Published:Updated:

`என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய நாள்; உங்களுக்கு நன்றி!' - நடிகர் தனுஷ் உருக்கம்

அலாவுதின் ஹுசைன்

தனது சினிமா கரியரில் 17 ஆண்டுகள் தாண்டி ஒரு நடிகனாய், ஒரு இயக்குநராய், ஒரு பாடகனாய், ஒரு கலைஞனாய் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட தனுஷ். தனது முதல் படமான `துள்ளுவதோ இளமை' வெளியான நாளான இன்று, ரசிகர்கள் அவருக்காக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

`என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய நாள்; உங்களுக்கு நன்றி!' - நடிகர் தனுஷ் உருக்கம்

`துள்ளுவதோ இளமை' 2002-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி ரிலீஸானது. எனது வாழ்க்கையை மாற்றிய நாள் அது. அதுக்குள்ள 17 வருடங்கள் ஓடிடுச்சா என்ன. நடிகனாக்கூட தாக்குப் பிடிப்பேனான்னு தெரியாம இருந்த ஒரு சிறு பையனுக்கு உங்க மனசுல இடம் கொடுத்த நாள் இது. என் மேல நீங்க வச்ச அன்புக்கும் நம்பிக்கைக்கும், என்னோட தோல்விகளையும், வெற்றிகளையும் என்கூட துணையா இருந்த உங்களுக்கு என் அடிமனசுல இருந்து நன்றி சொல்றேன். நான் சிறந்த மனிதன் கிடையாது... உங்கள் அன்பும் ஆதரவும் என்னால் முடிந்த அளவுக்கு சிறந்தவானாய் இருக்க உந்துகிறது. 

 நன்றி நன்றி" எனப் பதிவிட்டிருந்தார்.

தற்போது, தனுஷ் வெற்றிமாறனுடன் `அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் `ராட்சசன்' ராம் குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.    

Vikatan