெஷல் சனி மற்றும் ஞாயிறு காலை 8 மணி முதல் 9.30 மணிவரை ஒளிபரப்பாகிறது. அன்று இரவே 10 மணி முதல் 11 வரை பிளாக் & வொய்ட் பாடல்களும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சிக்கான தொகுப்பாளர் மற்றும் புரொடியூசர் நான்தான். அடுத்து கடந்த 5-ம் தேதி முதல் `மணி மணி மணி' என்ற கேம் ஷோ ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது." 

``14 வருட அனுபவம்... பெர்சனல்னாலே பதறுது!" - `அருந்ததி' அகிலா

``14 வருட அனுபவத்தில் மீடியா துறை எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?''

``ஸ்கூல் படிக்கும்போதே மீடியாவுக்கு வந்துவிட்டேன். 2005-ம் ஆண்டிலேயே நடிக்க வந்துவிட்டேன். நிறைய மேடு, பள்ளங்களைத் தாண்டி வந்தாச்சு. ஆரம்ப காலங்களில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன். எந்த பெர்சனல் விஷயங்களையும் வெளியில் சொல்ல பயமாக இருக்கிறது. அது எப்படி, எந்த விதமாக மாறுமோ என்ற பயம் இருக்கிறது. அதனாலேயே என் குடும்ப விஷயங்களை வெளியில் பகிரப் பயப்படுகிறேன்.''

``டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?''

``நான் முதலில் நடித்த படம் `சரவணா'. அவ்வளவு வேகமாக நடித்து முடித்துக்கொடுப்பார், சிம்பு. தனுஷ் நேச்சுரலான நடிகர். அவர் நடிக்கிறதே தெரியாது. விஜயகாந்த் சார், அவ்வளவு கேரிங்கான ஆள். அர்ஜூன் படத்தில் நடிக்கும்போது, ரொம்பவே வசதியாக உணர்ந்திருக்கேன். சுந்தர்.சி சார் பற்றி சொல்லவே வேண்டாம். ஷூட்டிங் போற மாதிரியே இருக்காது. பிக்னிக் போறமாதிரி இருக்கும்." என்கிறார், அகிலா.   

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.