Published:Updated:

``சம்பளத்துக்குப் பதிலா போயஸ் கார்டன்ல வீடு கேட்டேனா?!" - ஜெயம் ரவி

``சம்பளத்துக்குப் பதிலா போயஸ் கார்டன்ல வீடு கேட்டேனா?!" - ஜெயம் ரவி
``சம்பளத்துக்குப் பதிலா போயஸ் கார்டன்ல வீடு கேட்டேனா?!" - ஜெயம் ரவி

``நிறைய வெப் சீரிஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அது ஒரு அருமையான பிளாட்ஃபார்ம். இந்தியாவுலதான் சீரியல், சினிமான்னு பிரிச்சுப் பார்க்கிறோம். ஃபாரீன்ல எல்லாம் அப்படியில்லை. இன்னைக்கு `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'தான் உலகம் முழுக்கப் பேசிக்கிட்டு இருக்காங்க. அப்படி ஒரு தரமான படைப்பை நம்மாலும் எடுக்க முடியும்."

விரைவில் 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்டவிருக்கிறார், நடிகர் `ஜெயம்' ரவி. அவருடன் நிகழ்ந்த ஒரு சாட்டில் கிடைத்த பதில்கள்...

`` `ஜெயம்' படத்துக்குப் பிறகு இத்தனை படங்களில் நடிச்சுட்டீங்க. இன்னும் ஏன் `ஜெயம்' அடைமொழி?" 

``அது ஃபிக்ஸ் ஆகிடுச்சு, வேறொண்ணும் இல்லை. வேணும்னா, `தனி ஒருவன்' ரவினு கூப்பிடுங்க. ஏன்னா, எனக்கே என்னை யாருன்னு காட்டுன படம் இது. எனக்கு என் அண்ணன்தான் நிறைய ஹிட் கொடுத்திருக்கார். அவர் படங்கள்ல எனக்கு மட்டும் நல்ல பெயர் கிடைக்கும். ஆனா, `தனி ஒருவன்' அண்ணனுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நாங்க நினைச்சதெல்லாம் நடந்த ஒரு படம்னா, அது இதுதான்."

``சம்பளத்துக்குப் பதிலா போயஸ் கார்டன்ல வீடு கேட்டேனா?!" - ஜெயம் ரவி

`` `தனி ஒருவன் 2' எப்போ வரும்?" 

``என்னுடைய 25-வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்பநாளா பண்ணணும்னு நினைச்ச விஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம்மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2' பண்ணலாம்னு சொல்லியிருக்கார்." 

`` `பேராண்மை' உங்களுக்கு ஒரு அரசியல் விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். அதையெல்லாம் ஃபாலோ பண்றீங்களா?"

``என்னை எனக்குக் காட்டிய படங்களில், `பேராண்மை'யும் ஒண்ணு. இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமை. மத்தபடி, நானும் ஒரு அரசியலை ஃபாலோ பண்றேன். அந்த அரசியலுக்குள்ளதான் இருக்கேன். அதுக்காகத்தான் தேர்தல்ல ஓட்டு போடுறேன். நான் எந்தக் கட்சியிலும் இல்லை; தனிப்பட்ட நபர் யாரையும் ஆதரிக்கலை." 

``வெப் பிளாட்ஃபார்ம்களில் திரைத்துறையினர் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்காங்களே?!"

``நிறைய வெப் சீரிஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அது ஒரு அருமையான பிளாட்ஃபார்ம். இந்தியாவுலதான் சீரியல், சினிமான்னு பிரிச்சுப் பார்க்கிறோம். ஃபாரீன்ல எல்லாம் அப்படியில்லை. இன்னைக்கு `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'தான் உலகம் முழுக்கப் பேசிக்கிட்டு இருக்காங்க. அப்படி ஒரு தரமான படைப்பை நம்மாலும் எடுக்க முடியும். தவிர, சினிமாவுக்கு வர்றது கஷ்டமா இருக்கு. வெப் பிளாட்ஃபார்ம்ல பலர் தங்களை அடையாளப்படுத்திக்கிறாங்க. வேலை வாய்ப்பும் அங்க அதிகமா இருக்கு. `டிக் டிக் டிக்' படத்தை வெப் சீரிஸா மாத்தி எடுக்கலாமானு என்கிட்ட கேட்டாங்க. நான்தான், மறுபடியும் அதைப் பிடிச்சு தொங்கவேண்டாமேனு விட்டுட்டேன். மத்தபடி, எனக்கும் அந்த பிளாட்ஃபார்மைப் பயன்படுத்திக்கிற ஐடியாஸ் இருக்கு."  

``சம்பளத்துக்குப் பதிலா போயஸ் கார்டன்ல வீடு கேட்டேனா?!" - ஜெயம் ரவி

``ஒரே நிறுவனத்துக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிச்சுக் கொடுத்து, சம்பளமா போயஸ் கார்டன்ல ஒரு வீடு கேட்டதா ஒரு செய்தி வந்ததே?" 

``என்னைப் பற்றிய பெரிய வதந்தி இது. எங்கே இருந்து இப்படி பூதாகரமா கெளம்புச்சுனு தெரியலை. வேலைக்குப் போனா சம்பளம் வாங்குற மாதிரிதான் என் 15 வருட சினிமா பயணத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கேன். எல்லோருமே தவணை முறையிலதான் சம்பளம் கொடுத்தாங்க. அந்தச் சம்பளத்துல நானே சொந்தமா ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். எதுக்கு எனக்கு இன்னொரு வீடுன்னு எனக்கே தெரியல. என் அப்டேட்ஸ் என்ன படம் பண்றேன், அடுத்த அப்டேட் என்ன... எல்லாம் ட்விட்டர்ல வரும்." 

``ஃபேமிலிமேன் `ஜெயம்' ரவி எப்படி?" 

``எல்லா கணவர்கள் மாதிரிதான். மனைவியின் ஆக்‌ஷனுக்கு, நாம ரியாக்‌ஷன் கொடுக்கணும். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பிரச்னைதான் பாஸ். வீட்டுல மனைவி சொல்லே மந்திரம்! நாம பிஸியா இருந்தாலும், வீட்டைப் பார்த்துக்கிறது அவங்கதான். அதனால, எப்போவுமே அவங்ககிட்ட சரண்டர் ஆகிடுறது. இப்போதைக்குப் பசங்கதான் எனக்கு டைம்பாஸ். சேர்ந்து விளையாடி நானும் எதையாச்சும் உடைப்பேன், சரியான டோஸ் விழும். கணக்குல நான் 44 மார்க்தான் வாங்குனேன். சமயத்துல, கணக்கு புக்கை நீட்டி `இதைச் சொல்லித்தாப்பா'னு பையன் கேட்குறப்போ, பிபி ஏறிடுது.

மூத்தவன் ஆரவ் என்கூட நடிச்சான், இப்போவும் நடிக்கிறான். அவனைப் பார்த்து `அவன் மட்டும் நடிக்கப்போறான், நானும் போவேன்'னு சொல்றான், சின்னவன் அயான். தவிர, எனக்கு இன்னொரு மூத்த பையன் இருக்கான். அண்ணன் மகன் பிரனவ் மோகன். அவனும் நடிக்க வந்திருக்கான். ஏதாச்சும் ஒண்ணு சொன்னா, உடனே முடிக்கிற துறுதுறு ஆளு அவன். எனக்குப் போட்டியா வீட்டுல இத்தனைபேர் இருக்காங்க பார்த்தீங்களா?!" 

இவை தவிர, மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு இந்த வார ஆனந்த விகடன் இதழில் விரிவாகப் பதில் சொல்லியிருக்கிறார், `ஜெயம்' ரவி. ஆனந்த விகடன் இதழை சப்ஸ்கிரைப் செய்து படிக்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்! 

அடுத்த கட்டுரைக்கு